(சினிமா,வேதம்,அரசியல்,விளையாட்டு, என் வாய் என் தீர்ப்பு) எழுத்துக்கள் பிழைக்கலாம்; கருத்துக்கள் அல்ல...
Tuesday, 27 August 2013
Friday, 26 July 2013
பாட்டு குதிரடா ... பட்டு குதிரடா...
காதல் பட்டு குதிரடா , நான் பச்ச குதிரட ,
இங்க தாண்டி தாண்டி தான் முத்தேடுகிறன்டா
நெஞ்சம் வேறுட அதில் வஞ்சம் நூறுட
காதல் காட்டி காட்டியே இங்க கூத்தடிகிறண்டா
காசு ஆறுட அந்த காலம் வேறுட
கண்ணா மூடித்தான் இங்க களவுனடத்துடா
நேசமில்லட ஊரில் பாசமில்லட
வேஷம் போட்டுதான் இங்க வாழ்க ஓட்டுடா
டப்பு உண்டுன்னா இங்க மப்பு காணுண்ட
மனசமாத்தி தான் அது மாய காட்டுண்டா
காதல் பட்டு குதிரடா , நான் பச்ச குதிரட ,
இங்க தாண்டி தாண்டி தான் முத்தேடுகிறன்டா
பூவிருகுதட அதில் தேனிருக்குதட
தேடி போனாதான் முள்ளிருகுதடா
குருவி இல்லடா இங்க குப்பயுண்டுட
மன ஊடலில்லட சரி கூடலுண்டுடா
காதல் பட்டு குதிரடா , நான் பச்ச குதிரட ,
இங்க தாண்டி தாண்டி தான் முத்தேடுகிறன்டா
குப்பதொட்டிட அதில் சப்பு கொட்டுண்ட
கூடிவந்து குட்டி எல்லாம் கூத்து கட்டுண்டா

Teamwork
city chance
Saturday, 22 June 2013
கொள்ளையர்களின் சங்கிலி
வியாபாரம் என்பது ஏமாற்றுவதுதான்; வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதுதான் வியாபாரிகளுக்கு இலாபம் தரும், ஆனால் ஏமாற்றுவதை வியாபாரமாக்கி அடித்தட்டு மக்களை ஆசை காட்டி மேஷம் செய்யும் தந்திரமே கொள்ளையர்களின் சங்கிலி.
இந்த சங்கிலிதொடர் கொள்ளையில் இணைக்கபடுவது நம்முடைய நண்பர்களின் மூலமே. பல வருடங்களுக்கு முன் வகுக்கப்பட்ட இந்த திட்டம். காலத்திற்கு ஏற்றபடி பல பரிமாணங்களை எடுத்து வருகிறது.எந்த பரிமாணமாக இருந்தாலும் ஒரே இலக்கைத்தான் முன்வைக்கும் "குறிகிய காலத்தில் கோடிஸ்வரன் ".
பத்து வருடங்களுக்கு முன் முதல்முறையாக என்னை சந்தித்த இந்த சங்கிலி அதன்பின் பல பரிமாணங்களாக என்னை சந்தித்துவருகிறது. இதில் எமாறுபவபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது. நான் பார்த்த இந்த கொள்ளை சங்கிலியின் சில பரிமாணங்களை இங்கு பகிர்கிறேன்.
1997
உறுப்பினராக 2,000 k
வீட்டு உபயோக பொருள்களின் பரிமாணத்தில் இந்த கொள்ளை சங்கிலியை முதலில் சந்தித்தேன் .
2000 ரூபாய் கொடுத்து சங்கிலியில் இருக்கும் ஒருவரின் கீழ் உறுப்பினர் ஆக வேண்டும். அவர் நமக்கு இரண்டு வீட்டு உபயோக பொருள் விற்பதற்க்காக கொடுப்பார். அதை விற்கவேண்டும். வாங்கும் நபரை மூளை சலவை செய்து நமக்கு கீழ் இரண்டு நபர்களாக சேர்க்க வேண்டும். அப்போது நாம் முதலில் கொடுத்த 2000 ரூபாயில் பாதி அதாவது 1000 நமக்கு கிடைத்துவிடும். அவர்களும் இதைபோல் செய்யும் போது நமக்கு கீழ் 6 நபர்கள் வருவார்கள் .
இங்கு முதல் காட்ட படுவது மட்டுமே வியாபாரம் அதன் பின் மற்றவர்களை மூளை சலவை செய்து எப்படி நமக்கு கீழ் இணைப்பது, நாம் எப்படி பணம் சேர்ப்பது என்ற களவுபடம்தான்.
மூளை சலவை செய்வதற்காக கையாளப்படும் விதிகள்:
1.மிகுந்த மரியாதையுடன் அழைப்பது.
(சார் ,ஜி ,.....)
2.ஆடையில் ஒரு உயர்தர மாயையை ஏற்ப்படுத்துவது .
(டை அணிவது, சூ அணிவது ,...)
3.தான் வேகமாக வளர்வதாக பொலி ஆவணம் கட்டுவது.
(பேங்க் இருப்புத்தொகை, விலையுயர்ந்த பொருள்களின் உரிமை,...)
4.இடைவிடாமல் புன்கையுடன் பேசுவது.
5.சிந்திக்கவிடாமல் காய் நகர்த்துவது.
(போசும் போது அவர்களின் சிந்தனைகளை உகிப்பது )
6.பணத்தாசை உக்குவிப்பது.
(அடுத்தவர்களுடன் ஒப்பிட்டுவது )
கொள்ளை சங்கிலியின் சூத்திரம்: 50%
A +2000+4000+4k
B - 2000 +2000+ 2k C -2000+2000+2k
1b -2000+1k 2b -2000+1k 1c-2000+1k 2c -2000+1k
1ba -2k 1bb -2k 2ba -2k 2bb-2k 1ca-2k 1cb -2k 2ca-2k 2cb-2k
1ba to A +500 ;(1ba+1bb+2ba+2bb+1ca+1cb+2ca+2cb) =4k
1ba to B +500 ;(ba+1bb+2ba+2bb)= 2k
1ba to 1b+500 ;(ba+1bb)=1k
to be continued.....
சூத்திரம் ஒன்றுதான் காலத்திற்கேற்ப ஆரம்ப பரிமானம்தான் மாறுபடுகிறது.
2000
ஆன்லைன் கொள்முதல்
உறுப்பினராக 4,000 k
உறுப்பினராக 4,000 k
2005
பெண்களின் அலங்கார பொருள்கள் (லிப் ஸ்டிக்,... )
உறுப்பினராக 5,000 k
2007
கல்வி புத்தகங்கள் மற்றும் ஆன்லைன் கல்வி
உறுப்பினராக 6,000 k
2010
ஹெல்த் போர்டின் பவுடர்ஸ்
உறுப்பினராக 8,000 k
2012
பிஸ்னஸ்மேன்
உறுப்பினராக 10,000 k
உறுப்பினராக 10,000 k
பாதிக்க பட்டவர்கள் ஏராளம் ......
Sunday, 26 May 2013
திரைக்காணா கிறுக்கல்கள் பக்கம் 4
பல கதைகருகள் மனதில் உதித்தபோதும் அதை திரைகதை ஆக்குவதில் இயலாமை தொடர்ந்து இருந்து வருகிறது. அந்த கதைகளின் சாயல் பின்னாளில் வரும்படங்களில் தெரிகிறது. அதுபோலவே சில திரைகதை யுத்திகளும். அப்படி மனதில் பட்ட ஒருகதையை திரைகதை ஆக்கி பார்க்கலாம் என்று முயற்சிக்கிறேன். கதையமைப்பில் பல பட தாக்கங்கள் தெரியலாம்.
தலைமுறை
answer me
கதைகரு :
"எல்லா குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவன் நல்லவன் ஆவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே ..."
கதைசுருக்கம்:
நமது இந்திய சட்டபடி பதினெட்டு வயதுக்கு குறைவான மனிதன் குற்றம் புரியும்போது தண்டஇலிருந்து தப்பிக்க வயதே காரணமாகிறது. அப்படி பட்ட பதினெட்டு வயதுக்கு குறைவானவர்கள் இன்றயநிலையில் செய்யும் தவறுகள் மிகபோரியபதிப்பை ஏற்படுத்துகின்றன.
தொழினுட்பத்தின் உதவியுடன் இவர்கள் செய்யும் அக்கிரம்க்களால் பதிக்கபடுவபவர்கள் ஏராளம், இதற்கு முக்கிய காரணமாக தொழில்நுட்பம் கருதபடுகிறது. ஆனால் உண்மை அதுவல்ல, தொழினுட்பம் இல்லது காலத்தில் கண்டுபிடிக்கபட்ட கத்தி எப்படி நன்மையையும், தீமையும் தருகிறதோ; அதுபோலவே இந்த புதிய தொழில் நுட்பங்களும். ஆகையால் தொழினுப்பத்தின் மேல் பழியை போட்டு பெற்றோர்கள் தப்பித்து கொள்ள வேண்டாம்.
ஒரே தலைமுறையை இரு கூட்ட நண்பர்கள் அவரவர் விரும்பிய படி வாழமுயல்கின்றனர். அவர்களின் வயது பதினெட்டை எட்டவில்லை......
ஒரே தலைமுறையை இரு கூட்ட நண்பர்கள் அவரவர் விரும்பிய படி வாழமுயல்கின்றனர். அவர்களின் வயது பதினெட்டை எட்டவில்லை......
திரைகதை:
ஆரம்பக்காட்சி
- துக்கில் தொகிய கல்லுரிமாணவி.-
(இருண்ட அறை தூக்கில் தொங்குவாதொங்குவதற்காக தயாராகும் ஒரு இளம்பெண். கல்லுரி சீருடை அணிதிருக்கிறாள் .)
அங்கும் இங்கும் நகரும் மாணவி, கையில் தென்பட்ட தன் துப்பட்டாவில் கவனம் செலுத்த ---
(மூன்று புகைப்பட கோணங்கள் ) -
1.துப்பட்டாவில் முடிச்சி பின்னுதல்
2 துப்பட்டாவை மின்விசிரியுடன் இணைதல்
3 துக்கில் தொகிய இளம்பெண் உடல்
தலைப்புகட்சிகள் :
செய்தி தாளில் செய்திகள் துக்கில் தொகின்னாள் கல்லுரிமாணவி காதல் தோல்வியா போலிஸ் விசாரணை .
*பழைய செய்திதாள் செய்தி தலைப்பாகிறது*
வருடங்கள் மாறுவதும் குற்றங்களின் தலைமுறை மாறுவதும் தலைப்பு காட்சியில் செய்தித்தாள் செய்தியாக வந்துபோகிறது )
நடிகையின் ஆபாச படம் இண்டர்நெடில் மாபின் செய்யபட்டதா
பயோ ஆயுத்தம் தயாரித்த மாணவன் கைது.
தொடரும்....
இப்படியும் வைக்கலாம் திரைப்பட தலைப்பு :
குற்றம் புரிந்தவன் ....,வைரம்....,சரண் ....,
கர்ஜனை .....,வதம் ......,பூரட்டாசி ...., அழகே ....,விழியில் விழுந்தவள் ....,
அன்பானவள்... ஆயிரம்புஷ்பம்....., கடகம் ....,வக்கிரம்...,கேம் பாள் .....,
தக்காணம்...,
பன்ச் கண்ணா பன்ச் :
"ஆம்பளனு காட்ட குழந்த பெத்துகிரிய, நீ ஆம்பளன அத வளதுகட்டனும்."
"ஆறுவயசிலையே அம்பானினு நினைகிறிங்க, ஆறு வயசில அம்ப்பானி யாருன்னு நினைகிறிங்களா "
"எப்படியும் வாழ்ந்துகோ உன்வாழ்க்கைய என் வாழ்க்கைல இல்ல ."
குறிப்பு: "அறிந்ததை எழுதுவதில்லை, அறிந்து கொள்ளுவதர்க்காக எழுதுவது
ஒருவருடத்தில் முடிந்து விடும் என்ற நம்பிக்கையடன் ...."
Sunday, 21 April 2013
திரையுலகின் தீவிரவாதம்
மதங்களை குறிவைத்து கலைஞர்கள் படையெடுப்பது இப்போது அதிகரித்து வருகிறது இதற்க்கு காரணம் எளிதில் விளம்பரம் கிடைக்கும் என்பதல அல்லது
கலை என்றபெயரில் செய்யும் திவிரவதமா கலை வளரவேண்டும். அதற்காக ஒரு சமுதயத்தையே; அதன் நம்பிக்கையையே குழிதோண்டி புதைக்கும் படைப்புகள் அளிக்கப்படவேண்டும், ஆனால் அதற்காக உண்மைகளை உடைக்கும் உழைப்பாளிகளின் படைப்புகளை அரசியல் லாபத்திற்காக உரசி பார்ப்பது தடுத்து நிறுத்தபடவேண்டும்.
பாலா தன் படங்களில் ஒரு தாக்கத்தை ஏற்ப்படுத்துவர் என்றபோதும் பரதேசி அதையும் மீறி ஒரு வரலற்று சுவடாக உலக சினிமாவில் நிற்கும் நடிகர்களை கதாபாத்திரங்களாக மாற்றுவது பாலாவின் சிறப்பு . படம் பார்த்தபின்பு மக்கள் மனதில் கதாபத்திரங்கள் வருவது ஒரு இயக்குனரின் வெற்றி என்றால் பாலாவின் எந்த ஒரு படமும் அதை தவறவிட்டதில்லை.
பொலி விமர்சனங்களால் பதிபுகுள்ளாகும் படைபளிகளில் கவுதம்மேனன் இணைத்திருக்கிறார். இளமை காதலின் ஊடலை சொன்ன நீ தானே என் பொன்வசதம். இளம்காதலர்கள் மட்டுமே புரியும் படம். அந்த காதல் அறியாதவர்கள் படத்தின் வெற்றியை வேரருத்துவிட்டனர்.
மணிரத்தினத்தின் படைப்புகள் மொத்தமாக பாரட்டபட்டலும் கடல் அதற்க்கு விதிவிலக்கு என்கிறார்கள். ஆனால் கடல் படமும் சில குறைகளை களைந்தால் சிறப்பாகவே அமைகிறது. குறையே இல்லாத படங்கள் ஏதுமில்லை.விஸ்வருபதில்
கொடுவந்த கலகத்தின் த்க்கமும் கடலின் வெற்றியை பதித்தது.
படைப்புகளின் மீது வழக்கு தொடர்வதின் மூலம் தங்களை விளம்பரபடுத்தி கொள்ளும் செயல் நாள்தேறும் அதிகரித்து வருகிறது. சிலபடைபளிகளே தங்களின் படத்தின் விளம்பரத்திற்காக இதை தவறாமல் செய்கிறார்கள் என்ற உண்மையும் இல்லாமலில்லை.
இந்த படத்திற்கும் வன யுத்தம் திற்கும் எந்த சம்மதமும் இல்லாதது ஏன்?
படத்தின் ஆரம்பதில் ஒலிக்கும் வசனதிற்கும்; இறுதியில் ஒலிக்கும் வசனதிற்கும் சம்மதமும் இல்லாதது ஏன்?
திரைப்படம் என்பது ஒரு சாதாரண பொழுது போக்கு சாதனம் அல்ல அது ஒரு ஊடகம் ,புரட்ச்சி ஆயுதம். மக்களிடையே எளிதில் தாக்கத்தை ஏற்ப்படுத்தும்
என்பதை படைபாளிகள் நினைவில்கொள்ளவேண்டும் .
Sunday, 24 March 2013
சிலுவைக்கே சிறப்பு
பாவத்தின் அடையாளமாக விளங்கிய சிலுவை பரிசுத்தத்தின் மகத்துவமாக மாற்றிய ஆச்சரியம் இயேசு .
இன்று நம் நாட்டில் தூக்கு கயறு எவ்வளவு அவமரியதயகிய ஒன்றாக கருதப்படுகிறதோ அதைவிட பல மடங்கு அன்றைய மக்களால் அவமனத்துகுரிய சின்னாமாக விளங்கியது சிலுவை மரணம். அப்படிப்பட்ட ஒரு சிலுவை இன்று மக்கள் நெஞ்சில் அடையாள சின்னமாக அணிதிருக்கின்றனர்.
சிலுவை இரண்டு மரத்துண்டுகளின் இணைப்பு அல்ல விண்ணையும் மண்ணையும் இணைக்க வந்த உறவுகோடு -MDM
சிலுவைமரத்தில் சிந்திய ரத்தம் பாவங்களை கழுவுவி சிலுவையை புனிதம் பெற செய்தது. சிலுவை ஒரு அடையாளம் சின்னம் மட்டுமல்ல ஒரு ஆராதனை சின்னம், இயேசு இந்த உலகில் வாழ்ந்த ஒவ்வெரு நிமிடமும் அடையாளமாகவே திகழ்தார்.
அவர் செய்த ஒவ்வெரு செயல்களும் ஆராதிக்கப்படுகின்றன.
மனிதற்குலமணிக்கம் இயேசுவால் சிலுவைக்கே சிறப்பு என்றால்; பெண்களுக்குள் அசிர்வதிக்கபட்ட மரியாள் மண்ணுலகில் பத்துமாதம் இயேசுவை தன் வயற்றில் சுமந்து தன் இரத்ததை பாலாக்கி மனிதராக உருகொடுத்த சிறப்பு சிறிதாகத்தே ! இயேசு சிந்திய இரத்தம் மரியாளின் இரத்தம் .
மனிதர் நெஞ்சங்களில் சுமக்கும் சிலுவை அடையாளம் அல்ல; அபிமானம். சிலுவை சுபப்பவன் குற்றவாளி என்ற காலம் மாறி குற்றங்களை மன்னிப்பதற்காக பலர் சிலுவையை பயன்படுத்துகின்றனர். பாவத்தின்
சிலுவை பரிசுத்தம் ஆக்கப் படத்தின் விளைவே; கிறிஸ்துவின் அடையாளமாகவும், கிறிஸ்தவத்தின் அடையாளமாகவும் சிலுவை போற்றப்படுகிறது.
சிலுவையில் சிந்தப்பட்ட ரத்தமும்,
சிலுவையில் சிதைக்கப்பட்ட உடலும் பாவம் போக்கும் அருமருந்தாக கத்தோலிக்க திருசபையால் பின்பற்றப்படும் மரபானது.
உண்மையில் சிலுவை மரணம் நமக்கு நினையுட்ட வேண்டியது பாவங்கள் கழுவப்பட்டு மனிதன் புனிதனாக இயேசு உயிர்நித்தது மட்டுமல்ல;
தன்னால் படைக்கப்பட்ட மக்கள் இரட்சிப்பு பெறுவதற்காக தன் உயிரையே கொடுக்கும் தியாகம்.
நாம் உயிரை கொடுக்கா விட்டாலும்; இந்த சிலுவை நாட்களில் ஆவது நமக்கு அடுத்திருப்பவர்களுக்கு நம்மால் ஆனா உதவி செய்வதனால் நாமும் கிறிஸ்தவர்களாக நிலை பெறலாம்.
ரோட்டோரங்களில் கையேந்தும் இயலாதவர்கள் முதல் இறைவனிடத்தில் கையேந்துபவர்கள் வரை, ஒருவர் மற்றவரை சார்ந்து தான் வாழ்கின்றனர்.
"கேளுங்கள் பெற்றுக்கொள்வீர்கள் ,தட்டுங்கள் உங்களுக்கு திறக்கப்படும் "
மனிதர்கள் ஒருவர் மற்றவருக்கு உதவுவது இயேசு விருப்புவது அதுவே கிறிஸ்தவம் அதை சிலுவை நாள்களிலாவது கடைபிடிப்போம் ...

Thursday, 14 February 2013
திரைக்காணா கிறுக்கல்கள் பக்கம் 1
திரைக்காணா கிறுக்கல்கள்
காதலர்தின வாழ்த்துக்கள்...
பட பட வென நெஞ்சம் துடிக்க,
சட சட வென என்னை மறக்க...
உன்னை தேடி என்னை தொலைத்தேன்,
உன்தன் பார்வையில் பஞ்சாய் எரிந்தேன்...
காதல் இது காதல் கண்டுகொண்டேன் நானே
தேடல் என் தேடல் முடித்து கொண்டேன் நானே
இது வரை இந்த நாளை எதிர்பார்த்தே வாழ்ந்தேனடி
இமைகளை இமைக்க சொல்லி தேடல் முடித்தேனடி
உன் விழிகளில் நான் விழுந்தேனடி ,
என் விழிகளிகளில் உன்னை வரைந்தேனடி .
உயிரே... என் வாழ்வே உனதாகுதெ ...
காவியத்தில் கண்ட காதல் காலமெல்லாம் காண்பேனடி ,
காதலித்தேன் உன்னை
காதலித்தேன்
காதலித்தேன் என்காதலி
தேன் .
பதித்து வந்தாய் கால் பதித்து வந்தாய்;
படைக்க வந்தாய் என்னை படைக்க வந்தாய் .
உயிரே... என் வாழ்வே உனதாகுதெ ...
feel my love; feeling love
feel my love; feel in love
உதடுகள் மொழி பொய்யானதே; இமைகளின் மொழி இதமாகுதே ...
நிழலானேன் உன் நிழலானேன்; நிஜமானேன் நான் நிஜமானேன் .
உன்வளைவுகளில் என்னை வசியம் செய்தாய்;
என் வாழ்க்கையில் ஒரு வரம் கொடுத்தாய் .
உண்மை சொல்லடி ஒரு நிமிடம்;
ஓவியமாய் நீ பிறந்தாயடி .
உயிரே... என் வாழ்வே உனதாகுதெ ...
தேடல் என் தேடல் முடித்து கொண்டேன் நானே ...
குறிப்பு :
சீனியர் :100% காப்பி /-
ஜூனியர் : எங்கிருந்துட ?
சீனியர் : கண்டுபுடி ......
பக்கம்- 1
Monday, 14 January 2013
உயிர்தேடும் உலகிலே...
""கற்றது கையளவு கல்லாதது உலகளவு""
ஒவ்வொருநாளும் புதுவித அனுபவங்களுடன் நான் அறிந்து வரும் விஷயங்களையும் ஆச்சரியம் தரும் விஷயங்களையும் கிறுக்கவேண்டும் என்ற ஆவலில் இந்த பதிவை ஒரு தொடராக எழுத நினைக்கிறேன் இதில் வரும் செய்திகள் நீங்கள் அறிந்தவை ஆகலாம், மொக்கைகள் ஆகலாம், உண்மைக்கு புறம்பாகலம் எதுவானாலும் என்னுடைய பார்வைகளில் பட்ட கண்டேப்புகளே, உலகில் வாழும் ஒவ்வொரு உயிரும் எதையோ தொடுகிறது. அவ்வாறு உயிர்கள் தேடும் உலகில் என் தேடல் ...
பொருளடக்கம் :
1.அறிவின் தேடல்
2.அறிவியலின் தேடல்
3.பொருள் தேடல்
4.இறை தேடல்
5.இன்பமுறுதல்
6.அமைதியை தேடி
7.மரணம் தேடல்
8.என் தேடல்
முன்னுரை :
மனிதன் மரணத்திற்கு பயப்படுகிறான் மரணத்திலிருந்து விடுபடநினைத்து
ஓடுகிறான். இந்த உலக வாழ்க்கை நிலையானது இல்லை என்ற எண்ணம் அவனிடன் இருப்பதில்லை. மரணத்தை கண்டு அன்சாதவனே உலகில் பல சாகசங்களை செய்து முடிக்கும் வெற்றி வீரனாக வலம் வருகிறான் .உலகில் பல சாதனை மனிதர்கள் வாழ்த நாள் கொஞ்சம்தான் ஆனால் அவர்கள் வாழும் நாளே அதிகம்.
உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினனமும் பிறந்த நாள் முதல் உயிர்வாழும் ஒவ்வொருநோடியும் உயிர்வாழ்வதரற்க்காக போராடிக்கொண்டு இருக்கிறது .
நிலையில்லாத உலகத்தில் பொருள் சேர்த்து வைக்கின்றது. நோய்களும் விபத்துகளும் உயிர் நிலையானது இல்லை என்ற உண்மையை உணர்த்திவருகின்றன .
மனிதனின் தேடல் அடுத்த உயிரகளை மதிக்காமல் தான், தன், என்ற வட்டத்திற்குள்ளே தொடர்கிறது.உலகில் பிறந்துள்ள ஒவ்வொரு உயிரினத்திற்கும் வாழ்வதற்க்கான உரிமை உள்ளது. தான் கடந்து வந்த பாதையை பலர் நினைத்து பார்ப்பதில்லை. அதுபோலவே வயதின் இளமையில், நமக்கும் வயதாகும் என்ற எண்ணமும் பலபேரிடம் இருப்பதில்லை .
கடந்து வந்த பாதையை மறப்பவனின் வெற்றி நிலையானது அல்ல அந்த வெற்றியை அவனால் தக்க வைத்து கொள்வதும் கடினம் .
1.அறிவின் தேடல் :
அறிவு, அனுபவம், ஞானம் என்பவாற்றல் மனிதன் வெற்றிபெற போராடுகிறான் ஆனால் இந்த மூன்றின் வேறுபாட்டையும் அறியதவனே தன்னை அறிவாளி என்பவன்.
அறிவு: நாம் அறிந்து கொண்டவை, இதில் ஒவ்வொருவரும் ஒரு துறை சார்ந்த அறிவில் மேலோங்கி இருக்கின்றனர். புரிந்துணர்வுடன் கற்ப்பவருக்கே இது கல்வியறிவு ஆகும். இவை புத்தக அறிவுக்கு உதாரணம்.
அனுபவம்(பயிற்ச்சி ): ஒரு செயலை திரும்ப திரும்ப செய்வதன்மூலம் கற்றுக்கொள்வது; சிலரது கல்வி முறை கூட இவ்வாறே உள்ளது. ஒருபுத்தகத்தை திரும்ப திரும்ப படிபதன்முலன் அதை மனதில் பதித்து கொள்கின்றனர். இது பயிற்சி கல்வியறிவு ஆகாது .உதாரணமாக சுற்றுல தலங்களில் உள்ள வியாபாரிகள் திரும்ப திரும்ப கேட்ப்பதன்மூலம் பலமொழிகளில் பேசும் பயிற்சி பெறுகிறார்கள். இதன் மூலம் பலமுறை படைதிட்டப்பட்ட வைரக்கல் பளபளக்குகிறது ...
ஞானம் : இது தனித்தன்மையாக உள்ளது ஒவ்வேருவரிடமும் மாறுப்பட்ட (ஞானம்)தனித்தன்மை உள்ளது .இதை கண்டறிந்து அந்த துறைசார்ந்த அறிவைபெருக்கி கொண்டால் வெற்றி நிச்சயம்.
உதாரணமாக:
நினைவாற்றல், உடல் வலுமை, சிந்தனை திறன் ,...இது போன்றவை பரம்பரையுடன் தொடர்புடையவை .
2.அறிவியலின் தேடல் :
மனிதன் கடவுளாக முயர்ச்சிப்பதே அறிவியலின் தேடல் இங்கு மனிதன் தன்னை கடவுளாக மக்கள் இடத்தில் நிலைபடுத்த முயற்ச்சிக்கிறான் மனிதனால் காணமுடிந்ததே கடுகளவு உலகம்தான் அதில் புதைந்திருக்கும் உண்மைகளையே அறிவியலால் தெளியுபடுத்த முடியவில்லை அதற்குள் மாபெரும் சத்தியக வளர்ந்துவிட்டதாக ஒரு பிரம்மை .
அறிவியலால் அளிக்கப்பட்ட மனித ஆற்றலையே கண்டுபிடிக்க முடியவில்லை அதற்குள் அடுத்த கிரகத்தில் குடியேறும் ஆசை....
உண்மையான தேடல் மரணம் இதை நீ அறிவைய மனித

தேடல் தொடரும் ...
Tuesday, 25 December 2012
மலையாளத்தில் ஒரு குடி மகனின் கதை
ஸ்ப்ரிட் திரைப்படம் சமிபத்தில் பார்த்த படங்களில் குறிப்பிடக்கூடிய வகையில் அமைந்திருந்தது . மலையாளத்தில் இந்த வருடம் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் குடி மகனின் வாழ்க்கையை அடி ஏற்றி கதை திரைகதை அமைக்க பட்டிருந்தது.
குடி குடியை கெடுக்கும் என்ற வாக்கியத்தை இரண்டரை மணி நேரம் வாழ்ந்து காட்டியிருந்தனர். பல உண்மைகளை தெளிவாக எடுத்துக்காட்டிய இந்தப்படம் சிலராது வாழ்க்கையிலாவது மாற்றங்களை ஏற்ப்படுத்தும் என்பதில் ஐயமில்லை . வசதிக்கேற்ப ஒவ்வொருவரின் பானங்களும் நாடமாடும் தோரணைகளும் மாறுபடலாம் ஆனால் பாதிப்பு போதுவனதகவே உள்ளது .
குடி மகனின் சுயநிலையை எவ்வாறு ஆல்ககால் மறக்க செய்கிறது. தான் என்ற அகந்தையில் அவன் ஆடும் ஆட்டம் . குடும்பவாழ்க்கை சீர்குலைவது என ஓவ்வொன்றும் உண்மை முத்துக்கள். குடி மகனின் குழந்தைகளின் வாழ்க்கை கேள்விகுறி ஆக்கபடுகிறது.
குடிப்பது தவற என வாதிடும் இந்த அத்திப்புத்தி சாலிகள் தன்னிலை மறப்பதை உணர்வதில்லை போலும். குடிபோதையில் இவர்களின் அறியுதிறன் அளிக்கபடுகிறது. விட்டால் சமுதாயம் தவறு என் குறிப்பிடும் பல செயல்களை தவற என கேக்கவருவர்கள் .
அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு தான். அமுதமே அப்படி இருக்க ஆல்ககால் சும்மாவா. படத்தில் மோகன்லாலின் நண்பன் இறந்தவுடன் மோகன்லால்
தெளிவடைவதாக
சித்தரிக்கபட்டுள்ளது. உண்மையில் இதன் சத்தியம் குறைவே ஆனால் நடந்தால் உயிரிழந்த
மனிதருக்கு செய்யும் மரியாதையாக அமையும். ஆல்ககாலை மருந்தாக உட்கொள்பவருக்கும் விருந்தாக உள்கொள்பவருக்கும் வித்தியாசமில்லையா என்ன ?
உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும் சுகந்திரம் உள்ளது. அது மற்றவரின் வாழ்கையை பதிப்பதை ஒரு போதும் ஏற்க்க முடியாது . அப்படி பாதிக்கும் நேரத்தில் அதை தடுத்து நிறுத்துவதே அரசின்கடமை அல்லது அதை வைத்து காசு பார்ப்பதில்லை. பல இடங்களில் காவலர்களும் கையுட்டு வாங்க குடியை காரணம் கட்டுவதையும் படத்தில் பதிவு செய்துள்ளனர்.
படத்தை பார்க்கும் புதிய தலைமுறையாவது குடிபழக்கத்திற்கு அடிமையகமலிருந்தால் அது இயக்குனருக்கு கிடைக்கும் வெற்றி...
Friday, 7 December 2012
கஸ்டமருக்கு ஆப்பு; டாட்டா டோகோமோ டாப்
தாங்க முடியலட இவங்க தொல்ல, கொள்ளையடிக்க புது புது ரூட்டு போடுறாங்க. ரூம் போட்டுதான் யேசிக்கிறாங்க. ஒரு புது கணைசன் எடுத்து நான் பாட படுறேன். சிரிச்சிக்கிட்டே கணைசன் குடுத்தனுங்க.ID சரியில்லா போட்டோ சரியில்லன்னு அலைய வேண்டாமேன்னு நேர டோகோமோ ஷோரூம்க்கு போய்தான் கணைசன் எடுத்தேன் ஆரம்பம் என்னவோ நல்லா தான் இருந்திச்ச்சி. சிம் ப்ரீ; 20 ரூபாய் ப்ரீ டாக்டைம் .
ஒரு வாரத்துக்கு அப்புரம்தான் ஆரம்பிச்சாங்க ஆப்பு அடிக்கிற வேலைய. முதல் ஆப்பு நான் செலக்ட் பண்ணுன பிளான்ல இருந்திச்சி (மூணு மாசத்திற்கு ஒரு நிமிஷம் 1/2 பைசா இந்தியா முழுதும்; விலை 43 ரூபாய் ) நான் பண்ணற காலுக்கு சரமாரியாக சர்ஜிபண்ண அரபிச்சாங்க ஒரு வழிய எழுதி வச்சி கண்டுபுடிச்சிட்டேன். ( ஒரு நிமிசத்துக்கு ஒரு பைசா , 1.5 பைசா ,2 பைசா ...)
கஸ்டமர் கேருக்கு கால்பண்ண ஏதோ இங்கிலீஷ் காரனுக்கு புறந்தவன் மாதிரி ப்ரோனன் செச்சன் (சரியாதான் போசுனான அல்லது ஓபி அடிசனணு தெரியல, இந்தியன் கஸ்டமர்கிட்ட பேசுறோம் மறதுடுவான்களே )மொத்ததில ஒன்னும் புரியல. நடைய கட்டினேன் ஷோரூம்க்கு.
சிம் எடுக்குபோதிருந்த புன்னகை குறைத்தே இருந்தது . பிரச்சினைய சொன்னேன் . "சாரி சார் நாங்க போஸ்ட் பெய்டு மட்டும்தான் சால் பண்ணுவோம்."
"சார் அவன் பேசுற இங்க்லீஷ் புரியல. தமிழ் சப்போர்ட் இல்லையாம் ."
"சாரி நாங்க ஒண்ணும் பண்ண முடியாது. நீங்கதான் பாத்துக்கணும்." (இதே ரேக்கடே திரும்ப திரும்ப ஓடிச்சி )
தமிழுக்கு உதவ ஒரு தமிழர் முன்வந்தார் . கணினியிலிருந்த தகவல்களை பரிசோதித்து நான் சொன்னதை உறுதி படுத்தி
"மீண்டும் முயற்சி செய்ங்க சரி ஆகவிடால் திங்கள்கிழமை வாங்க நான் உதவுகிறேன்" (ஒரு ஆறுதல் பேச்சு )
மறுபடியும் கஸ்டமர் கேருக்கு கால் பண்ணுனேன். " நாங்க புண்ணியவான்கள் அப்படி எல்லாம் பண்ண மாட்டோம். நீங்க ஒரு தடவ சரிய செக்பன்னுங்க சார். "
சரி ஆகிடமோ என்ற நம்பிக்கையில பாத்த, இல்ல. திரும்பவும் கஸ்டமர் கேர் (இந்தமுறை கொஞ்சம் கடுப்பாகவே நான் ) பதில் வேறமாதிரி இருந்திச்சி "உங்களுடைய பிளான் சின்னதா செஜ் ஆகி இருக்கு. ("ஒவ்வெரு நாளும் முதல் ஒரு நிமிசத்திற்கு மட்டும் 2பைசா. ") "இல்ல சார் என்கிட்ட sms கூட இருக்கு இந்தியா முழுதும் 1/2 பைசா தான்" . அது "மாறிடிச்சி சார்". ஒரு வாரமா நடந்த பஞ்சாயத்து ஒரு வழிய முடிஞ்சி அதுக்குள்ளே காசு தண்ணிய கரன்சிருந்தது .
அடுத்த ஆப்புகள் வேலிவு அடர் சரிவிஸ் மூலமா வந்திச்சி. ஆக்டி வேசன் பண்ணாத சர்விசுகள் அதுவாக ஆடிவேசன் அகுறதும். 2 முதல் 15 ரூபா வரைக்கும் காணாம போறதும், கஸ்டமர் கேருக்கு கல்பண்ணி டி ஆடிவேர்சன் பணுறதும்.இப்படியே போய்கிட்டிருக்கு. முதல்ல ரீ பண்டு பண்ண மறுத்தவங்க.
இப்போ வேற வழியில்லாம அப்பப்போ பண்ணுறக்க (நான் தெரியாம தான் கேக்கிறேன் எனக்கு தினமும் balance செக் பண்ணுறதுதான் வேலைய? )
பிரீ பெய்டு தான் இப்படினு போஸ்ட் பெய்டு பக்கம் பாத்த அவங்க பாடு நாயிக்ககூட கண்ணீர்வடிக்கும். எனக்காவது காசு போட்டத்தான் ஆப்படிப்பாங்க. ஆனாஅங்க லிமிட் செஞ்சி பண்ணி சொல்லாமலே
ஆயிரகணக்கில பில் அனுப்புறாங்க இவன்னுங்க பின்னாடி பஞசாயத்திற்க்கு அலைவதே வேலைய போகுது.(டூ நாட் டிஸ்டப் ஆக்டிவ் பண்ணியும் இதுல விளம்பர கால்களின் தொல்லவேற ...
பி.கு : இங்கு குறிப்பிட்டுள்ள அனைத்திற்கும் தகுந்த ஆதரங்கள் என்னிடம்
உள்ளது.
இப்போ வேற வழியில்லாம அப்பப்போ பண்ணுறக்க (நான் தெரியாம தான் கேக்கிறேன் எனக்கு தினமும் balance செக் பண்ணுறதுதான் வேலைய? )
ஆயிரகணக்கில பில் அனுப்புறாங்க இவன்னுங்க பின்னாடி பஞசாயத்திற்க்கு அலைவதே வேலைய போகுது.(டூ நாட் டிஸ்டப் ஆக்டிவ் பண்ணியும் இதுல விளம்பர கால்களின் தொல்லவேற ...
பி.கு : இங்கு குறிப்பிட்டுள்ள அனைத்திற்கும் தகுந்த ஆதரங்கள் என்னிடம்
Saturday, 24 November 2012
முகமூடி மனிதர்களின் சதுரங்க ஆட்டம்
மனிதவாழ்வில் உண்மையான மனிதர்களை பார்ப்பது அரிதினும் அரிதாகிவிட்டது மனிதர்கள் சுயலாபத்திற்காக போலி முகமுடிகளுடனே நடமாடிக்கொண்டு இருக்கிறார்கள். சதுரங்க ஆட்டத்திற்கும் மனித வாழ்க்கைக்கும் ஒரு சிறிய வித்தியாசமே உள்ளது. ஆனால் அதை அவ்வளவு எளிதில் அடையாளம் கண்டுக்கொள்வது கடினம்.
சதுரங்க ஆட்டத்தில் இரண்டு நிறங்களே உள்ளன. ஆனால் மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருநிறம். மனிதர்களை அடையாளம் கண்டுக்கொள்வதும் கடினமே. போலி புன்னகையுடன் மனிதர்கள் ஆடும் சதுரங்க ஆட்டத்தில் முகமூடிக்கு உள் உள்ள உள்ளத்தில் புதைந்துள்ள வஞ்சம்,பொறமை, இவற்றை அடியாளம் காணவேண்டும். எதிரில் நிற்கும் பகைவனைவிட அருகில் இருக்கும் துரோகியே ஆபத்தானவன் . எதிரில் இருப்பதால் ஒருவன் எதிரி அல்ல ,அருகிலிருப்பதாலே ஒருவன் நண்பனும் ஆகிவிட முடியாது.

அன்று முதல் இன்றுவரை பழைய வாழ்க்கையை மறந்து வாழ்வது மனிதர்கள் இயல்பாக உள்ளது. அடுத்த நொடி தனக்குரியதில்லை. என்பதை எண்ணாமல் தனக்கு மேலிருப்பவனைக் கண்டு அழுவதும்; கீழிருப்பவனை கண்டு சிரிப்பதுமே மனிதனின் மனம். மனிதனை மனிதனாக பார்க்காமல் சாதி, வசதி, மதம், இனம், மொழி இவற்றை கொண்டு வேறுபடுத்தி பார்க்கின்றனர். காலங்கள் மாறும் காட்சிகளும் மாறும் .
மனிதர்களின் அக எண்ணங்களை கணிக்க கற்றுக்கொள்ள வேண்டும். புறத்தில் கட்டும் முகமூடியை பிரித்தறிய வேண்டும். வாழ்கையில் ஒவ்வொரு நொடியும் முக்கியமானதே. இங்கு சண்டியர்களை விட சாணக்கியர்களே பலம் வாய்ந்தவர்கள் ...

Monday, 12 November 2012
ஒரு படம் காப்பியடிச்ச தப்பா -காப்பிக்காரன் vs அந்நியன்
எல்லோருமே திருடங்கதான் பதிவைதொடர்ந்து நிகழ்ச்சி வடிவில் அடுத்தபதிவு ""ஒரு படம் காப்பியடிச்ச தப்பா -காப்பிக்காரன் vs அந்நியன் "" இந்த பதிவில் பிரபல தமிழ் நடிகருடன் அந்நியன் நடத்திய கருடபுராண வதத்தை பதிவுசெய்கிறேன் .
வணக்கம் நேயர்களே நம்முடைய யாரென தெரிகிறத நிகழ்சியின் புதிய பதிவுக்கு உங்களை வரவேற்கிறேன். இன்றைய நிகழ்சியில் அந்நியன் பிரபல நடிகரை காப்பியடித்த குற்றத்துக்காக கருடபுரனத்தின் படி தண்டணை வழங்க சந்தித்தபோது நடந்த உரையாடலை உங்களுக்கு வழங்குகிறேன்.
"முந்தைய பதிவுகளை படித்தவர்களுக்கும்,பின்னுட்டம் தந்த பிரபல பதிவளர்களுக்கும் நன்றிகள் ..."
யாரென தெரிகிறத- 2
அந்நியன்: தமிழ் சினிமாவ வளரவிடாத குற்றத்திற்காக கருட புராணத்தின்படி 100 தடவ நீ நடிச்ச படங்களா நீ பாக்கணும் ...
காப்பிகரான்: அண்ணா நான் யாருன்னு தெரியுமா ?
அந்நியன்: தெரியும்ட பாடு தமிழ்த்திரை படங்களை உலகஅளவில் வளரவிடதவன் நீன்னு பிரபல பதிப்பாளர்கள் எல்லோரும் சொல்லுரங்க.
காப்பிகரான்: என்னமாதிரி டான்ஸ் ஆடுறவன் தமிழ் சினிமாவிலேயே கிடையாது தெரியுமா ?
அந்நியன்:படத்தில நடிகிறதா டான்ஸ் ஆடுறதானு முதல படிச்சிக்க , நல்ல ஆடுவேன எதாவது டிவியில போய் போட்டிக்கு அடவேண்டியது தானே ?
காப்பிகரான்:அங்க கால்லகட்டி தூக்கமாட்டங்க , படத்திலேன சும்மா ஆடு ஆடுன்னு ஆடுவேமில்ல ..
அந்நியன்: என்னடா படங்கள பறந்து பறந்து அடிக்கிற நீ என்ன சூப்பர்மேன ?
காப்பிகரான்: எங்க அப்பா சொல்லிருக்கரு; பொண்ண காப்பதற மாதிரி (கபடி)எல்லாம் படம் பண்ணினது போதும். இனி பண்ணுற படங்கள்ல ஊர காப்பத்துறது (பறவை ), நாட்ட காப்பாத்துறது (மல்லு ) மாதிரிதான் இருக்கணும்னு.
அந்நியன்: ஏன்டா அடுத்தவன் உழைப்ப முழுசா காப்பிய அடிக்கிற படு ?
காப்பிகரான்: நீங்கதானே சொல்லியிருக்கிங்க. அஞ்சி பைசா திருடினாலும் அஞ்சி அஞ்சி பைசா திருடினாலும் ஒன்னுதான்னு. அதன் கொஞ்சம் காப்பி அடிச்சாலும் நிறைய காப்பியடிச்சாலும் காப்பிதானே ...
அந்நியன்: என்னடா சொல்ற, தெளிவா பேசுட; ஹிரோயின்கிட்ட பேசுற மாதிரி இருக்கு.
காப்பிகரான்:யாரோ எழுதிய புத்தகத்த பதிப்பாளர் காப்பியடிக்கிறாரு, அத காப்பியடிச்சி மேல்நாட்டுல படம் எடுக்குறாங்க, அத கொஞ்சம் மாத்தி இங்க பண்ணுரங்க அத தான் சென்னேன் .
அந்நியன்: ஏப்போதாண்ட நல்லபடங்கள் நடிப்பா ????
யாரென தெரிகிறத- 2 சிறிய விளம்பர இடைவேளை பின் தொடரும் ..
நிகழ்ச்சி தொடர்கிறது....
அந்நியன்: ஏப்போதாண்ட நல்லபடங்கள் நடிப்பா ????
காப்பிகரான்: சமிபத்துல நான் நடிச்ச சில படங்கள நல்ல நடிச்சிருக்கேன் பாத்த தெரியும் (சிநேகிதன், காவல்காரன்,...)
அந்நியன்: கப்பியடிக்காத நடிக்கனும்ட அது தான் உன்னோட படம் .
காப்பிகரான்: நீங்க ஒரு சட்டைய பாக்குறிங்க, அதேபோல புதுசா ஒரு சட்டை
தைக்கிறிங்க அது உங்க சட்டையா ? அடுத்தவன் சட்டையா ?
அந்நியன்: பண்ணுன தப்ப நியாயப்படுத்திறிய?
காப்பிகரான்: அப்படி பாத்த பாட்டை படம்கூட என்னோட ஏரியத்தான், காப்பியடிச்சவது படம் ஓடனும் சார் .
அந்நியன்: கருட புராணத்தின்படி நெற்றிக்கண் திறப்பினும் குற்றமே ...
காப்பிகரான்: இவ்வளவு பேசுற நீங்க முதல உங்களேட ஒர்ஜினல பாருங்க,
கண்ணு தெரியாம நடிச்சது(மலையாளம் மணி ) ,மூளைவளர்ச்சி குன்றியவர நடிச்சது(i sam ) ,அது பேரு காப்பிதானே ...
அந்நியன்: நான் அந்நியன் என்ன இந்த ஆட்டத்துல சேர்க்க கூடாது அது தப்பு
நீ போகலாம் ...
நேயர்களே யாரென தெரின்சிருப்பிங்க மீண்டும் அடுத்த நிகழ்ச்சியில் சந்திப்போம் ....
பி.கு : யாருமே புதுசா ஒன்னும் படைக்கல; ஏற்கனவே இருக்கிற ஒன்னுலயிருந்து தான் அடுத்தத உருவாக்குறங்க அல்லது கண்டுபுடிக்குறங்க ...
அடுத்த சந்திப்பு : ACF ஆல் கடத்தப்பட்ட 15 பிரபலங்களுடன் ...
அந்நியன்: ஏன்டா அடுத்தவன் உழைப்ப முழுசா காப்பிய அடிக்கிற படு ?
காப்பிகரான்: நீங்கதானே சொல்லியிருக்கிங்க. அஞ்சி பைசா திருடினாலும் அஞ்சி அஞ்சி பைசா திருடினாலும் ஒன்னுதான்னு. அதன் கொஞ்சம் காப்பி அடிச்சாலும் நிறைய காப்பியடிச்சாலும் காப்பிதானே ...
அந்நியன்: என்னடா சொல்ற, தெளிவா பேசுட; ஹிரோயின்கிட்ட பேசுற மாதிரி இருக்கு.
காப்பிகரான்:யாரோ எழுதிய புத்தகத்த பதிப்பாளர் காப்பியடிக்கிறாரு, அத காப்பியடிச்சி மேல்நாட்டுல படம் எடுக்குறாங்க, அத கொஞ்சம் மாத்தி இங்க பண்ணுரங்க அத தான் சென்னேன் .
அந்நியன்: ஏப்போதாண்ட நல்லபடங்கள் நடிப்பா ????
யாரென தெரிகிறத- 2 சிறிய விளம்பர இடைவேளை பின் தொடரும் ..
"" உங்கள் மேல் குற்றம் இல்லாதவர் முதலில் கல் எறியட்டும் ""
"உன்கண்ணில் இருக்கும் உத்திரத்தை எடுத்துவிட்டு அடுத்தவன் கண்ணிலிருக்கும் தூசியைபார்"
அந்நியன்: ஏப்போதாண்ட நல்லபடங்கள் நடிப்பா ????
காப்பிகரான்: சமிபத்துல நான் நடிச்ச சில படங்கள நல்ல நடிச்சிருக்கேன் பாத்த தெரியும் (சிநேகிதன், காவல்காரன்,...)
அந்நியன்: கப்பியடிக்காத நடிக்கனும்ட அது தான் உன்னோட படம் .
காப்பிகரான்: நீங்க ஒரு சட்டைய பாக்குறிங்க, அதேபோல புதுசா ஒரு சட்டை
தைக்கிறிங்க அது உங்க சட்டையா ? அடுத்தவன் சட்டையா ?
அந்நியன்: பண்ணுன தப்ப நியாயப்படுத்திறிய?
காப்பிகரான்: அப்படி பாத்த பாட்டை படம்கூட என்னோட ஏரியத்தான், காப்பியடிச்சவது படம் ஓடனும் சார் .
அந்நியன்: கருட புராணத்தின்படி நெற்றிக்கண் திறப்பினும் குற்றமே ...
காப்பிகரான்: இவ்வளவு பேசுற நீங்க முதல உங்களேட ஒர்ஜினல பாருங்க,
கண்ணு தெரியாம நடிச்சது(மலையாளம் மணி ) ,மூளைவளர்ச்சி குன்றியவர நடிச்சது(i sam ) ,அது பேரு காப்பிதானே ...
அந்நியன்: நான் அந்நியன் என்ன இந்த ஆட்டத்துல சேர்க்க கூடாது அது தப்பு
நீ போகலாம் ...
லைட் ஆப்
பி.கு : யாருமே புதுசா ஒன்னும் படைக்கல; ஏற்கனவே இருக்கிற ஒன்னுலயிருந்து தான் அடுத்தத உருவாக்குறங்க அல்லது கண்டுபுடிக்குறங்க ...
அடுத்த சந்திப்பு : ACF ஆல் கடத்தப்பட்ட 15 பிரபலங்களுடன் ...
Wednesday, 31 October 2012
கிணத்து தவளைகளின் ஹாலிவுட் மொக்கைகள்
ஹாலிவுட் திரைப்படங்களில் விறுவிறுப்புடன் திரைக்கதை இருப்பதால் மொக்கைகள் கூட வசூலை அள்ளுகின்றன. தொடர்வரிசையில் வரும் திரைப்படங்கள் சிலவற்றில் நம்மஊர் தொலைக்காட்சி தொடர்கள் அளவுக்ககூட கதை இருப்பதில்லைசொல்லப்போனால் சிந்துபாத்( தினத்தந்தி) அளவுதான். அதை வைத்துக்கொண்டு அவர்கள் ஓட்டும் ஓட்டு தாங்கமுடியவில்லை.
ஒரே படத்தை புது தொழில்நுட்பம் வரும்போது எல்லாம் தயாரித்து காசுப்பார்க்கின்றனர். அரைத்த மாவையே அரைக்கின்றனர். குறிப்பாக (ஸ்டார்ஸ் வார்ஸ்)திரைப்படம் நம்மூரில் தூதர்ஷ்சனில் தொடர்களாக வெளிவந்த சத்திமான் ,ஜுனியர்- ஜி, ஆரியமான்,ஹிமேன் அளவுக்கூட கதை இருப்பதில்லை ஆனால் வசூலில் வாரி குவித்தன .
போர்ன் தொடர் திரைப்படங்கள் விறுவிறுப்பான திரைக்கதையால் வெற்றி மகுடம் சூடியது ஆனால் கதையை பார்த்தல் இரண்டு பக்கங்கள் கூட இல்லை.
ஜேம்ஸ்பண்ட் திரைப்படங்கள் ஹாலிவுட் மொக்கைகளுக்கு சிறந்த உதாரணம் ரசியாவையே குறிவைத்து பலபாகங்கள் மொக்கை போட்டன. படபிடிப்பு தளங்கள், கேமராகோணங்கள், கவர்ச்சி இவற்றின் புதுமையால் அரைத்த மாவையே வைத்து காசுபார்க்கின்றனர். ஜேம்ஸ்பண்ட் தொடரில் தற்ப்போது நடித்துவரும் சில நடிகர்களுக்கு நடிக்கவேண்டும் என்பதே மறந்து விடுகிறது .
இதில் கொடுமை என்னவென்றால் இந்த மாதிரியான திரைப்படங்களுக்கு சிலர் வக்காளத்து வாங்குகின்றனர். இவர்களில் சிலருக்கு தமிழ்திரையுலகில் வரும் சிறந்த படைப்புக்களை பற்றி பேசுவதற்கு நேரம் கிடைப்பதில்லை.
இன்னும் சிலர் தமிழில் ஹிரோயிசத்தை எதிர்த்துவிட்டு; ஹாலிவுட் ஹிரோயிசத்திற்க்கு கைதட்டுகின்றனர்.உலக அளவில் பல நல்ல திரைப்படங்கள் வந்தாலும், ஹாலிவுடில் மொக்கைகளே அதிகம் .
ஹரிபட்டர் தொடர்கள் இரண்டு பாகங்கள் எடுப்பதற்க்கான கதையே உள்ளது அதை வைத்துக்கொண்டு பல பாகங்கள் எடுத்து காசுப்பார்த்தனர். திகிலும், குழந்தைகளின் ஆர்வமும், பின்னனியிசையும் துணைநின்றது . நம்மூரில் தொலைகாட்சி தொடர்களில் பின்பற்றப்படும் அடுத்த பாகத்தை எதிர்பார்க்கும்
ஆர்வத்துடன் ஒவ்வொரு பாகங்களையும் முடிக்கும் வித்தையே கையாளப்பட்டுள்ளது .
(லாட் ஆப் தி ரிங் பாகங்கள் தனித்துவம் வாய்ந்தவை அவை இதில் சேராது.)
தமிழிலும் தற்போது இந்த பழக்கம் பரவ தொடங்கியுள்ளது. தமிழ்த் திரையுலகில் இப்போது ரீமேக் என்ற பெயரில் தமிழ்சினிமாவின் அடையாளங்களாக விளங்கும் திரைபடக்களை ரீமேக் செய்து மொக்கைகள் ஆக்குகின்றனர். இதற்க்கு உலகில் சிறந்த படங்களை தமிழில் காப்பியடிப்பதே மேல் .
கிணத்து தவளைகள் தான் அறிந்ததே உலகம் என்ற எண்ணத்துடன் வாழ்பவை அதுபோலவே உலகில் பலமனிதர்கள் நடமாடுகின்றனர். அறிவு, அனுபவம், ஞானம் என்பவாற்றல் மனிதன் வெற்றிபெற போராடுகிறான் ஆனால் இந்த மூன்றின் வேறுபாட்டையும் அறியதவனே தன்னை அறிவாளி என்பவன். உலகளவில் தமிழ்சினிமா வளர்வதற்கு தமிழ் ரசிகர்கள் உலகளாவிய ரசினையுடன் தமிழ்சினிமாவை வரவேற்க்கவேண்டும் ...
பி .கு : மாதம் முடிவதால் அவசரமாக மரண மொக்கை வெளியிட்டுள்ளேன் படித்தவர்கள் மறந்துவிடுங்கள் ...
Tuesday, 9 October 2012
அஜித்-ஐ ரசிக்கிறேன் அஜித் ரசிகனை எதிர்க்கிறேன்
சிலரின் செயல்பாடுகளும் வாழ்க்கையும் நம்மை பிரம்மிப்படைய வைக்கும் அந்தவகையில் அஜித் செயல்களும் பலரை வியக்க வைப்பதாகவே உள்ளது ,
மனிதன் தவறுகள் செய்பவன் ஆனால் தன்னிலை மாறாமல் தன்னம்பிக்கையுடன் தன்னடக்கத்துடனும் வாழ்பவனை தலைவனாக கொண்டு பின்தொடர்வது இயல்பு. அந்த வகையில் அஜித் தனிமனிதனின் வெற்றிக்கும், உழைப்புக்கும், உயர்விற்கும் ஒரு உதாரணமாகவே அறியப்படுகிறார் .
இன்றைய நிலையில் ஆட்சியாளர்களுக்கு சலாம் போடும் சினிமா மனிதர்களின் மத்தியில் தன்னிலையை உலகறிய தெளிவு படுத்தியவர்அஜித்.
நட்சத்திரங்களின் குடும்ப வாழ்க்கை தள்ளாடும் இன்றைய சூழலிலும் நட்சத்திர தம்பதிகளாக சிறப்பாக குடும்ப வாழ்க்கையில் வெற்றிகண்டவர் .
அரசியல் ஆதாயத்திற்காகவும் புகழுக்காகவும் ஏழைகளுக்கு உதவும் மனிதர்களில்; உலகறியாது உதவுபவர். தன் சினிமா அடை மொழியையே உதறியவர்.
இந்தயாவில் வெற்றி வீரனாக இருந்த போதும், தோல்வியில் துவண்டபோதும், கிரிக்கெட் வீரர் கங்குலிக்கு அடுத்ததாக நிலையான ரசிகர்களின் ஆதரவை பெற்றிருப்பவர். தன் ரசிகர் மன்றங்கள் சில தன்னுடைய கொள்கைகளுக்கு எதிராக செயல்படுவதாக தோன்றியதால் அதை கலைத்தவர் .
இத்தனை பெருமைக்குரிய மனிதரின் ரசிகர்கள் பலருக்கு அவருடைய
பிறரைமதிக்கும் பண்பும், மனிதாபிமானமும், வெற்றி பெறுபவர்களை பாராட்டும் நல்குணமும் இருப்பதில்லை . அஜித்தின் தோல்வி படங்களை ஒப்புக்கொள்ளும் மனப்பக்குவமும் சிலரிடமே உள்ளது .
தமிழ்த்திரையுலகில் நடிகர்திலகத்திற்கு பின் நடிப்பில் முத்திரை பதித்தவர்களில் அஜித்தும் ஒருவர் . ஆனால் அஜித் மட்டுமே என்பது
ஏற்ப்புடையது அல்ல. அஜித்தின் சிட்டிசன் ,வாலி ,வரலாறு போன்ற படங்கள் அஜித்தின் நடிப்பு திறமையை வெளிப்படுத்தின ...

ஒரு சிறந்த மனிதனின் ரசிகனாக இருந்து கொண்டு மற்றவர்களை
போல், அடுத்தவரின் படைப்பையும் வெற்றியையும் தரக்குறைவாக விமர்சிப்பத்தும்; ஏற்றுக்கொள்ள மறுப்பதும்,நடிகனின் நடிப்பை பார்க்காமல் நடிக்க வேண்டிய திரைப்படங்களில் ஆடதேரிய வில்லை என மற்றவர்கள் அஜித்தை விமர்சிப்பதுக்கு நிகராகவே உள்ளது .இதனால் அஜித்தை ரசிக்கும் பலரால் அஜித் ரசிகர்களை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை......
Sunday, 30 September 2012
காப்பாத்துங்க மை லாட் கொல்ல பாக்குறாங்க...
இந்தியாவில் ஒவ்வொரு மனிதனும் பிறத்தது முதல் தன் உயிரை காத்து கொள்ள போராடுகிறான்.. அவனை மனதளவில் கொல்ல பணப்பேயிகள் நடமாடி கொண்டே இருக்கின்றன. அவைகளிடமிருந்து மக்களை காப்பாத்த யாருமே இல்லையா மை லாட் (நீதி)
மனிதன் மனதளவில் ஒவ்வொரு நிமிடமும் பாதிப்புக்கு உள்ளாகிறான்.
மனதழுத்ததினுடனே நோயாளி ஆக்கப்பட்டு சாகடிக்க படுகிறான்.
மருத்துவமனைகள் மனிதனை நோயாளி ஆக்குவதில் முக்கியபங்கு வகிக்கின்றது, மருத்துவமனைகள் மனிதனின் நோயை அதிகபடுத்தி காசுப்பார்க்க துடிக்கின்றன. மருத்துவமனைக்கு போகும் மனிதர்களை மணிகணக்கில் காக்கவைத்து மனழுத்தத்தை அதிகரிக்க செய்கின்றனர்.
தங்களின் சுயலாபத்திர்க்காக மருந்துகளை எழுதிக்குவிக்கின்றனர் .
பல பொது பணியிடங்களில் வேலை செய்யும் அரசு மற்றும் தனியார்
ஊழியர்கள் சாதாரண மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதில்லை
வாசகபலகைகளில் மட்டுமே மதிப்பு உள்ளது.
அரசு ஊழியர்களின் அலச்சியத்தால் சாதாரண மனிதர்கள் பாதிக்கப்பாடுவது
வாடிக்கையாகிவிட்டது.
பேருந்துகளில் பயணிப்பவர்கள் நடத்துனர்களும் ஓட்டுனர்களும் அவமதிக்கப்படுகின்றனர். அரசு வேலை என்பது அரசினுடைய வேலையாள்; அரசு என்பது மக்கள் என்பதை மறந்து அதிகார கர்வத்துடன் மக்களை மிரட்டுகின்றனர். இதை எதிர்த்து போராட அல்லது நீதி கேட்டு நீதிமன்றம் செல்லும் அளவுக்கு சாதாரண மனிதர்களிடையே வலிமையிருப்பதில்லை.மனித உரிமைகள் சாதாரண மக்களுக்கு மறுக்கபடுகிறது.
இன்றைய ஆட்சி நிலையை
பார்த்தால் மக்களை பாதுகாப்பதை விட்டுவிட்டு இறந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் என்ற அறிக்கை வாசிக்கும் ஆட்சியாகவே உள்ளது. உயிருடன் இருப்பவனுக்கு பாதுகாப்பில்லை இறந்துவிடுங்கள் பணம் தருகிறோம் என்ற நிலையில் ஆட்சி. நடந்துவரும் விபத்துக்களும் இதையே உணர்த்துகின்றன...

மக்களை கொன்று குவித்தவனுக்கும்,கொல்ல நினைப்பவனுக்கும் மனிதவுரிமையும்,சட்டமும் துணைநிர்க்கின்றது. சாதாரண மக்கள் வாழ்வதற்க்கான உரிமைக்கூட பணத்தாசை பிடித்த கயவர்களால் மறுக்கபடுகிறது.
நாமும் சொல்லுகிறோம் நாம்நாடு சுகந்திரம் அடைத்துவிட்டது,
மக்களாட்சி நடைபெறுகிறது என்று உண்மை உலகறியும் தமிழகத்திலேயே தமிழன் வதைக்கபடுகிறான்....காப்பாத்துங்க மை லாட் கொல்ல பாக்குறாங்க...
கல்வி விற்ப்பனைக்கு வைக்கப்பட்டுள்ள ஒரு பொருளாகவே மாறிவிட்டது .
ஆட்சியாளர்கள் பணம் சம்பாதிப்பதை குறிகோளகக்கொண்டு மக்களின் நலனை கருத்தில்கொள்ளாமல் செயல்ப்பட்டுவருகின்றனர் .அன்னிய முதலிடுகளை அனுமதித்து மக்களின் வாழ்வாதாரத்தையே அழிக்கின்றனர் .தன்னை தானே காத்துக்கொள்ளும் வலிமைபடைத்தவன் மட்டுமே கயவர்களை எதிர்த்து வாழ முடிகிறது ...
இயலாதவனுக்கு கொடுக்கவேண்டிய இலவசங்களை இல்லாதவனுக்கும் கொடுத்து; இருப்பவனையும் இல்லாதவனக்கி விட்டனர் .
Wednesday, 5 September 2012
எல்லாருமே திருடங்கதான்
" உங்கள்மேல் குற்றம் இல்லாதவர் முதல்லில் கல் எறியட்டும் " பின்பு ஆன்மீக வரியாக தோன்றியதால் மாற்றிவிட்டேன் அலசநினைத்த கருத்தையும் ஒரு நிகழ்ச்சி வடிவில் வளங்கியுள்ளேன்.
(பின்னனியில் முதல்வன் காட்சியை நினைத்துக் கொள்ளுங்கள் )
வணக்கம் நேயர்களே நம்முடைய "யாரேன தெரிகிறத" நிகழ்ச்சியின்
முதல் பதிவுக்கு அனைவரையும் வரவேற்க்கின்றேன் இன்று நாம் உரையாடயிருப்பது தமிழகத்தின் திருட்டுக்குடும்ப தலைவர் என மக்கள்
கருதும் மேதையுடன்.
புகழ் :வணக்கம் ஐயா,
எக்ஸ்: வணக்கம் .
புகழ் : ஐயா தமிழகத்திலேயே சிறந்த திருட்டுகுடும்பமாக உங்களை தேர்ந்தெடுத்திருப்பது பற்றி என்ன நினைக்கிறிங்க ?
எக்ஸ்: சந்தோசமா இருக்கு என்னோட வாரிசுங்க திருட்டுல உலகத்திலே முதலிடத்தில வருவாங்க.
புகழ் : ஆனா நீங்க இப்போவிட்டுல இல்ல இருக்கிறிங்க இதுக்கு யாரு காரணம் ?
எக்ஸ்:இந்த கூத்து காரனுங்கதான் ஆப்பு வச்சுட்டானுங்க, ஒரு பாலம் கட்ட போய் ஒருத்தன் சீனுக்குள்ள வந்துட்டன் .
புகழ் : கூத்துல கூடா உங்ககுடுப்பம் மத்தவங்கள காசுபாக்க விடலயாமே ?
எக்ஸ்:தம்பி தெரியாம பேசக்கூடாது நானும் கூத்துகட்டுனவந்தான் அப்புறம்
என்னோடபுள்ளங்க கூத்து கட்டுன தப்ப?
புகழ் :தப்பில்லைங்க ஐயா ஆனா அடுத்தவன் கூத்த ஓட விடமே பாண்டிக்காறதம்பி தட்டடிச்சாரமே ?
எக்ஸ்: கூத்து நல்லாயிருந்த ஓடும்,இன்னைக்கு கூத்து கூட அடுத்தவனுங்ககிட்ட இருந்து களவாண்டு தான் எடுக்கிறான், இந்த குத்து கரபயலுங்க ஒழுங்க வருமான வரி கூட கட்டுறதில்ல. கேட்ட கோட்டைக்கு
வர நிக்கிரானுங்க.
புகழ்:பக்கதுல நம்ம ஆளுங்களா கொன்னப்போ நிங்க பெருசா ஒன்னும் பண்ணலியே ?
எக்ஸ்: என்னால மரத்தடியில காத்து வாங்க தான் முடியும். அதுக்காக
சாகவா முடியும் ;அதன் இளவு நடந்தத மற(றை)க்க உலக நம்ம மாநாடு நடத்தினேனே போதாதா ?
அதுக்குமேலே என்னாலே ஒன்னும் மேலே சொல்ல முடியாது அதுதான் சீனு...
புகழ் :"யாரேன தெரிகிறத" நிகழ்ச்சியில் ஒரு இடைவேளை
"உலகத்தை நேசி ஒருவரையும் நம்பாதே உறங்கிய போதும்
ஒருக்கண்ணை மூடாதே "
"யாரேன தெரிகிறத" நிகழ்ச்சி தொடர்கிறது ...
புகழ் :ஐயா பாண்டியில பாறை களவாண்டிருகங்களே?
எக்ஸ்: நான் கொடுக்க வேண்டியது கொடுக்க சொன்னேன் கணக்கு தப்புல ஒரு போட்டி கொரன்சிடுச்சி அதான் புடிச்சிட்டானுங்க.
புகழ் :சமீபத்துல ஒரு கூத்துகூட உங்கள பத்திதான் விமர்சிச்சிருக்காங்க?
எக்ஸ்: தம்பி இப்போ ஓடிட்டு இருக்க சீனு கூட என்ன பத்தினதுதான்
விமர்சிக்கிரவனுக்கு வேற வேலையில்ல , நீங்க சொன்ன கூத்து ஒரு மொக்க கூத்து. பாக்க போனவங்கள நல்ல ஏமாத்தி காசுபாத்தானுங்க .
புகழ் :அடுத்தது என்ன செய்ய போறிங்க ?
எக்ஸ்: கல்ல நிரப்புது போல தெரியிது அடுத்த சீசணுல யப்படியாவது கோட்டைக்கு போகணும்.
புகழ் : கோட்டையில இருந்தப்போ முடியலேன்னு துனை வச்சீங்க இப்போ நல்ல தானே இருக்கிறிங்க ?
எக்ஸ்:அது தான் சீனு முதல்ல கேமராவ ஆப்பண்ணுய....
புகழ் :நேயர்களே ஐயா சொன்னதாலே இன்றைய நிகழ்ச்சியின் இறுதிக்கு வந்திட்டோம்.
இன்றய நிகழ்ச்சியில் பங்கு பெற்ற (எக்ஸ்) "யாரேன தெரிகிறத" உடனே தெரின்சிக்கணும்.... ம்ம்ம்....
மீண்டும் அடுத்த திருடரை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடை பெறுவது உங்கள் புகழ் ....
பி .கு:இங்கு குறிப்பிட்டுள்ள எக்ஸ் மட்டும் அல்ல நாம் எல்லாருமே திருடங்கதான் ...
அடுத்த சந்திப்பு : கூத்துக்காரன் தளபதி ......
Tuesday, 14 August 2012
ஹிரோ பஞ்ச் ஹிரோ
"மணந்தால் மாகதேவி; இல்லையே மரணதேவி", என்று தொடங்கிய தமிழ் திரைப்படங்களின் பஞ்ச்வசனம் பின்பு ரஜினியின் படங்களில் அதிக வரவேற்ப்பை பெற்று. இன்றைய ஹிரோக்களையும் பஞ்ச் வசனத்துடன்
வலம் வர வைத்துள்ளது. அப்படி பட்ட பஞ்ச் வசனங்களின் தொகுப்பே இந்த புத்தகத்தின் உள்ளாடக்கம்.
ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்படும்
பஞ்ச் வசனத்தில் ரஜினியின்
படங்களில் இடம் பெறும் வசனங்களே முதலிடத்தில் உள்ளது.
பஞ்ச் வசனங்களின் தொகுப்பு முதல் பாகம் 01-50 :
01. "நான் ஒரு தடவ சொன்ன, நூறு தடவ சொன்ன மாதிரி".
02."நாட்டாம! தீர்ப்ப மாத்தி சொல்லு ".
03."மன்னிப்பு .எனக்கு தமிழ புடிக்காத ஒரே வார்த்த மன்னிப்பு ".
04."வரும்ம்ம் ஆனா வராது ".
05.நாயகன்-"நீங்க நல்லவங்களா? கெட்டவங்களா ?".
"தெரில்லியே....".
06."எங்கள மாதிரி பசங்கள பாத்த உடனே புடிக்காது .
பாக்க பாக்க தான் புடிக்கும் ".
07."எங்களுக்கு ரிஸ்க் எடுக்கிறது எல்லாம்; ரஸ்க் சாப்பிடுற மாதிரி ".
08."ஏய் நான் தனியாளில்ல".
09."நிஜமதான் சொல்லிறியா....".
10."வட போச்சே ".
11."ஆண்டவன் நல்லவங்கள சோதிப்பான், ஆனா கைவிட மாட்டான்.
கெட்டவங்களுக்கு நிறையக்குடுப்பன், ஆனா கைவிட்டுருவான் ".
12."மாப்பு வைச்சிட்டானே.. ஆப்பு ".
13."என்வழி தனி வழி. தடுக்காத சிவிடுவேன் ".
14."கைப்புள்ள கேளப்புட வண்டிய ".
15."அதிகமா கோவப்படுற பொம்பளையும் ,
அதிகமா ஆசைபடுற ஆம்பளையும் நல்ல வளந்தத சரித்திரமே இல்ல".
16."என்னபாத்து சொல்லு என் கண்ணாபாத்து சொல்லு ".
17."நெற்றிகண் திறப்பினும் குற்றம் குற்றமே ".
18. "செல்லம். ஐ லவ் யு ".
19."என்ன கொடும சார் இது".
20."கோபால்... இல்லை இல்லை ".
21."என்னமகண்ணு சவுக்கியமா ".
22."சார் நீங்க எங்கேயோ போட்டிங்க".
23.எவ்வளவோ பண்ணிட்டோம் இது பண்ணமாட்டமா" .
24.பெண்களுக்கு எந்தஒரு பாதிப்பும் வரக்கூடாது".
25."என்ன பொண்ணுட இது" .
26. "இது எச்சரிக்கை இல்ல கட்டளை "
27."என் கேரட்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கிறியே ".
28."நீ முந்திகிட்ட நோக்கு நான் முந்தி கிட்ட நேக்கு ".
29."சபாஸ் சரியான போட்டி ".
30."உபதேசம் பண்ணுன யவன்கேக்குறான் உதச்சத்தான் கேக்குறான் ".
31."புயலடிச்சி போலச்சவன் உண்டு
ஆனா பூபதி அடிச்சி போளச்சவன் கெடையாது ".
32."அடங் கொப்பன் தமரபாரணியில தலைமுழுக ".
33."பேரைக்கேட்டாலே சும்மா அதிருதில்லே ".
34"மாமோய் நீங்க எங்கயிருக்கிரிங்க ".
35."போடா ஆண்டவனே எங்கபக்கம் இருக்கிறான் ".
36."நாங்கெல்லாம் சுனாமியிலயெ சும்மிக்க போடுறவங்க".
37"நாங்க அப்பவே அந்தமாதிரி இப்ப கேக்கவ வேணும் ".
38."வேணாம்... வலிக்குது... அழுத்திடுவேன்... அழுத்திடுவேன்".
39."கஸ்மிருல கொளுத்தின கன்னியாகுமரியில பத்திக்கும் பயரு.
அதன் ஸ்டான்ஸ் பவரு ".
40."வீ கேர்புல். நான் என்ன சொன்னேன் "
41."ஓங்கி அடிச்ச ஒன்னரடன் வேயிற்ட ".
42. "எனக்கு கோபம் வரத்து ".
43."வீட்டுல செல்லிட்டுவந்துட்டியா ".
44."நான் எப்ப வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது
ஆனா வரவேண்டியே நேரம் கரைட்ட வருவேன்".
45."இப்பவே கண்ணகட்டுதே ".
46."பண்ணிங்கதான் கூட்டாம வரும் சிங்கம் சிங்கிளாத்தான் வரும் ".
47."நல்ல வருவட".
48."நண்பெண்ட "
49."ஆணிய புடுங்க வேண்டாம் ".
50."மஸ்ட்டர் நேஸ்டு"; "ரெஸ்ட் ".
Monday, 13 August 2012
கல்வி-விற்பனைக்கு
கல்வி இன்றைய சூழ்நிலையில் மிகப்பெரிய வியாபாரப் பொருளாகவே காணப்படுகிறது. சிறிய குழந்தை முதல் பெரியவர்கள் வரை கல்வியை விலைகொடுத்து வாங்கவேண்டிய நிலை உருவாகி உள்ளது.
உயர்கல்விக்காக லட்சங்கள் செலவுச்செய்த
காலம்மாறி ஆரப்பக்கல்விக்கே பலலட்சங்கள் தேவைப்படுகிறது. அரசு கல்வியை தனியார்க
ளிடம் ஒப்படைத்ததின் விளைவாக தமிழகத்தில் இன்றுவரை 571 -- பொறியியல் கல்லூரிகள் தொடக்கப்பட்டு உள்ளன.
இதில் பல கல்லூரிகளில் போதிய வசதிகள் இல்லை. பயிற்றுவிக்கும் ஆசிரியர்களும்
முன்னனுபவம் இல்லாத தகுதியற்றவர்களா
கவே உள்ளனர். ஆசிரியர் தேர்ந்தெடுப்பதிலும்
பணதிற்க்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது.
பல ஆசிரியர்கள் பயிற்றுவிக்கும் முறைகளை கூட அறியாதவர்களாய் உள்ளனர்.
தமிழகத்தில் பள்ளிகூடங்களில் தொடக்கி கல்லூரிவரை கல்வி விற்ப்
பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் பல வெளிநாடுகளில் ஆரம்பக்
கல்வி முழுவதும் இலவசமாகவே வழங்கப்படுகிறது. தனியார்களால் நடத்தப்படும் சில கல்வி நிறுவனங்களில் உலகத்தரம் வாய்ந்தக்கல்வி வழங்கப்படுகிறது. இங்குள்ள ஆசிரியர்களும் திறமை வய்ந்தவர்களாகவே உள்ளனர். ஆனால் இங்கு கல்வி பெறுவது சாதாரண மக்களின்
கனவாகவே உள்ளது.
அரசுக்கல்வி நிறுவனங்களில் வேலை செய்யும் பலர் தங்கள் பணியை சரியாக செய்வதில்லை இதை அரசும் கண்காணிக்கவில்லை.இதனால்
அரசு வேலைக்காக முயற்சிப்பவர்கள் பலர்.
அரசின் கண்காணிப்பு இல்லாததின் விளைவாக
சமிபகாலமாக கல்விநிறுவனங்களால் மாணவர்
களின் உயிரும் பறிக்கப்பட்டுவருகிறது. பேருந்
துகளில் அளவுக்கு அதிகமாக மாணவர்களை கொண்டு செல்கின்றனர். விபத்து ஏற்ப்படும்
போதும் முறையான விசாரணை நடத்தபடாமல் பணத்தால் மூடப்படுகிறது .
கல்விநிறுவனங்களின் மேல் கூறப்படும் புகார்
களை வைத்து அதிகாரிகள் விலை பேசுகின்றனர்.
தகுதியில்லத நிறுவனங்களில் படித்து வெளிவரும் பலரும் தகுதியில்
லாதவர்களாகவே உள்ளனர். இதுபோன்ற தகுதியில்லாத மருத்துவர்க
ளால் உயிரிழப்பு ஏற்ப்பட்டு வருகிறது. மருத்துவதுறையில் மட்டும்
அல்ல மற்றதுறைகளிலும் இதேநிலை தான் உள்ளது.
மாணவர்களின் முறையீடு:
"கல்லூரிகளில் வாட்சிமேன் முதல் ஆபிசுல வேலப்பாகுறவன் வர மாணவர்களை மிரட்டுகிறான்".
"பணிமுடியாத கட்டிடங்களின் கிழேதான் வகுப்புக்களே நடத்துறக்க".
"கறுப்புபணத்த முதலிடு செய்யவே கல்லூரி ஆரம்பிக்கிரங்க"
"கல்லூரியில் நடக்கும் மனிதஉரிமை மீறல்களை பணத்தால மூடுறங்க"
"ஆதிகரமே இல்லாத டம்மிங்கள கல்லூரி முதல்வர்கள் மற்றும்
ஆசிரியர்கள்"
"எப்படி வெள்ளசட்ட போட்டவன் எல்லாம் நல்லவனில்லியே
அதேமாதிரி இப்போ கோட்டு போட்டவனும்".
"பணத்துக்காக கட்டாய தேவையில்லாத பயிற்சி வகுப்புக்கள்"
"10 ரூபா நோட்டு 30 ரூபா ;கேட்ட மார்க் இல்ல".
"நூலகமிருக்கு பயன்படுத்த அனுமதி இல்ல "
"கம்ப்யூட்டர் பீஸ் இருக்கு பாட நேரம் தான் இல்ல".
எனக்கு பணம் உனக்கு பட்டம் இந்த நிலை மாறுமா?
Sunday, 29 July 2012
2012-ல் தமிழ்த்திரைப்படங்கள்
2012-ல் வெளிவந்த தமிழ்த்திரைப்படங்கள் மக்கள்ப்
பார்வையில்
இந்த ஆண்டு தமிழ்த்திரையுலக முன்னனி நடிகர்களின் படங்கள் இதுவரை குறிப்பிடத்தக்க பெரிய வெற்றிப் பெறவில்லை...
ஆண்டின் தொடக்கத்தில் வெளிவந்த நண்பன் முதல்வெற்றியைப் பெற்றது. இந்தப்படம் 3இடியட்ஸ் படத்தின் பதிப்பாகவே வெளிவந்தது படத்தின் கதை மற்றும் திரைக்கதை வலுவாக இருந்தப்படம் வெற்றி உறுதி செய்யப்பட்டே வெளிவந்தது.
லிங்குசாமி வேட்டை படம் மூலம் வெற்றிக்கனி பறித்தார். படத்தில் மாதவன், ஆர்யா, அமலப்பால், சமிர நடித்திருந்தனர் படம் கமர்ஷியல் வெற்றிப்பெற்றது.
3-பாடல்கள் மூலம் பரபரப்பை ஏற்ப்படுத்தியபடம்
ஆனால் மக்கள் மனதில் பதியவில்லை,
தனுஷின் முந்தைய படங்களையே நினைவுப்படுத்தியது.
கிருஷ்ணாவின் நடிப்பில் வெளிவந்த கழுகு புதிய இயக்குனரின் பரிசாக தமிழ்த்திரைக்கு வழங்கப்பட்டது. ஒவ்வொருக்கட்சியும் சிறப்பாக படம்பிடிக்கப்பட்டு திரைகதையையும்,கதையையும் அலங்கரித்தது படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்திருந்தனர்.
இயக்குனர் ராஜேஷ் தனது மூன்றாவது வெற்றியை ஒரு கல் ஒரு கண்ணாடி மூலம் பதித்தார் கதை திரைக்கதையில் எந்தமாற்றமும் செய்யாமல் தனது முந்தய இருபடங்களை போலவே எடுத்திருந்தாலும் ரசிக்கும் படியாக இருந்தது. இந்த படத்தின்மூலம் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகன் ஆனார். ஹரிஸ் பாடல்களும் படத்திற்கு உதவின.
மனம் கொத்தி பறவை இளமை காதலை இனிமையாக சொன்னப்படம். படம் நகைசுவையுடனும் இனிமையான பாடல்களுடனும் வெற்றிக்கண்டது.
கார்த்தி ஹிரோயிசத்தல் சகுனி படம் மூலம் முதல் தோல்வி கண்டார்.
நான் ஈ மிகுந்த எதிர்பார்புகளுடன் வந்த படம் அதையும் தாண்டி வெற்றிமகுடம் சூடியது. இந்த படத்தின் மூலம் ஹாட்ரிக் ஹாட்ரிக் வெற்றி வசப்படுத்தினர் ராஜமௌலி. படத்தில் கிராபிக்ஸ் சரியாக பயன்படுத்தப்பட்டது.
பில்லா 2 பின்னனியிசை மற்றும் திரைக்கதையால் பெரிய வெற்றியை இழந்தது.
அம்புலி,காதலில் சொதப்புவது எப்படி,அரவான்,வழக்கு எண் 18/9,மெரினா
ஆகிய படங்களும் மக்களால் பாராட்டப்பட்டன...
ஆண்டின் இரண்டாம் பருவத்தில் எதிர்ப்பார்ப்புடன் வந்த பெரிய நடிகர்களின் படங்களும் வரிசையாக தோல்வியடைந்த (முகமூடி,தாண்டவம்,மாற்றான் )
சுந்தரபாண்டியன்,பிட்சா படங்கள் ஓரளவு வெற்றியை தந்தது. குறிப்பாக பிட்சா பாரட்ட பட வேண்டும் .
தூக்கி விட வந்த துப்பாக்கி துணையாகவே அமைந்தது , முருகதாஸ் இயக்கத்தால் படம் தோல்வியிலிருந்து தப்பித்தது , பாடல்கள் விஜய் படங்களில் வெற்றி அடைவது வாடிக்கை அது பிழைக்கவில்லை ,படத்தில் இராணுவம் பெருமை படுகிறது.
நீ தானே என் பொன்வசந்தம் பாடல்கள் எதிர்பர்க்கபட்டு எதிர்பார்ப்பு பூர்த்தி அடையாததால்; படம் தோல்வி அடைந்தது எதிர்பார்த்ததே...
நீர்பரவை, கும்கி, நடுவில கொஞ்சம் பக்கத்த காணேம் படங்கள் மக்களால் பேசப்படுகின்றன.
மொத்தத்தில் இந்த வருடம் தமிழ் சினிமாவுக்கு இனிக்கவில்லை ...

Subscribe to:
Posts (Atom)