அலசல், புத்தகம், விமர்சனம்.

Monday, 12 November 2012

ஒரு படம் காப்பியடிச்ச தப்பா -காப்பிக்காரன் vs அந்நியன்

 எல்லோருமே திருடங்கதான் பதிவைதொடர்ந்து நிகழ்ச்சி வடிவில் அடுத்தபதிவு  ""ஒரு படம் காப்பியடிச்ச தப்பா -காப்பிக்காரன் vs அந்நியன் "" இந்த பதிவில் பிரபல தமிழ் நடிகருடன் அந்நியன் நடத்திய கருடபுராண வதத்தை பதிவுசெய்கிறேன் .

  வணக்கம் நேயர்களே நம்முடைய யாரென தெரிகிறத நிகழ்சியின் புதிய பதிவுக்கு உங்களை வரவேற்கிறேன். இன்றைய நிகழ்சியில் அந்நியன் பிரபல நடிகரை காப்பியடித்த குற்றத்துக்காக கருடபுரனத்தின் படி  தண்டணை  வழங்க சந்தித்தபோது நடந்த  உரையாடலை உங்களுக்கு வழங்குகிறேன். 

"முந்தைய பதிவுகளை படித்தவர்களுக்கும்,பின்னுட்டம் தந்த பிரபல பதிவளர்களுக்கும் நன்றிகள் ..."


யாரென தெரிகிறத- 2

அந்நியன்: தமிழ் சினிமாவ வளரவிடாத குற்றத்திற்காக  கருட புராணத்தின்படி 100 தடவ நீ நடிச்ச படங்களா நீ பாக்கணும் ...

காப்பிகரான்: அண்ணா நான் யாருன்னு தெரியுமா ?

அந்நியன்: தெரியும்ட பாடு தமிழ்த்திரை படங்களை உலகஅளவில் வளரவிடதவன் நீன்னு பிரபல பதிப்பாளர்கள் எல்லோரும் சொல்லுரங்க. 

காப்பிகரான்: என்னமாதிரி டான்ஸ் ஆடுறவன் தமிழ் சினிமாவிலேயே கிடையாது தெரியுமா ? 

அந்நியன்:படத்தில நடிகிறதா டான்ஸ் ஆடுறதானு முதல படிச்சிக்க , நல்ல ஆடுவேன எதாவது டிவியில போய் போட்டிக்கு அடவேண்டியது தானே ? 

காப்பிகரான்:அங்க கால்லகட்டி தூக்கமாட்டங்க , படத்திலேன சும்மா ஆடு ஆடுன்னு ஆடுவேமில்ல ..

அந்நியன்: என்னடா படங்கள பறந்து பறந்து அடிக்கிற நீ என்ன சூப்பர்மேன ?

காப்பிகரான்: எங்க அப்பா சொல்லிருக்கரு; பொண்ண காப்பதற மாதிரி (கபடி)எல்லாம் படம் பண்ணினது போதும். இனி பண்ணுற  படங்கள்ல ஊர காப்பத்துறது (பறவை ), நாட்ட காப்பாத்துறது (மல்லு ) மாதிரிதான் இருக்கணும்னு.

அந்நியன்:  ஏன்டா அடுத்தவன் உழைப்ப  முழுசா காப்பிய அடிக்கிற படு ?

காப்பிகரான்: நீங்கதானே சொல்லியிருக்கிங்க. அஞ்சி பைசா திருடினாலும் அஞ்சி அஞ்சி பைசா திருடினாலும் ஒன்னுதான்னு. அதன் கொஞ்சம் காப்பி அடிச்சாலும் நிறைய காப்பியடிச்சாலும் காப்பிதானே ...

அந்நியன்: என்னடா சொல்ற, தெளிவா பேசுட; ஹிரோயின்கிட்ட பேசுற மாதிரி இருக்கு.

காப்பிகரான்:யாரோ எழுதிய புத்தகத்த பதிப்பாளர் காப்பியடிக்கிறாரு, அத காப்பியடிச்சி மேல்நாட்டுல படம் எடுக்குறாங்க, அத கொஞ்சம் மாத்தி இங்க பண்ணுரங்க அத தான் சென்னேன் .


அந்நியன்: ஏப்போதாண்ட   நல்லபடங்கள் நடிப்பா ????

யாரென தெரிகிறத- 2 சிறிய விளம்பர இடைவேளை பின்  தொடரும் ..

   "" உங்கள் மேல் குற்றம் இல்லாதவர் முதலில் கல் எறியட்டும் ""

"உன்கண்ணில் இருக்கும் உத்திரத்தை எடுத்துவிட்டு அடுத்தவன் கண்ணிலிருக்கும் தூசியைபார்"


நிகழ்ச்சி தொடர்கிறது....

அந்நியன்: ஏப்போதாண்ட   நல்லபடங்கள்  நடிப்பா ????

காப்பிகரான்: சமிபத்துல நான் நடிச்ச  சில படங்கள நல்ல நடிச்சிருக்கேன்  பாத்த தெரியும் (சிநேகிதன்,  காவல்காரன்,...)

அந்நியன்: கப்பியடிக்காத நடிக்கனும்ட  அது தான் உன்னோட படம் .

காப்பிகரான்: நீங்க ஒரு சட்டைய பாக்குறிங்க, அதேபோல புதுசா ஒரு சட்டை
தைக்கிறிங்க அது உங்க சட்டையா ? அடுத்தவன் சட்டையா ?

அந்நியன்: பண்ணுன தப்ப நியாயப்படுத்திறிய?

காப்பிகரான்: அப்படி பாத்த பாட்டை படம்கூட என்னோட ஏரியத்தான், காப்பியடிச்சவது படம்  ஓடனும் சார்  .

அந்நியன்: கருட புராணத்தின்படி நெற்றிக்கண் திறப்பினும் குற்றமே ...


காப்பிகரான்: இவ்வளவு பேசுற நீங்க முதல உங்களேட ஒர்ஜினல பாருங்க,
கண்ணு தெரியாம நடிச்சது(மலையாளம் மணி ) ,மூளைவளர்ச்சி  குன்றியவர  நடிச்சது(i sam ) ,அது பேரு காப்பிதானே ...


அந்நியன்: நான் அந்நியன் என்ன இந்த ஆட்டத்துல சேர்க்க கூடாது அது தப்பு
நீ போகலாம் ...

லைட் ஆப் 

  நேயர்களே யாரென தெரின்சிருப்பிங்க மீண்டும் அடுத்த நிகழ்ச்சியில் சந்திப்போம் ....

பி.கு : யாருமே புதுசா ஒன்னும் படைக்கல;  ஏற்கனவே இருக்கிற ஒன்னுலயிருந்து தான்  அடுத்தத உருவாக்குறங்க அல்லது கண்டுபுடிக்குறங்க  ...

அடுத்த சந்திப்பு : ACF ஆல் கடத்தப்பட்ட 15 பிரபலங்களுடன் ...

1 comment:

  1. Tải nhạc chuông hay miễn phí cho điện thoại ở đây: https://nhacchuonghay.info/

    ReplyDelete