அலசல், புத்தகம், விமர்சனம்.

Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

Monday, 5 October 2015

குற்றம் கடிதல் - திரையில் ஒரு பாடம்

குற்றம் கடிதல் -  திரையில் ஒரு பாடம்


நண்பர்களே ஒரு குற்றம் கடிதல் என்ற திரைப்படம்  ஒரு மனித வாழ்க்கையை தத்துருபமாக எடுத்துக்காட்டி வெளிவந்துள்ளது. அது  மட்டுமல்லாமல் திரைப்படம் எடுத்து வைத்திருக்கும் கேள்வியும் சாதாரணமான கேள்வி அல்ல வருங்காலங்களில் பெரும் பிரசினையாக உருவெடுக்க போகும் ஒரு விஷயம். 


"உலகம்  முழுவதும் குப்பையும், சாக்கடையும் நிறைத்திருக்கு; எல்லாத்தையும் சுத்தம் செய்ய முடியாது நம்ம காலுக்கு வேணும்னா செருப்பு போடலாம் "

இந்த வேலையை தான் வருங்காலங்களில் குழந்தைகளின் பெற்றோரும் ஆசிரியர்களும் செய்யவேண்டிய காட்டாயம்.



குற்றம் கடிதல் அலசல் ஒளிபதிவிர்க்கு இங்கு கிளக் செய்யவும்



Monday, 19 January 2015

ஐ அழகு என்றால்; பி கே அறியாமையா ?

 

 
 
நிச்சய வெற்றி என்று களமிறங்கிய இரண்டு படங்கள்  "ஐ  " மற்றும்  "பி கே" ஆனால் ...
 
  "ஐ" திரைப்படம்  எதிர்பார்ப்பை நிறைவேற்ற தவறியது, விக்ரமின் நடிப்புக்கு மாற்று கருத்தில்லை. ஆனால் ஷங்கரின் பிரம்மாண்ட படைப்பாக வெளிவரும் படங்கள், அணைத்து தரப்பாலும் பாராட்டபடும்; அதை ஷங்கர் மறந்திருப்பதாக தோன்றுகிறது. பிரம்மாண்ட படைப்புகள் கொடுக்க முன்வரும் ஆஸ்கர் நிறுவனத்தை படத்தின் வெற்றி யேசிக்க வைக்கும்.
 
விக்ராமின் கடும் உழைப்பையும், பணத்தையும் வீணாக்கி இருப்பதாகவே தெரிகிறது.விக்ரம் நடிப்பில் மிரட்டுவார் , அந்த நடிப்பை அந்த ஒப்பனை உருவம் மறைப்பதாகவே தோன்றுகிறது. படத்தில் வரும் அந்த உருவங்கள் படத்தை பார்பவர்களை முகம் மாற்ற வைக்கிறது.
 
பல கோடிகள் செலவு செய்து படம் இயக்கும் இவர்களுக்கு ரசிகனாக படத்தை 
பார்க்க மாட்டார்களா என்ன ?
" கதை திரைக்கதை வசனம் இயக்கம் " படத்தில் தமிழ் சினிமாவை அசைபோடுவது சரியாகத்தான் இருக்கிறது.
 
ஷங்கர் படங்களில் கதையிருப்பதில்லை, ஆனால் புதுமை இருக்கும் அந்த இடமும் காலியாக இருக்கிறது. கொடுத்த பணத்திற்கு முற்பதியை ரசிக்கலாம். லாஜிக் என்ற ஒன்றை மறந்தே உருவாக்கப்பட்டுள்ளது  அந்த உருவம் வரும் காட்சிகள் .

                   **********************************************


"பி கே"  திரைப்படம் செல்வராகவன் தவறவிட்ட இரண்டாம் உலகத்தை 
சாதித்துள்ளது. கற்பனைகளால் நிரப்பவில்லை குழந்தை பருவத்தில் வரும் அறியாமை அழகுபடுத்துகிறது.
 
மனிதன் பல மொழி,மதம்,இனம் என  வாழும் இவ்வுலகில்; மனதால் பேசும் மனிதர்கள் இல்லை என்பதை நினைவுபடுத்துக்கிறது. மனிதனை பிளவு படுத்தும் வேற்றுமைகளுக்கு அடையாளம் கேட்கிறது.
 
அமீர்கான் நடிப்பில் மனதை கவருகிறார். படமுழுக்க சிரித்து மகிழ்ந்தாலும்; படத்தில் ஒவ்வொரு காட்சியும் சிந்திக்க வேண்டியவை.

இது ஒரு மதத்தை இழிவு படுத்தும் படமல்ல மனிதனை மனிதனாக காண தடைகள் உள்ளன என காட்டும் படம்.
 
பி கே இயக்குனரின் முந்தய இரண்டு படங்களும் தமிழுக்கு மாற்றப்பட்டு கல்லக்கட்டின ஆனால் இந்த படத்தை தமிழுக்கு எடுத்து வருவார்களா என்பது சந்தேகமே..

                                                                                                                தொடரும்.....

Tuesday, 30 December 2014

2014 -ல் தமிழ் சினிமா ஒரு கண்ணேட்டம்


                              2014 -ல் தமிழ் சினிமா ஒரு கண்ணேட்டம்


காதல் காவியங்கள்  :
மேகா -
அமரகாவியம்  -
திருமணம் என்னும் நிக்கா -

புதிமை :
ஜிகிர்தண்டா -
கோச்சடையன் -
கதை திரைகதை வசனம் இயக்கம் -


இயக்குனர் வாழ்த்துக்கள் :
தெகிடி -
கோலிசோட -
மஞசபை -
சைவம் -
சலீம் -
ஜிகிர்தண்டா -
நாய்கள் ஜாக்கிரதை -

வெற்றி கோடு :
  
ஜில்லா
வீரம்
அரண்மனை
கத்தி
பூஜை
லிங்கா
ஜிகிர்தண்டா
வேலையில்ல பட்டதாரி
மெட்ராஸ்
கோலிசோட
மான்கரதெ


ஏமாற்றம்  :

அஞ்சான்
கோச்சடையன்
சிகரம்தொடு
யான்




                                                                     தொடரும் ....


 

Friday, 21 November 2014

கத சொல்ல போறேன் ...

தன் வாழ்நாளின் கடைசி நிமிடங்களை மனிதனால் கணக்கிட முடிந்தால்...?

இறந்தபின் உடலை விட்டு பிரியும் உயிர் போகும் இடம் அறிந்தால் ...?


மனதத்துவ விஞானி வில்ப்ரெட் ஒரு புது விதமான உயிர்களின் வாழ்நாள் கணக்கிடும் தத்துவத்தை கண்டுபிடிக்கிறார் . தான் கண்டுபிடித்த கண்டுபிடிப்பை உலகிற்கு அறிவிக்கும்  முன் அதை நிருபிக்க பல பிரபலங்களின் வாழ்நாளை  ஆராய்கிறார் . அதில் சினிமா ஸ்டார் ஆன மேல்டோன்  மிககுறைந்த  வாழ்நாளில் முதல்லிடம் பிடிக்கிறார். அவரது வாழ்நாளில் மீதம் இருப்பது. ஏழு நாள்கள் .


தனது ஆரழ்ச்சி முடிவை மேல்டோன் னிடம் விளக்குகிறார் வில்ப்ரெட்; தன் கண்டு பிடிப்பை  உலகிற்கு விளம்ம்பரபடுத்த உதவும்மாறு கேட்கிறார் வில்ப்ரெட்



தனது வாழ்நாள் முடிவை அறிந்து கொள்ளும் மேல்டோன் தான் வாழ்நாளில் சாதிக்க நினைத்ததை ஏழு நாள்களில் முடிக்க நினைக்கும் துடிப்போட்டம்...

தொடரும் ...

Wednesday, 24 September 2014

நல்லது கேட்டது நாலுபேருக்கு தெரியனும் இல்ல ...

* லிங்குசாமி இரட்டை வேடன்னா எம்.ஜி.யார் காலத்திலேயே இருக்காரப்பா.

*ஐ  ட்ரைலர் பார்த்தா விக்ரம் பின்னிருக்காரு போல  தெரியுது.

*திரைப்படத்தின் கடைசி பதினைத்து நிமிடங்கள் முக்கியமானது அதில் இயக்குனரின் திறமை வெளிப்படுகிறது. (ஜிகிர்தண்டா ,மங்காத்தா ,பிட்சா )

*படத்தில ஹிரோயின் நடிச்சி  காட்டி  போட்டிபோடுவாங்க ; இப்ப காட்டுறதில மட்டும் தான் போட்டி போடுறாங்க.

*சிவாஜி குடுபத்தில இருந்து வந்த பையன் படகள அடுகிறனே தவிர முதல் படம் தான் இன்னும்.

*தம்பி ஆக்ஸனு  பறக்காம கதைகளே நடிங்கபா, எல்லேருமே சூப்பர் ஸ்டார் ஆக முடியாது.

*மலையாள திரையலகில் வெற்றி பெறும் படங்கள் பலவற்றின் தலைப்பு ஆங்கிலத்தில் உள்ளன.(bangalore  days, how old are you,...)

*கன்னட திரையலகம் பவர் திரைபடத்தின் மூலம் அடுத்த கட்ட வியாபார உலகத்தில் கால் வைத்துள்ளது.

*"எக்ஸ்பண்டப்ள்" போல் தமிழிலும் எக்ஸ் ஹீரோக்கள் சேர்த்தல் நல்லாத்தான் இருக்கும் தயாரிப்பாளர் கிடைப்பதுதான் கடினம்.

*பிரபல இசையமைபாளர்கள் இசை கூட இரைச்சல் ஆகிவருகிறது.
 

Thursday, 14 August 2014

இருபதாம்நுற்றாண்டிலும் வெள்ளையனே வெளியேறு...



வெள்ளையனே வெளியேறு  என்ற குரல் புதுமை படுத்தபட்டுள்ளது.
வெள்ளையனே வெளியேறு என்றால் வெள்ளை நிறம் கொண்டவர்களை வெளியேற சொல்வதில்லை. வெளிநாட்டவரின் அதுமிறலையும், அடக்குமுறைகளையும் வெளியே துரத்துவது.

இன்று  சுகந்திர தினா விடுமுறை. ஆனால் இன்றும் வெளிநாட்டவனின் வேலைக்காக நம் மக்கள் ஓயாது உழைக்கின்றனர்.

தேசியகீததிலிருக்கும் விடுதலை என்னவே இம்மக்களை சேரவில்லை போலும்; அல்லது இந்த இடங்கள் இந்தியாவில் இல்லையே என்னவோ !
இங்குநடப்பதை பார்த்தல் நவீன  முறையில் வெளிநாட்டவன் ஆட்சி


வெள்ளையனே வெளியேறு தொடரும் ...

Monday, 16 June 2014

வருவதற்கு முன் பொம்மைபடம்; வந்தபின் புதுமை படம்

"வருவதற்கு முன் பொம்மைபடம் வந்தபின் புதுமை படம்", கோச்சடையன் படம்  சாதித்திருப்பது  இதுதான். 


சாதாரண அனிமேஷன் படமாக கருதப்பட்ட இந்தப்படம், வருக்கால தொழில்நுட்பத்தின் பாதையாக அமைத்துள்ளது. படத்தை ஒருமுறையாவது பார்க்காதவர்கள் இல்லை.
இந்திய சினிமாவின் பரிமாணமாறுதலில் மயில் கல்லாக இருக்கபோகும் படம். ஆரம்பத்தில் அனிமேசன் உணர்வு மனதை விட்டு மாற மறுத்தாலும்; ரஜினி அதை சரிசெய்துவிடுகிறார். 

படத்தில் குறைகள் உள்ளன . இருப்புனும் நிறைகளை பட்டியலிட வெடியதருணமிது .

* ரஜினி இது ஒரு நடிக்கரின் பேரல்ல சினிமாவின் ஒரு ப்ப்ரண்ட்  , இந்தியவை தாண்டி இந்த ப்ரண்ட் விற்பனை ஆகும்.

*நாகேஷ் கதாபத்திரம் வருங்கலத்தில் மறந்த நட்சத்திரங்கள்  கதாபத்திரங்கள் ஆக போவதை உறுதிபடுத்துகிறது. (ராஜமொலி ஒரு பாடலில் NTR யை ஆடவைத்திருந்தார்)

*இசையில் A .R  தவறவிடவில்லை அது போர்காட்சிகளில் தெரிகிறது. அனிமெசன்படதில் பாடல்களா ! சரியாக பயன்படுத்தபடுகிறது.

*Lord of the rings படத்தில் கையாளபாடுவதைபோல் அனிமேஷன் விலங்குகள் 3D யில் பிரமிக்க வைக்கின்றன.


Monday, 26 May 2014

அசத்தியது அ .தி.மு. க !!!..

   மதவாத கட்சியாக கடந்த சில தேர்தல்களில் ஓரங்கட்ட பட்ட பாரதிய ஜனதா கட்சி தனக்கென்று ஒரு நிலையான ஓட்டு சதவிகிதத்தை கொண்டிருப்பது மறுக்கமுடியாத உண்மை.

  அதை போலவே விஜயகாந்த் தன் ரசிகர்களிடத்திலிருந்து ஒரு நிலையான ஓட்டு சதவிகிதத்தை கொண்டிருப்பதும் உண்மை . இன்றைய தமிழக அரசியலில் புதிதாக முளைத்த கட்சியாக ஓரங்கட்ட படாத அளவுக்கு ( தே. மு. தி. க) வரவு உள்ளது.

  கடந்த சட்டமன்ற தேர்தலில் (தி மு க ) வின் பயங்கரமான பிரச்சாரத்தை மீறி
புதிய கட்சியின் மேல்(ரசிகர் அல்லாதா   மக்கள் நம்பிக்கை கொண்டனர் ).
(தி. மு க )வின் அம்புகள் ஏனோ (தே  மு தி க ) வை  பெருமளவு துளைக்கவில்லை.

ஆனால் ;
இந்த யூகங்கள்  எல்லாம் கன்னியாகுமரியை தவிர எங்கும் பலிக்கவில்லை.

அசத்திவிட்டது  அ .தி.மு. க !!!..

Monday, 14 April 2014

வர+தட்சணை =வரதட்சணை வாங்கலாம் !



திருமணங்கள் செர்க்கதில் அல்ல ரோக்கதில் நிச்சயக்க படுகிறது. என்ற பெண்விட்டாரின் குற்ற சாட்டு நியாமற்றது. காரணம் இன்று திருமணங்கள் வெறும் மன பொருத்தத்தை மட்டும் பார்த்து நடப்பதில்லை ; இங்கு பார்க்கப்படும் பல்வேறு பொருத்ததில் பணமும் முக்கிய பங்கு வகிப்பதில் தவறில்லை காரணம், வாழ்க்கை என்ற வண்டிக்கு  பணம் என்ற எரிபொருள் அவசியமானது.

ஆண் -பெண்  இருவரும் பணிக்கும் வாழ்க்கை என்னும் வாகனத்திற்கு தங்களது இருவரது வருமானம் சம  சரியாக  கலப்பதில் தவறில்லை.  ஆண்  பெண்ணுக்கு நிகராக கருதப்படும்போது. தான் படித்த படிப்பு, அழகு , குடும்ப பாரம்பரியம் என்று பார்க்கும் பொருத்ததில் பணமும் சேர்க்கபடுகிறது. 


பெண் விட்டாருக்கு வர தட்சணை கொடுக்கவேண்டும் என்ற பெண் புரட்சியின் வாதம் சற்று உற்று நோக்க வேண்டியது, இங்கு  பெண்கள்  விலை பொருளா  என்ன  ?

பெண்வீட்டர்  பார்க்கும் ஆணின் பொருளாதாரத்தையே ஆண்வீட்டரும் பார்க்கின்றனர். இங்கு கட்டாய படுத்துவதை வேண்டுமானால் தவறேன்கலாம். ஆனால் கமிட் மெண்ட் ஆகவே அரேஞ்சி மேரேஜ் உள்ளது.





Saturday, 22 March 2014

இரண்டாம் உலகம் ரிட்டன்ஸ்

    செல்வராகவன் படங்களில் இரண்டாம் உலகம் படம் கற்பனை வழம் குன்றி காணப்பட்டது. நல்ல கதை கரு  அதில் பழைய கால அரச வாழ்க்கையே மேலோங்கி இருந்தது. புதுமையான உலகம் சற்று சறுக்கிவிட்டது. என் கற்பனையை அந்த கதை கருவில் தூவி விட்டுபார்கிறேன். " இரண்டாம் உலகம்    ரிட்டன்ஸ் "



நமது  உலகத்தில் உள்ளது போல் அங்கு எந்த சட்டதிட்டங்களும் கிடையாது.
மனிதர்கள் ஒரே தரம் உயர்ந்தவன் தலைவன் இல்லை. சிலவித்தியசமான நாட்களில் பிறக்கும் அபூர்வ குழந்தைகளை கொன்றுவிடுகின்றனர். மற்ற படி அவர்களுக்குள் எந்த ஒருமைப்பாடும் இல்லை. மனம் போல் வாழ்க்கை.

அவர்களின் சபகேட்டில் முக்கியமானது. தூங்கி விழிக்கும்போது முந்தய தினம் நடந்த சம்பவங்கள் மனதில் நிலைப்பதில்லை.

அங்கு பிறக்கும் ஏழு மனித தன்மைபடைத்த அபூர்வங்கள் அவர்களுக்கு கடவுளாக நினைக்கிறார்கள். 

மனிதன் வெற்றி பெற்றான ? அபூர்வ பிறப்பை இனம் கண்டு அளித்தார்களா என்பது முடுவு .
தொடரும் ...

Friday, 24 January 2014

ட்ரை ஒரு செயல் படாத அமைப்பா ?


   ட்ரை  இந்தியாவில் தொலைதொடர்பு குற்றங்களை குறைப்பதற்காக அரசால் இயக்கப்படும் அமைப்பு; இது இன்று இயங்குகிறதா? என்பது சந்தேகமாகவே உள்ளது. நாளுக்கு நாள் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது இதைத்தான் காட்டுகிறது .


 "மொபைல்நம்பர் போர்டப்ளிட்டி"பிரச்சினை அதில் முதன்மையானது. தொலைதொடர்பு நிறுவனத்தால் பாதிக்கப்பட்டு தங்களுடைய சேவை நிறுவனத்தை மாற்ற நினைக்கும் மக்களின்  ஒரு சதவீதம் கூட அந்த வசதியை பயன்படுத்த முடிகிறதா என்பது சந்தேகமே!


  மக்களின் போர்டபில் முயற்ச்சி பலனளிக்காமல்          இழுத்தடிக்கப்படுகிறது.
தொடர்ந்து அதன் பின்னால் மாதகணக்கில் அலைய முடியாதவர்கள், தொடர்ந்து தங்களுடைய பழைய நிறுவனத்தின் அக்கிரமங்களை அனுபவித்து வருகிறார்கள். பதினைத்து நாட்களில் "போர்ட் கோடு" என்னவோ காலாவதி ஆகிவிடுகிறது. பயனாளிகளின் பிரச்சினை காலம்  கடந்து வருகிறது. 

போர்ட் விண்ணப்பம் நிராகரிக்கப்பட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கையாளும் தந்திரங்கள்; தவறான போர்ட்கோடு, வாடிக்கையாளர் மறுபரிசிலனை, போர்ட் கோடு காலாவதியாகி விட்டது, தங்களின் புதிய சேவை நிறுவனத்தில் பிரச்சினை;  என்று நீள்கிறது ....

ட்ரை  செயல்படுமா ???


Saturday, 12 October 2013

கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏமாற்றம்

இந்தியாவில் கிரிக்கெட் மறுபெயராக கொண்டாடப்படும் சச்சின் ,வருகிற தொடருடன் முழுமையாக கிரிகெட் லிருந்து விலக போவதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது  .... 

கிரிகெட் ரசிகர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வரும் நிலையில் ,
சச்சின் விளையாட்டை பார்க்க ஒரு கூட்டம் உள்ளது , அவர்களும் விடைபெறும் நேரம் வந்துவிட்டது.  


சச்சின் கிரிக்கெட் -ல்  ஒரு யுகமாக கொண்டால் அது மிகையாகாது.பதினாறு வயதில் களம்கண்ட சச்சின், உலகின் பந்து விச்சாலர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். இன்றும் பந்து விச்சாளர்கள் மனதில் ஒரு கலக்கம் இருப்பது மறுக்கமுடியாத ஒன்று .

தான் விளையாடும் ஒவ்வொரு தினத்திலும். ரசிகர்களுக்கு எதிபார்க்க தக்க சாதனை மய்கல்காளுடனே களமிறங்கும் ஒரே வீரர்.சச்சினுக்காக உருவாக்கப்பட்ட ஒவ்வொரு மயில் கால்களையும், தாண்டுவது இயலாத ஒன்று .இளம் வீரர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் சச்சின் கிரிகெட் -ன் அடையாளம் .


இருநூறு என்பது  கிரிகெட்டில் சச்சினின் இமயம் அந்த இமயத்தை எல்லா வடிவிலும் முதல் முதலில் தொட்டவர் சச்சின் ...
 வயதை குறித்து  விமர்சனங்கள் எழுந்த போதெல்லாம் விளாசி தள்ளியிருக்கிறார்.

கிரிகெட் காண்போரின் எண்ணிக்கை மட்டும் வெகுவாக குறையும் என்பதில் ஐயமில்லை ...

Friday, 7 December 2012

கஸ்டமருக்கு ஆப்பு; டாட்டா டோகோமோ டாப்

    தாங்க முடியலட இவங்க தொல்ல, கொள்ளையடிக்க புது புது ரூட்டு போடுறாங்க. ரூம் போட்டுதான் யேசிக்கிறாங்க. ஒரு புது கணைசன் எடுத்து நான் பாட படுறேன். சிரிச்சிக்கிட்டே கணைசன் குடுத்தனுங்க.ID சரியில்லா போட்டோ சரியில்லன்னு அலைய வேண்டாமேன்னு நேர டோகோமோ ஷோரூம்க்கு போய்தான் கணைசன் எடுத்தேன் ஆரம்பம் என்னவோ நல்லா தான் இருந்திச்ச்சி. சிம் ப்ரீ; 20 ரூபாய் ப்ரீ டாக்டைம் .
  
 ஒரு வாரத்துக்கு அப்புரம்தான் ஆரம்பிச்சாங்க ஆப்பு     அடிக்கிற             வேலைய. முதல் ஆப்பு நான் செலக்ட் பண்ணுன பிளான்ல இருந்திச்சி (மூணு மாசத்திற்கு ஒரு நிமிஷம் 1/2 பைசா இந்தியா முழுதும்; விலை 43 ரூபாய் ) நான் பண்ணற காலுக்கு சரமாரியாக சர்ஜிபண்ண அரபிச்சாங்க ஒரு வழிய எழுதி வச்சி கண்டுபுடிச்சிட்டேன். ( ஒரு நிமிசத்துக்கு ஒரு பைசா , 1.5 பைசா ,2 பைசா ...)
கஸ்டமர் கேருக்கு கால்பண்ண ஏதோ இங்கிலீஷ் காரனுக்கு புறந்தவன் மாதிரி ப்ரோனன் செச்சன் (சரியாதான் போசுனான அல்லது ஓபி அடிசனணு தெரியல, இந்தியன் கஸ்டமர்கிட்ட பேசுறோம் மறதுடுவான்களே )மொத்ததில ஒன்னும் புரியல. நடைய கட்டினேன் ஷோரூம்க்கு.
சிம் எடுக்குபோதிருந்த புன்னகை குறைத்தே இருந்தது . பிரச்சினைய சொன்னேன் . "சாரி சார் நாங்க போஸ்ட் பெய்டு மட்டும்தான் சால் பண்ணுவோம்."
 "சார்  அவன் பேசுற இங்க்லீஷ் புரியல. தமிழ் சப்போர்ட் இல்லையாம் ."
"சாரி நாங்க ஒண்ணும் பண்ண முடியாது. நீங்கதான் பாத்துக்கணும்." (இதே ரேக்கடே திரும்ப திரும்ப ஓடிச்சி )
தமிழுக்கு உதவ ஒரு தமிழர்  முன்வந்தார் . கணினியிலிருந்த தகவல்களை பரிசோதித்து நான் சொன்னதை உறுதி படுத்தி 
"மீண்டும் முயற்சி செய்ங்க சரி  ஆகவிடால்   திங்கள்கிழமை வாங்க நான் உதவுகிறேன்" (ஒரு ஆறுதல் பேச்சு )
 மறுபடியும் கஸ்டமர் கேருக்கு கால் பண்ணுனேன். " நாங்க புண்ணியவான்கள் அப்படி எல்லாம் பண்ண மாட்டோம். நீங்க ஒரு தடவ சரிய செக்பன்னுங்க சார். " 
சரி ஆகிடமோ என்ற  நம்பிக்கையில பாத்த, இல்ல. திரும்பவும் கஸ்டமர் கேர்  (இந்தமுறை  கொஞ்சம் கடுப்பாகவே நான் ) பதில் வேறமாதிரி இருந்திச்சி "உங்களுடைய பிளான் சின்னதா செஜ் ஆகி இருக்கு. ("ஒவ்வெரு நாளும் முதல் ஒரு நிமிசத்திற்கு  மட்டும் 2பைசா. ") "இல்ல சார் என்கிட்ட sms கூட இருக்கு இந்தியா முழுதும் 1/2 பைசா தான்" . அது "மாறிடிச்சி சார்". ஒரு வாரமா  நடந்த பஞ்சாயத்து ஒரு வழிய முடிஞ்சி அதுக்குள்ளே காசு தண்ணிய கரன்சிருந்தது .
 அடுத்த ஆப்புகள்  வேலிவு அடர் சரிவிஸ் மூலமா வந்திச்சி. ஆக்டி வேசன் பண்ணாத சர்விசுகள் அதுவாக ஆடிவேசன் அகுறதும். 2 முதல் 15 ரூபா வரைக்கும் காணாம போறதும், கஸ்டமர் கேருக்கு கல்பண்ணி டி  ஆடிவேர்சன் பணுறதும்.இப்படியே போய்கிட்டிருக்கு. முதல்ல ரீ பண்டு  பண்ண மறுத்தவங்க.
 இப்போ வேற வழியில்லாம அப்பப்போ பண்ணுறக்க  (நான் தெரியாம தான் கேக்கிறேன்  எனக்கு  தினமும் balance செக் பண்ணுறதுதான்  வேலைய? )

பிரீ பெய்டு தான் இப்படினு போஸ்ட் பெய்டு பக்கம் பாத்த அவங்க பாடு நாயிக்ககூட  கண்ணீர்வடிக்கும். எனக்காவது காசு போட்டத்தான் ஆப்படிப்பாங்க.          ஆனாஅங்க லிமிட் செஞ்சி பண்ணி சொல்லாமலே
ஆயிரகணக்கில பில் அனுப்புறாங்க இவன்னுங்க பின்னாடி பஞசாயத்திற்க்கு அலைவதே வேலைய போகுது.(டூ நாட் டிஸ்டப் ஆக்டிவ் பண்ணியும்  இதுல விளம்பர கால்களின் தொல்லவேற ...


பி.கு : இங்கு குறிப்பிட்டுள்ள அனைத்திற்கும் தகுந்த ஆதரங்கள் என்னிடம்
உள்ளது.   

Saturday, 24 November 2012

முகமூடி மனிதர்களின் சதுரங்க ஆட்டம்





 மனிதவாழ்வில் உண்மையான மனிதர்களை பார்ப்பது அரிதினும் அரிதாகிவிட்டது மனிதர்கள் சுயலாபத்திற்காக போலி முகமுடிகளுடனே நடமாடிக்கொண்டு  இருக்கிறார்கள். சதுரங்க ஆட்டத்திற்கும் மனித வாழ்க்கைக்கும் ஒரு சிறிய வித்தியாசமே உள்ளது. ஆனால் அதை அவ்வளவு எளிதில் அடையாளம் கண்டுக்கொள்வது கடினம்.

  சதுரங்க ஆட்டத்தில் இரண்டு நிறங்களே உள்ளன. ஆனால்  மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருநிறம். மனிதர்களை அடையாளம் கண்டுக்கொள்வதும் கடினமே. போலி புன்னகையுடன் மனிதர்கள் ஆடும் சதுரங்க ஆட்டத்தில் முகமூடிக்கு உள் உள்ள உள்ளத்தில் புதைந்துள்ள வஞ்சம்,பொறமை, இவற்றை அடியாளம் காணவேண்டும். எதிரில் நிற்கும் பகைவனைவிட அருகில் இருக்கும் துரோகியே ஆபத்தானவன் . எதிரில் இருப்பதால் ஒருவன் எதிரி அல்ல ,அருகிலிருப்பதாலே ஒருவன்  நண்பனும் ஆகிவிட முடியாது.


  சதுரங்க ஆட்டத்தில் எப்படி களத்தில் உள்ள ஒவ்வொரு காய்களின் அடுத்தடுத்த நீக்கங்களை  கணிப்பத்து முக்கியனானதோ; அதைவிட முக்கியமானது, நாம் வாழும் உலகில் நாம் நகரும் பொழுதுகள். இங்கு கருப்பு வெள்ளை வித்தியாசம் தெரிவதில்லை கருப்பு மனிதர்கள் வெள்ளை முகமூடியுடனும், வெள்ளை மனம் படைத்தவர்கள் கருப்பு சாயத்துடனும் வெளியில் தோன்றலாம் .

  அன்று முதல் இன்றுவரை  பழைய வாழ்க்கையை மறந்து வாழ்வது  மனிதர்கள் இயல்பாக உள்ளது. அடுத்த நொடி தனக்குரியதில்லை. என்பதை எண்ணாமல் தனக்கு மேலிருப்பவனைக் கண்டு அழுவதும்; கீழிருப்பவனை கண்டு சிரிப்பதுமே மனிதனின் மனம். மனிதனை மனிதனாக பார்க்காமல் சாதி, வசதி, மதம், இனம், மொழி இவற்றை கொண்டு வேறுபடுத்தி பார்க்கின்றனர். காலங்கள் மாறும் காட்சிகளும் மாறும் .

  மனிதர்களின் அக எண்ணங்களை கணிக்க கற்றுக்கொள்ள வேண்டும். புறத்தில் கட்டும் முகமூடியை  பிரித்தறிய வேண்டும். வாழ்கையில் ஒவ்வொரு நொடியும் முக்கியமானதே. இங்கு சண்டியர்களை விட சாணக்கியர்களே  பலம் வாய்ந்தவர்கள் ...




Tuesday, 9 October 2012

அஜித்-ஐ ரசிக்கிறேன் அஜித் ரசிகனை எதிர்க்கிறேன்

     சிலரின் செயல்பாடுகளும் வாழ்க்கையும் நம்மை பிரம்மிப்படைய வைக்கும் அந்தவகையில் அஜித் செயல்களும் பலரை வியக்க வைப்பதாகவே உள்ளது ,
மனிதன் தவறுகள் செய்பவன் ஆனால் தன்னிலை மாறாமல் தன்னம்பிக்கையுடன் தன்னடக்கத்துடனும் வாழ்பவனை தலைவனாக கொண்டு பின்தொடர்வது இயல்பு. அந்த வகையில் அஜித் தனிமனிதனின் வெற்றிக்கும், உழைப்புக்கும், உயர்விற்கும் ஒரு உதாரணமாகவே அறியப்படுகிறார் .


   இன்றைய நிலையில் ஆட்சியாளர்களுக்கு சலாம் போடும் சினிமா  மனிதர்களின் மத்தியில் தன்னிலையை உலகறிய தெளிவு படுத்தியவர்அஜித்.
 நட்சத்திரங்களின் குடும்ப வாழ்க்கை தள்ளாடும் இன்றைய சூழலிலும்  நட்சத்திர தம்பதிகளாக சிறப்பாக குடும்ப வாழ்க்கையில் வெற்றிகண்டவர் .

 அரசியல் ஆதாயத்திற்காகவும் புகழுக்காகவும் ஏழைகளுக்கு உதவும் மனிதர்களில்; உலகறியாது உதவுபவர். தன்  சினிமா  அடை மொழியையே உதறியவர். 

   இந்தயாவில் வெற்றி வீரனாக இருந்த போதும், தோல்வியில் துவண்டபோதும், கிரிக்கெட் வீரர் கங்குலிக்கு அடுத்ததாக நிலையான  ரசிகர்களின் ஆதரவை பெற்றிருப்பவர். தன் ரசிகர் மன்றங்கள் சில தன்னுடைய கொள்கைகளுக்கு  எதிராக செயல்படுவதாக தோன்றியதால் அதை கலைத்தவர் .

         இத்தனை   பெருமைக்குரிய   மனிதரின் ரசிகர்கள்   பலருக்கு   அவருடைய 
பிறரைமதிக்கும் பண்பும்,  மனிதாபிமானமும், வெற்றி பெறுபவர்களை பாராட்டும்   நல்குணமும் இருப்பதில்லை . அஜித்தின் தோல்வி படங்களை ஒப்புக்கொள்ளும் மனப்பக்குவமும் சிலரிடமே உள்ளது .

 தமிழ்த்திரையுலகில் நடிகர்திலகத்திற்கு பின் நடிப்பில் முத்திரை பதித்தவர்களில் அஜித்தும்  ஒருவர் . ஆனால்    அஜித்            மட்டுமே       என்பது
ஏற்ப்புடையது அல்ல. அஜித்தின் சிட்டிசன் ,வாலி ,வரலாறு போன்ற படங்கள் அஜித்தின் நடிப்பு திறமையை வெளிப்படுத்தின ...

         ஒரு சிறந்த      மனிதனின்    ரசிகனாக   இருந்து   கொண்டு    மற்றவர்களை
போல், அடுத்தவரின்  படைப்பையும் வெற்றியையும் தரக்குறைவாக விமர்சிப்பத்தும்; ஏற்றுக்கொள்ள மறுப்பதும்,நடிகனின் நடிப்பை பார்க்காமல்  நடிக்க வேண்டிய திரைப்படங்களில் ஆடதேரிய வில்லை என மற்றவர்கள் அஜித்தை விமர்சிப்பதுக்கு  நிகராகவே உள்ளது .இதனால் அஜித்தை ரசிக்கும் பலரால் அஜித் ரசிகர்களை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை......



Monday, 13 August 2012

கல்வி-விற்பனைக்கு

     கல்வி  இன்றைய சூழ்நிலையில்  மிகப்பெரிய வியாபாரப் பொருளாகவே  காணப்படுகிறது.    சிறிய   குழந்தை   முதல் பெரியவர்கள் வரை கல்வியை விலைகொடுத்து வாங்கவேண்டிய நிலை உருவாகி உள்ளது.

 
உயர்கல்விக்காக     லட்சங்கள்     செலவுச்செய்த
காலம்மாறி   ஆரப்பக்கல்விக்கே  பலலட்சங்கள்  தேவைப்படுகிறது. அரசு  கல்வியை     தனியார்க
ளிடம் ஒப்படைத்ததின் விளைவாக தமிழகத்தில் இன்றுவரை   571 -- பொறியியல்        கல்லூரிகள் தொடக்கப்பட்டு உள்ளன.

       இதில் பல கல்லூரிகளில் போதிய வசதிகள் இல்லை.     பயிற்றுவிக்கும்        ஆசிரியர்களும்
முன்னனுபவம்  இல்லாத    தகுதியற்றவர்களா
கவே உள்ளனர்.  ஆசிரியர்  தேர்ந்தெடுப்பதிலும்
பணதிற்க்கே முன்னுரிமை    வழங்கப்படுகிறது.
பல ஆசிரியர்கள் பயிற்றுவிக்கும் முறைகளை கூட அறியாதவர்களாய் உள்ளனர்.

        தமிழகத்தில் பள்ளிகூடங்களில்  தொடக்கி கல்லூரிவரை கல்வி  விற்ப்
பனைக்கு  வைக்கப்பட்டுள்ளது.   ஆனால்  பல   வெளிநாடுகளில்   ஆரம்பக்
கல்வி    முழுவதும்    இலவசமாகவே   வழங்கப்படுகிறது.    தனியார்களால் நடத்தப்படும்  சில  கல்வி   நிறுவனங்களில் உலகத்தரம்     வாய்ந்தக்கல்வி வழங்கப்படுகிறது. இங்குள்ள ஆசிரியர்களும் திறமை வய்ந்தவர்களாகவே உள்ளனர்.       ஆனால்  இங்கு  கல்வி    பெறுவது        சாதாரண        மக்களின்
கனவாகவே உள்ளது.

  அரசுக்கல்வி நிறுவனங்களில் வேலை செய்யும் பலர் தங்கள் பணியை சரியாக செய்வதில்லை இதை அரசும் கண்காணிக்கவில்லை.இதனால்
அரசு வேலைக்காக முயற்சிப்பவர்கள் பலர்.



   அரசின் கண்காணிப்பு இல்லாததின் விளைவாக
சமிபகாலமாக கல்விநிறுவனங்களால்  மாணவர்
களின்   உயிரும்    பறிக்கப்பட்டுவருகிறது. பேருந்
துகளில்   அளவுக்கு  அதிகமாக       மாணவர்களை கொண்டு   செல்கின்றனர்.      விபத்து     ஏற்ப்படும்
போதும்  முறையான  விசாரணை  நடத்தபடாமல் பணத்தால் மூடப்படுகிறது .

     கல்விநிறுவனங்களின் மேல் கூறப்படும்  புகார்
களை வைத்து அதிகாரிகள் விலை பேசுகின்றனர்.

    தகுதியில்லத நிறுவனங்களில்  படித்து  வெளிவரும்  பலரும்   தகுதியில்
லாதவர்களாகவே உள்ளனர்.  இதுபோன்ற  தகுதியில்லாத       மருத்துவர்க
ளால்  உயிரிழப்பு  ஏற்ப்பட்டு   வருகிறது.      மருத்துவதுறையில்       மட்டும்
அல்ல மற்றதுறைகளிலும் இதேநிலை தான்  உள்ளது.


 மாணவர்களின்  முறையீடு: 

   "கல்லூரிகளில்  வாட்சிமேன்  முதல்  ஆபிசுல வேலப்பாகுறவன்    வர மாணவர்களை மிரட்டுகிறான்".

"பணிமுடியாத கட்டிடங்களின் கிழேதான்  வகுப்புக்களே நடத்துறக்க".

"கறுப்புபணத்த முதலிடு செய்யவே கல்லூரி ஆரம்பிக்கிரங்க"

"கல்லூரியில் நடக்கும் மனிதஉரிமை மீறல்களை பணத்தால மூடுறங்க"

   "ஆதிகரமே இல்லாத டம்மிங்கள கல்லூரி முதல்வர்கள் மற்றும்
ஆசிரியர்கள்"

"எப்படி வெள்ளசட்ட  போட்டவன் எல்லாம் நல்லவனில்லியே
அதேமாதிரி இப்போ கோட்டு போட்டவனும்".

"பணத்துக்காக கட்டாய தேவையில்லாத பயிற்சி வகுப்புக்கள்"

"10 ரூபா நோட்டு 30 ரூபா ;கேட்ட மார்க்  இல்ல".

"நூலகமிருக்கு பயன்படுத்த  அனுமதி இல்ல "

"கம்ப்யூட்டர் பீஸ் இருக்கு  பாட நேரம் தான் இல்ல".


எனக்கு பணம் உனக்கு பட்டம் இந்த நிலை மாறுமா?


                                                                                                                       



Tuesday, 24 July 2012

நான் ஈ ஒரு பார்வை


தமிழில்  ஒரு  உன்னதப்படைப்பு  நான் ஈ 

லாஜிக் தேவையில்லாத  ஒரு கதையை லாஜிக்குடன்  தந்துள்ள
இயக்குனர் s .s  ராஜமௌலி  
பாராட்டுக்குரியவர் .

கதாநாயகன் இறந்தவுடன் கதறியழும்  சினிமாலாஜிக்கை  உடைத்து யதார்த்தமான வாழ்க்கையை பதிவாக்கியுள்ளார் ராஜமௌலி. கதைக்கு தேவையில்லாத  
பாடல்களையும் காட்சிகளையும் தவிர்த்து திரைக்கதையின்  வேகத்தைக்கூட்டியுள்ளார்.  திரைக்கதையின் ஒவ்வொருக்காட்சியும்
படத்திற்க்கு பலம் சேர்க்கின்றன...

குடும்பத்துடன் பார்க்கும்வகையில் தரமானக்காட்சியமைப்பு.  எந்த மிகைப்படுத்துதலும் இல்லாமல் ஈ;  ஈ -யாகவே செயல்படுகிறது. ஈ -க்கு கதாநாயகியின் மைக்ரோஆர்ட் படிப்பை சக்தியக்க  மாற்றிய லாஜிக் அருமை. 

சுதிப்-ன் நடிப்பு படத்திற்க்கு மாற்றொரு பலமாக அமைந்துள்ளது. அனிமெசனில் உருவாகும் ஈயை மனதில்க்கொண்டு அவ்ர்க்கொடுத்துள்ள முகபாவனைகள் அவரை சிறந்த நடிகனாக முன்னிறுத்துகிறது .

மரகதமணியின் இசையில் பாடல்கள் மனதில்பதியும் படி உள்ளன, பின்னனியிசையிலும்  மரகதமணியின் பணி சிறப்பாக உள்ளது.
கிராபிக்ஸ் படத்துடன் பிரிக்கமுடியாத வகையில் 
கலந்துக்காணப்படுகிறது.  

சமந்தா-நானி காதல் மனதை தொடுகிறது, படம் முழுவதும் சமந்தா அழகுப்பதுமையாகவே வருகிறார்.

ராஜமௌலி தொடர்ந்து மூன்று ஹாட்ரிக் வெற்றி கண்டுள்ளார்.