அலசல், புத்தகம், விமர்சனம்.

Friday 24 January 2014

ட்ரை ஒரு செயல் படாத அமைப்பா ?


   ட்ரை  இந்தியாவில் தொலைதொடர்பு குற்றங்களை குறைப்பதற்காக அரசால் இயக்கப்படும் அமைப்பு; இது இன்று இயங்குகிறதா? என்பது சந்தேகமாகவே உள்ளது. நாளுக்கு நாள் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது இதைத்தான் காட்டுகிறது .


 "மொபைல்நம்பர் போர்டப்ளிட்டி"பிரச்சினை அதில் முதன்மையானது. தொலைதொடர்பு நிறுவனத்தால் பாதிக்கப்பட்டு தங்களுடைய சேவை நிறுவனத்தை மாற்ற நினைக்கும் மக்களின்  ஒரு சதவீதம் கூட அந்த வசதியை பயன்படுத்த முடிகிறதா என்பது சந்தேகமே!


  மக்களின் போர்டபில் முயற்ச்சி பலனளிக்காமல்          இழுத்தடிக்கப்படுகிறது.
தொடர்ந்து அதன் பின்னால் மாதகணக்கில் அலைய முடியாதவர்கள், தொடர்ந்து தங்களுடைய பழைய நிறுவனத்தின் அக்கிரமங்களை அனுபவித்து வருகிறார்கள். பதினைத்து நாட்களில் "போர்ட் கோடு" என்னவோ காலாவதி ஆகிவிடுகிறது. பயனாளிகளின் பிரச்சினை காலம்  கடந்து வருகிறது. 

போர்ட் விண்ணப்பம் நிராகரிக்கப்பட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கையாளும் தந்திரங்கள்; தவறான போர்ட்கோடு, வாடிக்கையாளர் மறுபரிசிலனை, போர்ட் கோடு காலாவதியாகி விட்டது, தங்களின் புதிய சேவை நிறுவனத்தில் பிரச்சினை;  என்று நீள்கிறது ....

ட்ரை  செயல்படுமா ???