அலசல், புத்தகம், விமர்சனம்.

Thursday, 4 August 2016

கபாலி - தீர்ப்பு

பல மாதங்களுக்கு   பிறகு  மற்றும் ஒரு பதிவு ...

கபாலி என்ற ஒரு  பிரச்சினை  கடந்த சில நாள்களாக தொடர்ந்து வருவதால் அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு வாத பிரதி வாதங்களை கேட்டு வழங்கப்படட தீர்ப்பு இது.


வழக்கு  எண்  : ர-க  ஜூலை 22

குற்றவாளி  : கபாலிவழக்கு  தெடர்த்தவர்கள் :  சமூக ஆர்வலர்கள் என்று தன்னை அறிமுக படுத்துபவர்கள்  .


(வாதம் &  பிரதிவாதம் =   நீதி )

வாதம் - கபாலி படத்தின் டிக்கெட் அதிக விலைக்கு விற்க பட்டுள்ளது. அதனை எதிர்த்து பதிவு செய்யப்பட்ட   வழக்கு  தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

பிரதிவாதம்- விபாரத்தில்  லாபம் என்பதே குறிகோள் , கபாலி அன்றாட உணவு கிடையாது.

வாதம் - ரஞ்சித்  இன்றய நாகரீக காலத்தில்  போய்  சாதி கொடுமையை பற்றி பேசுகிறார் .

பிரதிவாதம்- இந்த  நாகரீக காலத்தில்தான் "சாதிகள் இல்லையடி பாப்பா "
என படிப்பதற்க்கே; ஜாதி சான்றிதழ் தேவைப்படுகிறது.

வாதம் - தமிழர்கள் ஒற்றுமையாக  வாழ்கிறோம், தமிழனை இழிவு படுத்தியிருக்கிறார்கள்.

பிரதிவாதம் - தமிழர்கள் ஒற்றுமையாக  வாழும் தமிழகத்தில் இருக்கும் கட்சிகள்  எத்தனை ?, பெருந்தலைவர்  கமராஜரையே தோற்கடித்த; மக்கள் வாழும் மண் தமிழ் நாடு.

வாதம் - ரஞ்சித்  ரஜினிக்கு  தெரியாமல் தன் சுய  ஜாதி போராட்டத்தை  கபாலிசி என்ற படமாக வெளியிட்டுள்ளார்.

பிரதிவாதம் - ரஜினியின்  கண்ணை கட்டி காட்சிகள் படமாக்க பட்டுள்ளதா அல்லது வாயை  மூடி  வசனங்கள் பதிவு செய்யபட்டுள்ளதா ?

வாதம் -  விளம்பரத்தில் பாஷா போல் காட்டி ரசிகர்களை ஏமாற்றி விடடார்கள்.

பிரதிவாதம் - ஷாருக்கான்  ஒரு  பெரிய குழு வைத்து சாதித்த சாதனைகளை
"கபாலி விளம்பரம் -ரஜினி"  என்ற இரு விஷயங்கள் எளிதாக முறியடித்துள்ளது.
 கபாலி  விளம்பரத்தில் இந்த படம் மற்றோரு பாஷா என குறிப்பிடவும் இல்லை; படத்தில் இல்லாத  காட்சிகள் விளம்பர படுத்தவும் இல்லை.

வாதம் -  ரஜினி - தான்  நடிக்கும் திரைப்படங்களில் தமிழ் மக்களுக்காக தன்
உயிரையே கொடுப்பதாக காட்டுகிறார்; ஆனால் நடப்பது ?

பிரதிவாதம் - திரைப்படங்களில்  கதாபாத்திரத்தின் செயல்களே பிரதிகரிக்க படுகிறது. அரசியல் வாதிகள் கொடுக்கும் வாக்குறுதிகளே பொய்யாக போகும் இந்த நாட்டில்; சினிமா ஒரு  மாய உலகம்.

வாதம் - ஜெ. சி சினிமா - திரைப்பட துறையை  கைவிடவேண்டும்;  கடந்த முறை ஒரு குறிப்பிட்ட கட்சி ஆட்சிக்கு வரமுடியாததற்க்கு, திரைப்படத்துறையில் செலுத்திய ஆளுமையும் ஒரு காரணம்.

பிரதிவாதம் -  கடந்த தேர்தலில் ஆளும் கட்சிக்கு  கிடைத்த வாக்குகளை விட; எதிராக பதிவான வாக்குகளே அதிகம் என்பதை வாதி மறக்கவேண்ண்டும்.

வாதம் -  ரஜினி கொள்ளை லாபம் சம்பாதித்த போதும்(சம்பளம் 35 கோடி + லாபத்தில் பங்கு 45 கோடி ); வளர்த்து விட்ட ரசிகர்களுக்காக   ஒரு சிறப்பு காட் சி  கூட ஏற்படுத்த முன்வரவில்லை, சுய நலமாக அமெரிக்காவில் போய் ஒளிந்து கொண்டார்.

பிரதிவாதம் -  ரஜினி ஒரு மனிதர், தன்  சுய  செய்திகளை  மக்களுக்கு விளக்க வேண்டிய அவசியமில்லை .

வாதம் - மலேசியாவில் மக்கள் எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ்கிறார்கள். அங்கு பிரச்சினை இருப்பதாக கூறியிருப்பது பெருந்தவறு.

பிரதிவாதம் -   கபாலி கதாபாத்திரம் உண்மையாக மலேசியாவில் வாழ்ந்த ஒரு மனிதரிலிருந்து எடுக்கப்பட்டது; தமிழ் நாட்டிலிருந்து கொண்டு மலேசியாவில் எந்த பிரசினையும் இல்லை என கணிக்கமுடியாது.
பல  பெரிய வில்லன்களே  பெண்ணிடம்   போய் நிற்கிறார்கள் என்று பெண்களை கோச்சை  படுத்துகிறார்கள் வாதி தரப்பு இது கண்டிக்கத்தக்கது.

வாதம் -  கபாலியின் மகள்  கதாபாத்திரம், அவ்வளவு தைரியமானதாக சித்தரிக்க படவில்லை; அதை தான் விமர்சனர்கள்  விமரிசிக்கிறார்கள்.
திரைப்படத்தை விமர்சிப்பதால் கொலைமிரட்டல் விடுகிறார்கள் "தலைவரை விமர்சித்து விட்டு தமிழ்நாட்டில் வாழ்ந்திட முடியுமா ?" என்று .

பிரதிவாதம் -  படம் பார்ப்பவர்கள் அதை விமர்சிக்க உரிமையிருக்கிறது; கொலைமிரட்டல் விடுபவர்களுக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை; கொலை மிரட்டல் என்ற பேரில் விளம்பரம் தேடவேண்டாம், உண்மை எனில் சட்டரீதியாக வழக்கு தொடருங்கள்.


தீர்ப்பு : ர -கா  ஜூலை 22  வழக்கில் வாத பிரதிவாதங்களை விசாரித்ததில்,


திரைப்படம் என்பது ஒரு பொழுது போக்கு மட்டுமல்ல அதை தாண்டி ஒரு கலைஞன் தன் கருத்தை இந்த சமூகத்தில் பதிவு செய்ய முழு உரிமை உள்ளது.

வியாபார ரீதியில்  ஒரு தயாரிப்பளர்  தன் லாபத்துக்காக விளம்பரயுத்திகளை வகுப்பது இன்றய வணிக  உலகில் வாடிக்கையே; மக்கள் அதில் ஏமாறாமல் இருக்க வேண்டும். விளம்பர்களின் மீது நம்பிக்கை  வைப்பதை தவிர்க்கலாம்.

ஒரு குறிப்பிட்ட மனிதரை மைய படுத்தி இந்த தொழிலில் ஆளுமை செய்ய கூடாது என்பது ஜனநாயகத்திற்கு புறம்பானது.

பணத்திற்க்காக  இணைய தளங்களில் திரைப்படங்களை விமர்சிப்பவர்கள்
சமீபகாலங்களாக பச்சோந்தியை விட  வேகமாக நிறமாறுகிறார்கள், சினிமா ரசிகனாக இல்லாமல் தங்கள் சுய வெறுப்புகளையும் நலனையும் விமர்சனம் என்றபேரில் மக்களிடம்  திணிக்க முயல்கிறார்கள்; இவர்களை கண்டு கொள்ளாமல் இருப்பதே சால சிறந்தது.

1 comment: