அலசல், புத்தகம், விமர்சனம்.

Saturday 22 March 2014

இரண்டாம் உலகம் ரிட்டன்ஸ்

    செல்வராகவன் படங்களில் இரண்டாம் உலகம் படம் கற்பனை வழம் குன்றி காணப்பட்டது. நல்ல கதை கரு  அதில் பழைய கால அரச வாழ்க்கையே மேலோங்கி இருந்தது. புதுமையான உலகம் சற்று சறுக்கிவிட்டது. என் கற்பனையை அந்த கதை கருவில் தூவி விட்டுபார்கிறேன். " இரண்டாம் உலகம்    ரிட்டன்ஸ் "



நமது  உலகத்தில் உள்ளது போல் அங்கு எந்த சட்டதிட்டங்களும் கிடையாது.
மனிதர்கள் ஒரே தரம் உயர்ந்தவன் தலைவன் இல்லை. சிலவித்தியசமான நாட்களில் பிறக்கும் அபூர்வ குழந்தைகளை கொன்றுவிடுகின்றனர். மற்ற படி அவர்களுக்குள் எந்த ஒருமைப்பாடும் இல்லை. மனம் போல் வாழ்க்கை.

அவர்களின் சபகேட்டில் முக்கியமானது. தூங்கி விழிக்கும்போது முந்தய தினம் நடந்த சம்பவங்கள் மனதில் நிலைப்பதில்லை.

அங்கு பிறக்கும் ஏழு மனித தன்மைபடைத்த அபூர்வங்கள் அவர்களுக்கு கடவுளாக நினைக்கிறார்கள். 

மனிதன் வெற்றி பெற்றான ? அபூர்வ பிறப்பை இனம் கண்டு அளித்தார்களா என்பது முடுவு .
தொடரும் ...