அலசல், புத்தகம், விமர்சனம்.

Tuesday 25 December 2012

மலையாளத்தில் ஒரு குடி மகனின் கதை

  ஸ்ப்ரிட் திரைப்படம் சமிபத்தில் பார்த்த படங்களில் குறிப்பிடக்கூடிய வகையில் அமைந்திருந்தது . மலையாளத்தில் இந்த வருடம் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் குடி மகனின் வாழ்க்கையை அடி ஏற்றி கதை திரைகதை அமைக்க பட்டிருந்தது.
  குடி குடியை கெடுக்கும் என்ற வாக்கியத்தை இரண்டரை மணி நேரம் வாழ்ந்து காட்டியிருந்தனர். பல உண்மைகளை தெளிவாக எடுத்துக்காட்டிய இந்தப்படம் சிலராது வாழ்க்கையிலாவது மாற்றங்களை ஏற்ப்படுத்தும் என்பதில் ஐயமில்லை . வசதிக்கேற்ப ஒவ்வொருவரின் பானங்களும் நாடமாடும் தோரணைகளும் மாறுபடலாம் ஆனால் பாதிப்பு போதுவனதகவே உள்ளது .
  குடி மகனின் சுயநிலையை எவ்வாறு ஆல்ககால் மறக்க செய்கிறது. தான் என்ற அகந்தையில் அவன் ஆடும் ஆட்டம் . குடும்பவாழ்க்கை சீர்குலைவது என ஓவ்வொன்றும் உண்மை முத்துக்கள். குடி மகனின் குழந்தைகளின் வாழ்க்கை கேள்விகுறி ஆக்கபடுகிறது.
      குடிப்பது தவற என வாதிடும் இந்த அத்திப்புத்தி சாலிகள் தன்னிலை மறப்பதை உணர்வதில்லை  போலும். குடிபோதையில் இவர்களின் அறியுதிறன் அளிக்கபடுகிறது. விட்டால் சமுதாயம் தவறு என் குறிப்பிடும் பல செயல்களை தவற என கேக்கவருவர்கள் .
அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு தான். அமுதமே அப்படி இருக்க ஆல்ககால் சும்மாவா. படத்தில் மோகன்லாலின் நண்பன் இறந்தவுடன் மோகன்லால் 
தெளிவடைவதாக 
சித்தரிக்கபட்டுள்ளது. உண்மையில் இதன் சத்தியம் குறைவே ஆனால் நடந்தால் உயிரிழந்த 
மனிதருக்கு  செய்யும் மரியாதையாக அமையும். ஆல்ககாலை மருந்தாக உட்கொள்பவருக்கும் விருந்தாக உள்கொள்பவருக்கும் வித்தியாசமில்லையா என்ன ?
  உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும் சுகந்திரம் உள்ளது. அது மற்றவரின் வாழ்கையை பதிப்பதை ஒரு போதும் ஏற்க்க முடியாது . அப்படி பாதிக்கும் நேரத்தில் அதை தடுத்து நிறுத்துவதே அரசின்கடமை அல்லது அதை வைத்து காசு பார்ப்பதில்லை. பல இடங்களில் காவலர்களும் கையுட்டு வாங்க குடியை காரணம் கட்டுவதையும் படத்தில் பதிவு செய்துள்ளனர்.
படத்தை பார்க்கும் புதிய தலைமுறையாவது குடிபழக்கத்திற்கு அடிமையகமலிருந்தால் அது இயக்குனருக்கு கிடைக்கும் வெற்றி... 

Friday 7 December 2012

கஸ்டமருக்கு ஆப்பு; டாட்டா டோகோமோ டாப்

    தாங்க முடியலட இவங்க தொல்ல, கொள்ளையடிக்க புது புது ரூட்டு போடுறாங்க. ரூம் போட்டுதான் யேசிக்கிறாங்க. ஒரு புது கணைசன் எடுத்து நான் பாட படுறேன். சிரிச்சிக்கிட்டே கணைசன் குடுத்தனுங்க.ID சரியில்லா போட்டோ சரியில்லன்னு அலைய வேண்டாமேன்னு நேர டோகோமோ ஷோரூம்க்கு போய்தான் கணைசன் எடுத்தேன் ஆரம்பம் என்னவோ நல்லா தான் இருந்திச்ச்சி. சிம் ப்ரீ; 20 ரூபாய் ப்ரீ டாக்டைம் .
  
 ஒரு வாரத்துக்கு அப்புரம்தான் ஆரம்பிச்சாங்க ஆப்பு     அடிக்கிற             வேலைய. முதல் ஆப்பு நான் செலக்ட் பண்ணுன பிளான்ல இருந்திச்சி (மூணு மாசத்திற்கு ஒரு நிமிஷம் 1/2 பைசா இந்தியா முழுதும்; விலை 43 ரூபாய் ) நான் பண்ணற காலுக்கு சரமாரியாக சர்ஜிபண்ண அரபிச்சாங்க ஒரு வழிய எழுதி வச்சி கண்டுபுடிச்சிட்டேன். ( ஒரு நிமிசத்துக்கு ஒரு பைசா , 1.5 பைசா ,2 பைசா ...)
கஸ்டமர் கேருக்கு கால்பண்ண ஏதோ இங்கிலீஷ் காரனுக்கு புறந்தவன் மாதிரி ப்ரோனன் செச்சன் (சரியாதான் போசுனான அல்லது ஓபி அடிசனணு தெரியல, இந்தியன் கஸ்டமர்கிட்ட பேசுறோம் மறதுடுவான்களே )மொத்ததில ஒன்னும் புரியல. நடைய கட்டினேன் ஷோரூம்க்கு.
சிம் எடுக்குபோதிருந்த புன்னகை குறைத்தே இருந்தது . பிரச்சினைய சொன்னேன் . "சாரி சார் நாங்க போஸ்ட் பெய்டு மட்டும்தான் சால் பண்ணுவோம்."
 "சார்  அவன் பேசுற இங்க்லீஷ் புரியல. தமிழ் சப்போர்ட் இல்லையாம் ."
"சாரி நாங்க ஒண்ணும் பண்ண முடியாது. நீங்கதான் பாத்துக்கணும்." (இதே ரேக்கடே திரும்ப திரும்ப ஓடிச்சி )
தமிழுக்கு உதவ ஒரு தமிழர்  முன்வந்தார் . கணினியிலிருந்த தகவல்களை பரிசோதித்து நான் சொன்னதை உறுதி படுத்தி 
"மீண்டும் முயற்சி செய்ங்க சரி  ஆகவிடால்   திங்கள்கிழமை வாங்க நான் உதவுகிறேன்" (ஒரு ஆறுதல் பேச்சு )
 மறுபடியும் கஸ்டமர் கேருக்கு கால் பண்ணுனேன். " நாங்க புண்ணியவான்கள் அப்படி எல்லாம் பண்ண மாட்டோம். நீங்க ஒரு தடவ சரிய செக்பன்னுங்க சார். " 
சரி ஆகிடமோ என்ற  நம்பிக்கையில பாத்த, இல்ல. திரும்பவும் கஸ்டமர் கேர்  (இந்தமுறை  கொஞ்சம் கடுப்பாகவே நான் ) பதில் வேறமாதிரி இருந்திச்சி "உங்களுடைய பிளான் சின்னதா செஜ் ஆகி இருக்கு. ("ஒவ்வெரு நாளும் முதல் ஒரு நிமிசத்திற்கு  மட்டும் 2பைசா. ") "இல்ல சார் என்கிட்ட sms கூட இருக்கு இந்தியா முழுதும் 1/2 பைசா தான்" . அது "மாறிடிச்சி சார்". ஒரு வாரமா  நடந்த பஞ்சாயத்து ஒரு வழிய முடிஞ்சி அதுக்குள்ளே காசு தண்ணிய கரன்சிருந்தது .
 அடுத்த ஆப்புகள்  வேலிவு அடர் சரிவிஸ் மூலமா வந்திச்சி. ஆக்டி வேசன் பண்ணாத சர்விசுகள் அதுவாக ஆடிவேசன் அகுறதும். 2 முதல் 15 ரூபா வரைக்கும் காணாம போறதும், கஸ்டமர் கேருக்கு கல்பண்ணி டி  ஆடிவேர்சன் பணுறதும்.இப்படியே போய்கிட்டிருக்கு. முதல்ல ரீ பண்டு  பண்ண மறுத்தவங்க.
 இப்போ வேற வழியில்லாம அப்பப்போ பண்ணுறக்க  (நான் தெரியாம தான் கேக்கிறேன்  எனக்கு  தினமும் balance செக் பண்ணுறதுதான்  வேலைய? )

பிரீ பெய்டு தான் இப்படினு போஸ்ட் பெய்டு பக்கம் பாத்த அவங்க பாடு நாயிக்ககூட  கண்ணீர்வடிக்கும். எனக்காவது காசு போட்டத்தான் ஆப்படிப்பாங்க.          ஆனாஅங்க லிமிட் செஞ்சி பண்ணி சொல்லாமலே
ஆயிரகணக்கில பில் அனுப்புறாங்க இவன்னுங்க பின்னாடி பஞசாயத்திற்க்கு அலைவதே வேலைய போகுது.(டூ நாட் டிஸ்டப் ஆக்டிவ் பண்ணியும்  இதுல விளம்பர கால்களின் தொல்லவேற ...


பி.கு : இங்கு குறிப்பிட்டுள்ள அனைத்திற்கும் தகுந்த ஆதரங்கள் என்னிடம்
உள்ளது.