அலசல், புத்தகம், விமர்சனம்.

Monday 30 December 2013

2013 தமிழ்த்திரை வெற்றி முத்திரைகள்

2013 தமிழ்த்திரை வெற்றி முத்திரைகள் :


சிறந்த இயக்குனர்  -  பாலா (பரதேசி )

வெற்றி நாயகன்  -  சிவகார்த்திகையேன் (கேடிபில்லா கில்லாடிரங்கா , வருத்தப்படாத வாலிபர் சங்கம் , எதிர்நீச்சல் )

கனவுக்கன்னி  ​ -நஸ்ரியா  (நேரம், ராஜாராணி ,நையாண்டி )

சிறந்த இசை - G .V  பிரகாஷ் குமார் (பரதேசி, ராஜாராணி, உதயம் NH 47,..)

நகைசுவை முத்திரை - சூரி (கேடிபில்லா கில்லாடிரங்கா , வருத்தப்படாத வாலிபர் சங்கம்,நையாண்டி,...)



Monday 25 November 2013

கலைக்குடும்பத்தின் கத்திப்படங்கள்

கத்திப்படங்களின் எண்ணிக்கை தமிழ்த்திரையில் அதிகரித்துவிட்டது, காமெடியில்  தொடங்கி ஆக்சன் வரை வந்துவிட்டது ......






Saturday 12 October 2013

கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏமாற்றம்

இந்தியாவில் கிரிக்கெட் மறுபெயராக கொண்டாடப்படும் சச்சின் ,வருகிற தொடருடன் முழுமையாக கிரிகெட் லிருந்து விலக போவதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது  .... 

கிரிகெட் ரசிகர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வரும் நிலையில் ,
சச்சின் விளையாட்டை பார்க்க ஒரு கூட்டம் உள்ளது , அவர்களும் விடைபெறும் நேரம் வந்துவிட்டது.  


சச்சின் கிரிக்கெட் -ல்  ஒரு யுகமாக கொண்டால் அது மிகையாகாது.பதினாறு வயதில் களம்கண்ட சச்சின், உலகின் பந்து விச்சாலர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். இன்றும் பந்து விச்சாளர்கள் மனதில் ஒரு கலக்கம் இருப்பது மறுக்கமுடியாத ஒன்று .

தான் விளையாடும் ஒவ்வொரு தினத்திலும். ரசிகர்களுக்கு எதிபார்க்க தக்க சாதனை மய்கல்காளுடனே களமிறங்கும் ஒரே வீரர்.சச்சினுக்காக உருவாக்கப்பட்ட ஒவ்வொரு மயில் கால்களையும், தாண்டுவது இயலாத ஒன்று .இளம் வீரர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் சச்சின் கிரிகெட் -ன் அடையாளம் .


இருநூறு என்பது  கிரிகெட்டில் சச்சினின் இமயம் அந்த இமயத்தை எல்லா வடிவிலும் முதல் முதலில் தொட்டவர் சச்சின் ...
 வயதை குறித்து  விமர்சனங்கள் எழுந்த போதெல்லாம் விளாசி தள்ளியிருக்கிறார்.

கிரிகெட் காண்போரின் எண்ணிக்கை மட்டும் வெகுவாக குறையும் என்பதில் ஐயமில்லை ...

Monday 30 September 2013

சுசிந்திரன் சொன்ன காதல் கதை ...


திரைப்பட தலைப்பு எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு "ஆதலால் காதல் செய்வீர்" ஒரு சிறந்த உதாரணம் .




படம் பார்க்குமுன் படத்தின் தலைப்பு ஒருவித காதல் உணர்வை ஏற்ப்படுத்துகிறது. படம்பார்த்தபிறகு  படத்தின் தலைப்பு இயக்குனரின் ஆளுமையை மனதுக்குள் பதிக்கிறது .
நாடோடிகளில் உறுதியற்ற காதலால் நண்பர்களின் பதிப்பை பார்த்த நமக்கு
அதே காதலால் குழந்தைகளின் ஏக்கத்தையும் வாழ்க்கை மாற்றத்தையும் கடைசி ஆறு நிமிடங்களில் யதார்த்த படுத்தியள்ளர் இயக்குனர் .

Tuesday 27 August 2013

விழியில் விழுந்தவள்






உன்மொழி தேவையில்லை விழிமொழி போதுமடி;
உன்பார்வை படும் ஒவ்வொருமுறையும் புதிதாய் பிறதேனடி ,
சகா வரம் தந்தயடி, செத்து செத்து பிளைகிறேனடி....

Friday 26 July 2013

பாட்டு குதிரடா ... பட்டு குதிரடா...

காதல் பட்டு குதிரடா , நான் பச்ச குதிரட ,
இங்க  தாண்டி தாண்டி தான் முத்தேடுகிறன்டா
நெஞ்சம் வேறுட அதில் வஞ்சம் நூறுட
காதல் காட்டி காட்டியே இங்க கூத்தடிகிறண்டா

காசு ஆறுட அந்த காலம் வேறுட
கண்ணா மூடித்தான் இங்க களவுனடத்துடா
நேசமில்லட  ஊரில்   பாசமில்லட
வேஷம் போட்டுதான் இங்க வாழ்க ஓட்டுடா
டப்பு உண்டுன்னா  இங்க மப்பு காணுண்ட
மனசமாத்தி தான் அது மாய காட்டுண்டா


காதல் பட்டு குதிரடா , நான் பச்ச குதிரட ,
இங்க  தாண்டி தாண்டி தான் முத்தேடுகிறன்டா


பூவிருகுதட அதில் தேனிருக்குதட
தேடி  போனாதான் முள்ளிருகுதடா
குருவி இல்லடா  இங்க குப்பயுண்டுட
மன ஊடலில்லட சரி கூடலுண்டுடா


காதல் பட்டு குதிரடா , நான் பச்ச குதிரட ,
இங்க  தாண்டி தாண்டி தான் முத்தேடுகிறன்டா


குப்பதொட்டிட அதில்  சப்பு கொட்டுண்ட
கூடிவந்து குட்டி எல்லாம் கூத்து கட்டுண்டா


                                                                                                                                        Teamwork 

                                                                  city chance 

Saturday 22 June 2013

கொள்ளையர்களின் சங்கிலி




   வியாபாரம் என்பது ஏமாற்றுவதுதான்; வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதுதான்  வியாபாரிகளுக்கு இலாபம் தரும், ஆனால் ஏமாற்றுவதை வியாபாரமாக்கி அடித்தட்டு மக்களை ஆசை காட்டி மேஷம் செய்யும் தந்திரமே கொள்ளையர்களின்  சங்கிலி.


  இந்த சங்கிலிதொடர் கொள்ளையில் இணைக்கபடுவது நம்முடைய நண்பர்களின் மூலமே. பல வருடங்களுக்கு முன் வகுக்கப்பட்ட இந்த திட்டம். காலத்திற்கு ஏற்றபடி பல பரிமாணங்களை எடுத்து வருகிறது.எந்த பரிமாணமாக இருந்தாலும் ஒரே இலக்கைத்தான் முன்வைக்கும்  "குறிகிய காலத்தில் கோடிஸ்வரன் ".

  பத்து வருடங்களுக்கு முன் முதல்முறையாக என்னை சந்தித்த இந்த சங்கிலி அதன்பின் பல பரிமாணங்களாக என்னை சந்தித்துவருகிறது. இதில் எமாறுபவபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது. நான் பார்த்த இந்த கொள்ளை சங்கிலியின் சில பரிமாணங்களை இங்கு பகிர்கிறேன்.

1997
உறுப்பினராக  2,000 k 

வீட்டு உபயோக பொருள்களின் பரிமாணத்தில் இந்த கொள்ளை சங்கிலியை முதலில் சந்தித்தேன் .

  2000 ரூபாய் கொடுத்து சங்கிலியில் இருக்கும் ஒருவரின் கீழ்   உறுப்பினர் ஆக வேண்டும். அவர் நமக்கு இரண்டு  வீட்டு உபயோக பொருள் விற்பதற்க்காக  கொடுப்பார். அதை விற்கவேண்டும். வாங்கும் நபரை மூளை சலவை செய்து நமக்கு கீழ்  இரண்டு நபர்களாக சேர்க்க வேண்டும். அப்போது நாம் முதலில் கொடுத்த 2000 ரூபாயில் பாதி அதாவது 1000 நமக்கு கிடைத்துவிடும். அவர்களும் இதைபோல் செய்யும் போது நமக்கு கீழ் 6 நபர்கள் வருவார்கள் .

  இங்கு முதல் காட்ட படுவது மட்டுமே வியாபாரம் அதன் பின் மற்றவர்களை மூளை சலவை செய்து எப்படி  நமக்கு கீழ் இணைப்பது,  நாம் எப்படி பணம் சேர்ப்பது என்ற களவுபடம்தான்.


மூளை சலவை செய்வதற்காக  கையாளப்படும் விதிகள்:

1.மிகுந்த மரியாதையுடன் அழைப்பது.
(சார் ,ஜி ,.....)

2.ஆடையில் ஒரு உயர்தர மாயையை ஏற்ப்படுத்துவது .
(டை அணிவது, சூ அணிவது ,...)

3.தான் வேகமாக வளர்வதாக பொலி ஆவணம் கட்டுவது.
(பேங்க் இருப்புத்தொகை, விலையுயர்ந்த பொருள்களின் உரிமை,...)

4.இடைவிடாமல் புன்கையுடன் பேசுவது.

5.சிந்திக்கவிடாமல் காய் நகர்த்துவது.
(போசும் போது அவர்களின் சிந்தனைகளை உகிப்பது )

6.பணத்தாசை உக்குவிப்பது.
(அடுத்தவர்களுடன்  ஒப்பிட்டுவது  )

கொள்ளை சங்கிலியின் சூத்திரம்:   50%

                                                                  A   +2000+4000+4k 

                               B - 2000 +2000+ 2k                                         C     -2000+2000+2k 


       1b -2000+1k                       2b -2000+1k                   1c-2000+1k                      2c -2000+1k 


1ba -2k          1bb  -2k          2ba -2k        2bb-2k         1ca-2k         1cb -2k       2ca-2k        2cb-2k


1ba  to A +500  ;(1ba+1bb+2ba+2bb+1ca+1cb+2ca+2cb) =4k
1ba to  B +500  ;(ba+1bb+2ba+2bb)= 2k
1ba to  1b+500 ;(ba+1bb)=1k                             
                                                                                                                     to be continued.....

சூத்திரம் ஒன்றுதான் காலத்திற்கேற்ப ஆரம்ப பரிமானம்தான் மாறுபடுகிறது.

2000   
ஆன்லைன் கொள்முதல்
உறுப்பினராக  4,000 k 

2005
பெண்களின் அலங்கார பொருள்கள் (லிப் ஸ்டிக்,... )
உறுப்பினராக  5,000 k  

2007
கல்வி புத்தகங்கள் மற்றும் ஆன்லைன் கல்வி 
உறுப்பினராக  6,000 k

2010
ஹெல்த் போர்டின் பவுடர்ஸ் 
உறுப்பினராக  8,000 k  

2012
பிஸ்னஸ்மேன்
உறுப்பினராக   10,000 k 

 பாதிக்க பட்டவர்கள் ஏராளம் ......

Sunday 26 May 2013

திரைக்காணா கிறுக்கல்கள் பக்கம் 4

    பல கதைகருகள் மனதில் உதித்தபோதும் அதை திரைகதை ஆக்குவதில் இயலாமை தொடர்ந்து இருந்து வருகிறது. அந்த கதைகளின் சாயல் பின்னாளில் வரும்படங்களில் தெரிகிறது. அதுபோலவே சில திரைகதை யுத்திகளும். அப்படி மனதில் பட்ட ஒருகதையை திரைகதை ஆக்கி பார்க்கலாம் என்று முயற்சிக்கிறேன். கதையமைப்பில் பல பட தாக்கங்கள் தெரியலாம்.  

தலைமுறை

                answer me

கதைகரு :

"எல்லா குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவன் நல்லவன் ஆவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே ..."

கதைசுருக்கம்:

     நமது இந்திய சட்டபடி பதினெட்டு வயதுக்கு குறைவான மனிதன் குற்றம் புரியும்போது தண்டஇலிருந்து தப்பிக்க வயதே காரணமாகிறது. அப்படி பட்ட பதினெட்டு வயதுக்கு குறைவானவர்கள் இன்றயநிலையில் செய்யும் தவறுகள் மிகபோரியபதிப்பை ஏற்படுத்துகின்றன.

தொழினுட்பத்தின் உதவியுடன் இவர்கள் செய்யும் அக்கிரம்க்களால் பதிக்கபடுவபவர்கள் ஏராளம், இதற்கு முக்கிய காரணமாக தொழில்நுட்பம் கருதபடுகிறது. ஆனால் உண்மை அதுவல்ல, தொழினுட்பம் இல்லது காலத்தில் கண்டுபிடிக்கபட்ட கத்தி எப்படி நன்மையையும், தீமையும் தருகிறதோ; அதுபோலவே இந்த புதிய தொழில் நுட்பங்களும். ஆகையால் தொழினுப்பத்தின் மேல் பழியை போட்டு  பெற்றோர்கள் தப்பித்து கொள்ள வேண்டாம்.

ஒரே தலைமுறையை இரு கூட்ட நண்பர்கள் அவரவர் விரும்பிய படி வாழமுயல்கின்றனர். அவர்களின் வயது பதினெட்டை எட்டவில்லை......

திரைகதை:


ஆரம்பக்காட்சி
-  துக்கில் தொகிய  கல்லுரிமாணவி.-

(இருண்ட அறை தூக்கில் தொங்குவாதொங்குவதற்காக  தயாராகும் ஒரு இளம்பெண். கல்லுரி சீருடை அணிதிருக்கிறாள் .)

அங்கும் இங்கும் நகரும் மாணவி, கையில் தென்பட்ட  தன்  துப்பட்டாவில் கவனம் செலுத்த ---
(மூன்று புகைப்பட  கோணங்கள் ) -
1.துப்பட்டாவில் முடிச்சி பின்னுதல்
2 துப்பட்டாவை மின்விசிரியுடன் இணைதல்
3 துக்கில் தொகிய இளம்பெண்  உடல்

தலைப்புகட்சிகள் :

செய்தி தாளில் செய்திகள் துக்கில் தொகின்னாள் கல்லுரிமாணவி காதல் தோல்வியா போலிஸ் விசாரணை .
*பழைய செய்திதாள்  செய்தி தலைப்பாகிறது*


வருடங்கள் மாறுவதும்  குற்றங்களின் தலைமுறை மாறுவதும் தலைப்பு காட்சியில்  செய்தித்தாள் செய்தியாக  வந்துபோகிறது )


நடிகையின் ஆபாச படம் இண்டர்நெடில் மாபின் செய்யபட்டதா
பயோ ஆயுத்தம் தயாரித்த மாணவன் கைது.

                                                             தொடரும்....




இப்படியும் வைக்கலாம் திரைப்பட தலைப்பு :

குற்றம் புரிந்தவன் ....,வைரம்....,சரண் ....,
கர்ஜனை .....,வதம் ......,பூரட்டாசி ...., அழகே ....,விழியில்  விழுந்தவள் ....,
அன்பானவள்... ஆயிரம்புஷ்பம்....., கடகம் ....,வக்கிரம்...,கேம் பாள் .....,
தக்காணம்...,


பன்ச் கண்ணா பன்ச் :
 "ஆம்பளனு காட்ட குழந்த பெத்துகிரிய, நீ ஆம்பளன அத வளதுகட்டனும்."

"ஆறுவயசிலையே அம்பானினு நினைகிறிங்க, ஆறு வயசில அம்ப்பானி யாருன்னு நினைகிறிங்களா "

"எப்படியும் வாழ்ந்துகோ உன்வாழ்க்கைய என் வாழ்க்கைல இல்ல ."


குறிப்பு: "அறிந்ததை எழுதுவதில்லை, அறிந்து கொள்ளுவதர்க்காக எழுதுவது
ஒருவருடத்தில் முடிந்து விடும் என்ற நம்பிக்கையடன் ...."





Sunday 21 April 2013

திரையுலகின் தீவிரவாதம்



     மதங்களை குறிவைத்து கலைஞர்கள் படையெடுப்பது இப்போது அதிகரித்து வருகிறது இதற்க்கு காரணம் எளிதில் விளம்பரம் கிடைக்கும் என்பதல அல்லது
கலை என்றபெயரில் செய்யும் திவிரவதமா கலை வளரவேண்டும். அதற்காக ஒரு சமுதயத்தையே; அதன் நம்பிக்கையையே குழிதோண்டி புதைக்கும் படைப்புகள் அளிக்கப்படவேண்டும், ஆனால் அதற்காக உண்மைகளை உடைக்கும் உழைப்பாளிகளின் படைப்புகளை அரசியல் லாபத்திற்காக உரசி பார்ப்பது தடுத்து நிறுத்தபடவேண்டும்.

  பாலா தன் படங்களில் ஒரு தாக்கத்தை ஏற்ப்படுத்துவர் என்றபோதும் பரதேசி அதையும் மீறி ஒரு வரலற்று சுவடாக உலக சினிமாவில் நிற்கும் நடிகர்களை கதாபாத்திரங்களாக மாற்றுவது பாலாவின் சிறப்பு . படம் பார்த்தபின்பு மக்கள் மனதில் கதாபத்திரங்கள் வருவது ஒரு இயக்குனரின் வெற்றி என்றால் பாலாவின் எந்த ஒரு படமும் அதை தவறவிட்டதில்லை.

    பொலி விமர்சனங்களால் பதிபுகுள்ளாகும் படைபளிகளில் கவுதம்மேனன் இணைத்திருக்கிறார். இளமை காதலின்   ஊடலை சொன்ன நீ தானே என் பொன்வசதம். இளம்காதலர்கள் மட்டுமே புரியும் படம். அந்த காதல் அறியாதவர்கள் படத்தின் வெற்றியை வேரருத்துவிட்டனர்.



  மணிரத்தினத்தின் படைப்புகள் மொத்தமாக பாரட்டபட்டலும் கடல் அதற்க்கு விதிவிலக்கு என்கிறார்கள். ஆனால் கடல் படமும் சில குறைகளை களைந்தால் சிறப்பாகவே அமைகிறது. குறையே இல்லாத படங்கள் ஏதுமில்லை.விஸ்வருபதில் 
கொடுவந்த கலகத்தின் த்க்கமும் கடலின் வெற்றியை பதித்தது.


  படைப்புகளின் மீது வழக்கு தொடர்வதின் மூலம் தங்களை விளம்பரபடுத்தி கொள்ளும் செயல் நாள்தேறும் அதிகரித்து வருகிறது. சிலபடைபளிகளே தங்களின் படத்தின் விளம்பரத்திற்காக இதை தவறாமல் செய்கிறார்கள் என்ற உண்மையும் இல்லாமலில்லை.

இந்த படத்திற்கும் வன யுத்தம் திற்கும் எந்த சம்மதமும் இல்லாதது ஏன்?
படத்தின் ஆரம்பதில் ஒலிக்கும் வசனதிற்கும்; இறுதியில் ஒலிக்கும் வசனதிற்கும் சம்மதமும் இல்லாதது ஏன்?

  திரைப்படம் என்பது ஒரு சாதாரண பொழுது போக்கு சாதனம் அல்ல அது ஒரு ஊடகம் ,புரட்ச்சி ஆயுதம். மக்களிடையே எளிதில் தாக்கத்தை ஏற்ப்படுத்தும்
என்பதை படைபாளிகள் நினைவில்கொள்ளவேண்டும் .


                                                                                                   

Sunday 24 March 2013

சிலுவைக்கே சிறப்பு

பாவத்தின் அடையாளமாக விளங்கிய சிலுவை பரிசுத்தத்தின் மகத்துவமாக மாற்றிய ஆச்சரியம் இயேசு .

இன்று நம் நாட்டில் தூக்கு கயறு எவ்வளவு அவமரியதயகிய ஒன்றாக கருதப்படுகிறதோ அதைவிட பல மடங்கு அன்றைய மக்களால் அவமனத்துகுரிய சின்னாமாக விளங்கியது சிலுவை மரணம்.  அப்படிப்பட்ட ஒரு சிலுவை இன்று மக்கள் நெஞ்சில் அடையாள சின்னமாக அணிதிருக்கின்றனர்.


சிலுவை இரண்டு மரத்துண்டுகளின் இணைப்பு அல்ல விண்ணையும் மண்ணையும் இணைக்க வந்த உறவுகோடு -MDM

சிலுவைமரத்தில் சிந்திய ரத்தம்  பாவங்களை கழுவுவி சிலுவையை புனிதம் பெற செய்தது.  சிலுவை ஒரு அடையாளம் சின்னம் மட்டுமல்ல ஒரு ஆராதனை சின்னம், இயேசு இந்த உலகில் வாழ்ந்த ஒவ்வெரு நிமிடமும் அடையாளமாகவே திகழ்தார்.
அவர் செய்த ஒவ்வெரு செயல்களும் ஆராதிக்கப்படுகின்றன.


மனிதற்குலமணிக்கம் இயேசுவால் சிலுவைக்கே சிறப்பு என்றால்; பெண்களுக்குள் அசிர்வதிக்கபட்ட மரியாள்  மண்ணுலகில் பத்துமாதம் இயேசுவை தன் வயற்றில் சுமந்து தன் இரத்ததை பாலாக்கி  மனிதராக  உருகொடுத்த சிறப்பு சிறிதாகத்தே ! இயேசு சிந்திய இரத்தம் மரியாளின் இரத்தம் .


மனிதர் நெஞ்சங்களில் சுமக்கும் சிலுவை அடையாளம் அல்ல; அபிமானம். சிலுவை சுபப்பவன் குற்றவாளி என்ற காலம் மாறி குற்றங்களை மன்னிப்பதற்காக  பலர் சிலுவையை பயன்படுத்துகின்றனர். பாவத்தின்
சிலுவை பரிசுத்தம் ஆக்கப் படத்தின் விளைவே; கிறிஸ்துவின் அடையாளமாகவும், கிறிஸ்தவத்தின் அடையாளமாகவும் சிலுவை போற்றப்படுகிறது.

சிலுவையில் சிந்தப்பட்ட ரத்தமும்,
சிலுவையில் சிதைக்கப்பட்ட உடலும் பாவம் போக்கும் அருமருந்தாக கத்தோலிக்க திருசபையால் பின்பற்றப்படும் மரபானது.

உண்மையில் சிலுவை மரணம் நமக்கு நினையுட்ட வேண்டியது பாவங்கள் கழுவப்பட்டு மனிதன் புனிதனாக இயேசு உயிர்நித்தது மட்டுமல்ல;
தன்னால் படைக்கப்பட்ட மக்கள் இரட்சிப்பு  பெறுவதற்காக தன் உயிரையே கொடுக்கும் தியாகம்.


நாம் உயிரை கொடுக்கா விட்டாலும்; இந்த சிலுவை நாட்களில் ஆவது நமக்கு அடுத்திருப்பவர்களுக்கு நம்மால் ஆனா உதவி செய்வதனால் நாமும் கிறிஸ்தவர்களாக  நிலை பெறலாம்.

ரோட்டோரங்களில் கையேந்தும் இயலாதவர்கள் முதல் இறைவனிடத்தில் கையேந்துபவர்கள் வரை, ஒருவர் மற்றவரை சார்ந்து தான் வாழ்கின்றனர்.

"கேளுங்கள் பெற்றுக்கொள்வீர்கள் ,தட்டுங்கள் உங்களுக்கு திறக்கப்படும் "

மனிதர்கள் ஒருவர் மற்றவருக்கு உதவுவது இயேசு விருப்புவது அதுவே கிறிஸ்தவம் அதை சிலுவை நாள்களிலாவது கடைபிடிப்போம் ...



Thursday 14 February 2013

திரைக்காணா கிறுக்கல்கள் பக்கம் 1


             திரைக்காணா கிறுக்ல்ள்


காதலர்தின வாழ்த்துக்கள்...

பட பட வென நெஞ்சம் துடிக்க, 
சட சட வென என்னை மறக்க... 
உன்னை தேடி என்னை தொலைத்தேன், 
உன்தன்  பார்வையில்  பஞ்சாய் எரிந்தேன்... 

காதல் இது காதல் கண்டுகொண்டேன் நானே 
தேடல் என் தேடல் முடித்து கொண்டேன் நானே 

இது வரை இந்த நாளை எதிர்பார்த்தே வாழ்ந்தேனடி 
இமைகளை இமைக்க சொல்லி தேடல் முடித்தேனடி 

உன் விழிகளில் நான்   விழுந்தேனடி ,
என்  விழிகளிகளில்  உன்னை வரைந்தேனடி .

உயிரே... என் வாழ்வே உனதாகுதெ ...


காவியத்தில் கண்ட காதல் காலமெல்லாம் காண்பேனடி ,

காதலித்தேன்   உன்னை
காதலித்தேன் 
காதலித்தேன் என்காதலி  
தேன் .

பதித்து வந்தாய் கால் பதித்து வந்தாய்; 
படைக்க வந்தாய் என்னை படைக்க வந்தாய் .

உயிரே... என் வாழ்வே உனதாகுதெ ...

feel my love; feeling love 
feel  my love; feel in love 

உதடுகள் மொழி பொய்யானதே; இமைகளின்  மொழி இதமாகுதே ...
நிழலானேன் உன் நிழலானேன்; நிஜமானேன் நான் நிஜமானேன் .

உன்வளைவுகளில் என்னை வசியம் செய்தாய்;
என் வாழ்க்கையில் ஒரு வரம் கொடுத்தாய் .

உண்மை சொல்லடி ஒரு நிமிடம்;
ஓவியமாய் நீ பிறந்தாயடி .

உயிரே... என் வாழ்வே உனதாகுதெ ...

காதல் இது காதல் கண்டுகொண்டேன் நானே
தேடல் என் தேடல் முடித்து கொண்டேன் நானே ...




குறிப்பு :

சீனியர் :100% காப்பி /-
ஜூனியர் : எங்கிருந்துட ?
சீனியர் : கண்டுபுடி ......


பக்கம்- 1

Monday 14 January 2013

உயிர்தேடும் உலகிலே...

   ""கற்றது கையளவு கல்லாதது உலகளவு"" 

  ஒவ்வொருநாளும் புதுவித அனுபவங்களுடன் நான் அறிந்து வரும் விஷயங்களையும் ஆச்சரியம் தரும் விஷயங்களையும் கிறுக்கவேண்டும் என்ற ஆவலில் இந்த பதிவை ஒரு தொடராக எழுத நினைக்கிறேன் இதில் வரும் செய்திகள் நீங்கள் அறிந்தவை ஆகலாம், மொக்கைகள் ஆகலாம், உண்மைக்கு புறம்பாகலம் எதுவானாலும்  என்னுடைய பார்வைகளில்  பட்ட  கண்டேப்புகளே, உலகில் வாழும்  ஒவ்வொரு உயிரும் எதையோ தொடுகிறது. அவ்வாறு உயிர்கள் தேடும் உலகில் என் தேடல் ...


பொருளடக்கம் :
1.அறிவின்  தேடல்
2.அறிவியலின் தேடல்
3.பொருள் தேடல்
4.இறை  தேடல்
5.இன்பமுறுதல்
6.அமைதியை தேடி
7.மரணம் தேடல்
8.என் தேடல்





முன்னுரை :
  மனிதன் மரணத்திற்கு பயப்படுகிறான் மரணத்திலிருந்து விடுபடநினைத்து
ஓடுகிறான். இந்த உலக வாழ்க்கை நிலையானது இல்லை என்ற எண்ணம் அவனிடன் இருப்பதில்லை. மரணத்தை கண்டு அன்சாதவனே உலகில் பல சாகசங்களை செய்து முடிக்கும் வெற்றி வீரனாக வலம் வருகிறான் .உலகில் பல சாதனை மனிதர்கள் வாழ்த நாள் கொஞ்சம்தான் ஆனால் அவர்கள் வாழும் நாளே அதிகம்.

உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினனமும் பிறந்த நாள் முதல் உயிர்வாழும் ஒவ்வொருநோடியும் உயிர்வாழ்வதரற்க்காக போராடிக்கொண்டு இருக்கிறது .
நிலையில்லாத உலகத்தில் பொருள் சேர்த்து  வைக்கின்றது. நோய்களும் விபத்துகளும் உயிர் நிலையானது இல்லை என்ற உண்மையை உணர்த்திவருகின்றன .

மனிதனின் தேடல் அடுத்த உயிரகளை மதிக்காமல் தான்,  தன், என்ற வட்டத்திற்குள்ளே தொடர்கிறது.உலகில் பிறந்துள்ள ஒவ்வொரு உயிரினத்திற்கும் வாழ்வதற்க்கான உரிமை உள்ளது. தான் கடந்து வந்த பாதையை பலர் நினைத்து பார்ப்பதில்லை. அதுபோலவே வயதின் இளமையில், நமக்கும் வயதாகும் என்ற எண்ணமும் பலபேரிடம் இருப்பதில்லை .

கடந்து வந்த பாதையை மறப்பவனின் வெற்றி நிலையானது அல்ல அந்த    வெற்றியை அவனால் தக்க வைத்து கொள்வதும் கடினம் .

1.அறிவின்  தேடல் :
 அறிவு, அனுபவம், ஞானம் என்பவாற்றல் மனிதன்  வெற்றிபெற போராடுகிறான் ஆனால் இந்த மூன்றின் வேறுபாட்டையும் அறியதவனே தன்னை அறிவாளி  என்பவன்.

அறிவு:   நாம் அறிந்து கொண்டவை, இதில் ஒவ்வொருவரும் ஒரு துறை சார்ந்த அறிவில் மேலோங்கி இருக்கின்றனர். புரிந்துணர்வுடன் கற்ப்பவருக்கே இது கல்வியறிவு ஆகும். இவை புத்தக அறிவுக்கு  உதாரணம்.

அனுபவம்(பயிற்ச்சி ):  ஒரு செயலை திரும்ப திரும்ப செய்வதன்மூலம் கற்றுக்கொள்வது; சிலரது கல்வி முறை கூட இவ்வாறே உள்ளது. ஒருபுத்தகத்தை திரும்ப திரும்ப படிபதன்முலன் அதை மனதில் பதித்து கொள்கின்றனர். இது பயிற்சி கல்வியறிவு ஆகாது .உதாரணமாக  சுற்றுல தலங்களில் உள்ள  வியாபாரிகள் திரும்ப திரும்ப கேட்ப்பதன்மூலம்  பலமொழிகளில் பேசும்  பயிற்சி பெறுகிறார்கள். இதன் மூலம் பலமுறை படைதிட்டப்பட்ட வைரக்கல் பளபளக்குகிறது ...

ஞானம் :    இது தனித்தன்மையாக உள்ளது ஒவ்வேருவரிடமும் மாறுப்பட்ட (ஞானம்)தனித்தன்மை உள்ளது .இதை கண்டறிந்து அந்த துறைசார்ந்த அறிவைபெருக்கி கொண்டால் வெற்றி நிச்சயம்.
 உதாரணமாக:
 நினைவாற்றல், உடல் வலுமை, சிந்தனை திறன் ,...இது போன்றவை பரம்பரையுடன் தொடர்புடையவை .

2.அறிவியலின் தேடல் :
மனிதன் கடவுளாக முயர்ச்சிப்பதே அறிவியலின் தேடல் இங்கு மனிதன் தன்னை கடவுளாக மக்கள் இடத்தில் நிலைபடுத்த முயற்ச்சிக்கிறான்  மனிதனால் காணமுடிந்ததே கடுகளவு உலகம்தான் அதில் புதைந்திருக்கும் உண்மைகளையே அறிவியலால் தெளியுபடுத்த முடியவில்லை அதற்குள் மாபெரும் சத்தியக வளர்ந்துவிட்டதாக ஒரு பிரம்மை .

அறிவியலால் அளிக்கப்பட்ட மனித ஆற்றலையே கண்டுபிடிக்க முடியவில்லை அதற்குள் அடுத்த கிரகத்தில் குடியேறும் ஆசை....


உண்மையான தேடல் மரணம் இதை நீ அறிவைய மனித 

தேடல் தொடரும் ...