அலசல், புத்தகம், விமர்சனம்.

Monday 5 October 2015

குற்றம் கடிதல் - திரையில் ஒரு பாடம்

குற்றம் கடிதல் -  திரையில் ஒரு பாடம்


நண்பர்களே ஒரு குற்றம் கடிதல் என்ற திரைப்படம்  ஒரு மனித வாழ்க்கையை தத்துருபமாக எடுத்துக்காட்டி வெளிவந்துள்ளது. அது  மட்டுமல்லாமல் திரைப்படம் எடுத்து வைத்திருக்கும் கேள்வியும் சாதாரணமான கேள்வி அல்ல வருங்காலங்களில் பெரும் பிரசினையாக உருவெடுக்க போகும் ஒரு விஷயம். 


"உலகம்  முழுவதும் குப்பையும், சாக்கடையும் நிறைத்திருக்கு; எல்லாத்தையும் சுத்தம் செய்ய முடியாது நம்ம காலுக்கு வேணும்னா செருப்பு போடலாம் "

இந்த வேலையை தான் வருங்காலங்களில் குழந்தைகளின் பெற்றோரும் ஆசிரியர்களும் செய்யவேண்டிய காட்டாயம்.



குற்றம் கடிதல் அலசல் ஒளிபதிவிர்க்கு இங்கு கிளக் செய்யவும்



Friday 12 June 2015

திரைப்படங்கள் ஒன் லைன் விமர்சனம் :



திரைப்படங்கள் ஒன் லைன் விமர்சனம் :

நான் பார்த்த திரைப்படங்கள் வண்ணம் +ஒருவரி விமர்சனத்துடன் 
நல்லபடம் - பச்சை 
பார்க்கலாம் - மஞ்சள் 
பாக்கதிங்க - சிகப்பு 


மாஸ்  - பெய் பட வரிசையில் சூர்யாவின் படம் 

புறம்போக்கு- ​ ஜகனதனின்  மற்றும்மொரு மறுபட்டபடைப்பு

உத்தமவில்லன் - பார்க்கலாம் ஒரு வித்தியாசமான கமல் படம் 

காஞ்சனா - முனியின் மூன்றாம் பாகம் போனா சிரிக்கலாம் ...

ஓகே கண்மணி- இளசுகளின் காதல் சரி , இந்தகாதலை ஒரு சகோதரனாக இளசுகளால் அன்கிகரிக்கபடுமா ?

கொம்பன் - பருத்திவீரன் என்றாலும் பாசவீரன் 

ஜே கே என்னும் நண்பனின் வாழ்க்கை - சேரனின் நம்பிக்கை 
நன்பேண்ட - ஏன்டா கழுத வேடரிங்க (குப்ப படம்)









Sunday 31 May 2015

ஆன்லைன் ஷாப்பிங்...



ஆன்லைன் ஷப்பிங் நவீன நாகரிகத்தின் ஒரு  வரமாக வர்த்தகரீதியாக கருதபடுகிறது, இந்த ரீதியில் வர்த்தகம் செய்யும் நிறுவனங்களும் நாளுக்கு நாள் அதிகமாகிவருகின்றனர், மக்கள் இணையதள இணைப்பின் மூலம், இந்த முறையிலான வர்த்தகத்தில் ஆர்வம் காட்டிவருகின்றனர். இருத்த இடத்திலிருந்தே தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்க நினைக்கும் மக்களின் நேரம் இல்லாமை இந்த வர்த்தகத்திற்கு பெரிதும் துணைநிற்கிறது.


வாடிக்கையாளர்களின் நிறைவு

ஒரு பொருளை தேர்ந்தெடுக்கும் முன்  அதன்  தரம் குறித்தன நுகர்வோரின் குறிப்புகள் பெரிதும் பயன்படுகிறது.
 பல வர்த்தக நிறுவனங்கள் பணம் திரும்ப தரும் வசதி, சாந்த முறையில் பொருள்களை வாங்கும் வசதியையும் அளிது வருகிறது.
அதிகமான  பொருக்களை பார்க்க குறைந்த நேரமே போதுமானதாக உள்ளது .

சேவைநிறுவனங்களின்  இலாபம்
                               மிக அதிக பொருள் செலவில் வணிக தளங்கள் நிறுவவேண்டிய அவசியம் இல்லை ,
விளம்பரத்திற்கான செல வும் மிக குறையே , சமுக இனைய தளங்களில் வாடிக்கையாளர்களே பொருள்களை பரிந்துரைகின்றனர்.
மாநில ரிதியான விற்பனை வரி வித்தியசதிலிருந்து தப்பித்து கொள்ளலாம் .
முதலீடுகள்  பங்குதாரர்கள் மூலம் பெறபடுகிறது .
மக்களை  கவரும் விதமாக மாய  சலுகை விளம்பரபடுத்த படுகிறது.
காலவரையாகும் பொருள்களை எளிதில்  விற்பதற்கு ஒரு சிறந்த ஊடகமாக உற்பத்தியாளர்களால் தேர்தெடுக்கபடுகிறது.
50 % மக்கள்  பொருள்களில் குறைபாடு இருந்தால் திரும்ப கொடுக்கும் சேவையை பயன்படுதுவதில்லை.
 
 
மொத்தத்தில் பார்க்கும் போது வருங்காலங்களில் மக்கள் ஆன்லைன் வர்த்தகத்தையே பெரிதும் விரும்புவார்கள்ம, பல வணிக நிறுவனங்கள் மூடபடலாம் அல்லது ஆன்லைன் சேவைக்கு மாறலாம் , இடைதரகு விலை குறைய வாய்பிருகிறது...

 

Sunday 12 April 2015

மீண்டும் வருவேன் மீண்டு வருவேன்

 
ஒருசிறிய இடைவேளைக்கு பின் மீண்டும் தொடர்கிறது என் எழுத்துகளும், கருத்துகளும் ....
 
சமிபகாலமாக வெற்றி கூட்டணி என்றபேரில் மீண்டும் மீண்டும் வந்த வாசமே வந்து வந்து போகிறது, இதில் சில திரை படங்கள்  வெற்றியடைந்தாலும், இரண்டு படங்களின் கட்சிகளும் ஒப்பிடும் வகையில்தான் உள்ளன. இதற்கு புதிதாக ஒரு பெயர் சூட்டும் கரணம் தான் தெரியவில்லை.
 
அதே கூட்டணி, அதே கதை களத்தில் படங்கள் எடுப்பதில் தவறில்லை; ஆனால் ஹாலியுட் படங்களை போல் பாகங்களாக தயாரிக்கலாம். புதிய பெயரில் மக்களை எதிர்பார்க்க வைத்து ஏமாற்றுவதை விட - இது தான் கதை என்று மக்கள் ஏற்றுகொள்வார்கள்.
 
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்த மூன்று படங்களின் வேற்றுமையை கண்டறிக என போட்டியே வைக்கலாம் .
 
மனம் கொத்தி பறவை மாறுபடியும் வெள்ளைகாரதுரை 
 
பருத்திவீரன் சில வருடங்களுக்கு பின் கொம்பன், ஆனாலும்  படம் பார்க்கும் விதமாகவே இருந்தது.
 
சில இயக்குனர்கள்  தமிழில் கூட ஹலியுட்  முறையை பின்பற்றுகிறார்கள்; உதாரணமாக- சிங்கம் 2,காஞ்சனா 2...
 
முந்தய விஜயின்   படங்கள்  ஒரே கதையமைப்பில் இருப்பது சாதாரணம் அது சற்று மாறிவருகிறது.

விஜயகாந்த், சரத் குமார் , கார்த்திக் , ஆர்ஜுன் போன்ற ரிட்டாடு ஆனா நடிகர்களின் மத்தியில் இடைக்கால நடிகர்கள் பலர் காணாமல் போயிருக்கிறார்கள். அந்தபட்டியல் நாளுக்கு நாள் அதிகமாக காரணம் புது முகங்களின் அறிமுகம்,  அதே சமயம் ஷாம் , பிரசாந்த் , விக்ராந்த் , ரவி கிருஸ்ன , ரமேஸ் , சிபிராஜ் போன்ற பின்பலம் உள்ள நடிகர்களின் "கம் பேக் " முயற்சிகளும் தொடர்கிறது.

அதைபோல் சினிமாவில்  தன்துறைவிட்டு தாவி தானும் ஹீரோ என  திரைக்குமுன் வந்து  தத்தளிப்பவர்களும் ஏராளம் அவர்களின் பட்டியல்  வடிவேல் ,விவேக் , சேரன் , s .j சூரியா, என  நீளுகிறது.

என்ன வேண்டுமானாலும்  நடக்கலாம் அதுதான் சினிமா .....
                                                                                                                               தொடரும்...
 

Monday 19 January 2015

ஐ அழகு என்றால்; பி கே அறியாமையா ?

 

 
 
நிச்சய வெற்றி என்று களமிறங்கிய இரண்டு படங்கள்  "ஐ  " மற்றும்  "பி கே" ஆனால் ...
 
  "ஐ" திரைப்படம்  எதிர்பார்ப்பை நிறைவேற்ற தவறியது, விக்ரமின் நடிப்புக்கு மாற்று கருத்தில்லை. ஆனால் ஷங்கரின் பிரம்மாண்ட படைப்பாக வெளிவரும் படங்கள், அணைத்து தரப்பாலும் பாராட்டபடும்; அதை ஷங்கர் மறந்திருப்பதாக தோன்றுகிறது. பிரம்மாண்ட படைப்புகள் கொடுக்க முன்வரும் ஆஸ்கர் நிறுவனத்தை படத்தின் வெற்றி யேசிக்க வைக்கும்.
 
விக்ராமின் கடும் உழைப்பையும், பணத்தையும் வீணாக்கி இருப்பதாகவே தெரிகிறது.விக்ரம் நடிப்பில் மிரட்டுவார் , அந்த நடிப்பை அந்த ஒப்பனை உருவம் மறைப்பதாகவே தோன்றுகிறது. படத்தில் வரும் அந்த உருவங்கள் படத்தை பார்பவர்களை முகம் மாற்ற வைக்கிறது.
 
பல கோடிகள் செலவு செய்து படம் இயக்கும் இவர்களுக்கு ரசிகனாக படத்தை 
பார்க்க மாட்டார்களா என்ன ?
" கதை திரைக்கதை வசனம் இயக்கம் " படத்தில் தமிழ் சினிமாவை அசைபோடுவது சரியாகத்தான் இருக்கிறது.
 
ஷங்கர் படங்களில் கதையிருப்பதில்லை, ஆனால் புதுமை இருக்கும் அந்த இடமும் காலியாக இருக்கிறது. கொடுத்த பணத்திற்கு முற்பதியை ரசிக்கலாம். லாஜிக் என்ற ஒன்றை மறந்தே உருவாக்கப்பட்டுள்ளது  அந்த உருவம் வரும் காட்சிகள் .

                   **********************************************


"பி கே"  திரைப்படம் செல்வராகவன் தவறவிட்ட இரண்டாம் உலகத்தை 
சாதித்துள்ளது. கற்பனைகளால் நிரப்பவில்லை குழந்தை பருவத்தில் வரும் அறியாமை அழகுபடுத்துகிறது.
 
மனிதன் பல மொழி,மதம்,இனம் என  வாழும் இவ்வுலகில்; மனதால் பேசும் மனிதர்கள் இல்லை என்பதை நினைவுபடுத்துக்கிறது. மனிதனை பிளவு படுத்தும் வேற்றுமைகளுக்கு அடையாளம் கேட்கிறது.
 
அமீர்கான் நடிப்பில் மனதை கவருகிறார். படமுழுக்க சிரித்து மகிழ்ந்தாலும்; படத்தில் ஒவ்வொரு காட்சியும் சிந்திக்க வேண்டியவை.

இது ஒரு மதத்தை இழிவு படுத்தும் படமல்ல மனிதனை மனிதனாக காண தடைகள் உள்ளன என காட்டும் படம்.
 
பி கே இயக்குனரின் முந்தய இரண்டு படங்களும் தமிழுக்கு மாற்றப்பட்டு கல்லக்கட்டின ஆனால் இந்த படத்தை தமிழுக்கு எடுத்து வருவார்களா என்பது சந்தேகமே..

                                                                                                                தொடரும்.....