அலசல், புத்தகம், விமர்சனம்.

Saturday, 12 October 2013

கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏமாற்றம்

இந்தியாவில் கிரிக்கெட் மறுபெயராக கொண்டாடப்படும் சச்சின் ,வருகிற தொடருடன் முழுமையாக கிரிகெட் லிருந்து விலக போவதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது  .... 

கிரிகெட் ரசிகர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வரும் நிலையில் ,
சச்சின் விளையாட்டை பார்க்க ஒரு கூட்டம் உள்ளது , அவர்களும் விடைபெறும் நேரம் வந்துவிட்டது.  


சச்சின் கிரிக்கெட் -ல்  ஒரு யுகமாக கொண்டால் அது மிகையாகாது.பதினாறு வயதில் களம்கண்ட சச்சின், உலகின் பந்து விச்சாலர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். இன்றும் பந்து விச்சாளர்கள் மனதில் ஒரு கலக்கம் இருப்பது மறுக்கமுடியாத ஒன்று .

தான் விளையாடும் ஒவ்வொரு தினத்திலும். ரசிகர்களுக்கு எதிபார்க்க தக்க சாதனை மய்கல்காளுடனே களமிறங்கும் ஒரே வீரர்.சச்சினுக்காக உருவாக்கப்பட்ட ஒவ்வொரு மயில் கால்களையும், தாண்டுவது இயலாத ஒன்று .இளம் வீரர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் சச்சின் கிரிகெட் -ன் அடையாளம் .


இருநூறு என்பது  கிரிகெட்டில் சச்சினின் இமயம் அந்த இமயத்தை எல்லா வடிவிலும் முதல் முதலில் தொட்டவர் சச்சின் ...
 வயதை குறித்து  விமர்சனங்கள் எழுந்த போதெல்லாம் விளாசி தள்ளியிருக்கிறார்.

கிரிகெட் காண்போரின் எண்ணிக்கை மட்டும் வெகுவாக குறையும் என்பதில் ஐயமில்லை ...

No comments:

Post a Comment