அலசல், புத்தகம், விமர்சனம்.

Tuesday, 9 October 2012

அஜித்-ஐ ரசிக்கிறேன் அஜித் ரசிகனை எதிர்க்கிறேன்

     சிலரின் செயல்பாடுகளும் வாழ்க்கையும் நம்மை பிரம்மிப்படைய வைக்கும் அந்தவகையில் அஜித் செயல்களும் பலரை வியக்க வைப்பதாகவே உள்ளது ,
மனிதன் தவறுகள் செய்பவன் ஆனால் தன்னிலை மாறாமல் தன்னம்பிக்கையுடன் தன்னடக்கத்துடனும் வாழ்பவனை தலைவனாக கொண்டு பின்தொடர்வது இயல்பு. அந்த வகையில் அஜித் தனிமனிதனின் வெற்றிக்கும், உழைப்புக்கும், உயர்விற்கும் ஒரு உதாரணமாகவே அறியப்படுகிறார் .


   இன்றைய நிலையில் ஆட்சியாளர்களுக்கு சலாம் போடும் சினிமா  மனிதர்களின் மத்தியில் தன்னிலையை உலகறிய தெளிவு படுத்தியவர்அஜித்.
 நட்சத்திரங்களின் குடும்ப வாழ்க்கை தள்ளாடும் இன்றைய சூழலிலும்  நட்சத்திர தம்பதிகளாக சிறப்பாக குடும்ப வாழ்க்கையில் வெற்றிகண்டவர் .

 அரசியல் ஆதாயத்திற்காகவும் புகழுக்காகவும் ஏழைகளுக்கு உதவும் மனிதர்களில்; உலகறியாது உதவுபவர். தன்  சினிமா  அடை மொழியையே உதறியவர். 

   இந்தயாவில் வெற்றி வீரனாக இருந்த போதும், தோல்வியில் துவண்டபோதும், கிரிக்கெட் வீரர் கங்குலிக்கு அடுத்ததாக நிலையான  ரசிகர்களின் ஆதரவை பெற்றிருப்பவர். தன் ரசிகர் மன்றங்கள் சில தன்னுடைய கொள்கைகளுக்கு  எதிராக செயல்படுவதாக தோன்றியதால் அதை கலைத்தவர் .

         இத்தனை   பெருமைக்குரிய   மனிதரின் ரசிகர்கள்   பலருக்கு   அவருடைய 
பிறரைமதிக்கும் பண்பும்,  மனிதாபிமானமும், வெற்றி பெறுபவர்களை பாராட்டும்   நல்குணமும் இருப்பதில்லை . அஜித்தின் தோல்வி படங்களை ஒப்புக்கொள்ளும் மனப்பக்குவமும் சிலரிடமே உள்ளது .

 தமிழ்த்திரையுலகில் நடிகர்திலகத்திற்கு பின் நடிப்பில் முத்திரை பதித்தவர்களில் அஜித்தும்  ஒருவர் . ஆனால்    அஜித்            மட்டுமே       என்பது
ஏற்ப்புடையது அல்ல. அஜித்தின் சிட்டிசன் ,வாலி ,வரலாறு போன்ற படங்கள் அஜித்தின் நடிப்பு திறமையை வெளிப்படுத்தின ...

         ஒரு சிறந்த      மனிதனின்    ரசிகனாக   இருந்து   கொண்டு    மற்றவர்களை
போல், அடுத்தவரின்  படைப்பையும் வெற்றியையும் தரக்குறைவாக விமர்சிப்பத்தும்; ஏற்றுக்கொள்ள மறுப்பதும்,நடிகனின் நடிப்பை பார்க்காமல்  நடிக்க வேண்டிய திரைப்படங்களில் ஆடதேரிய வில்லை என மற்றவர்கள் அஜித்தை விமர்சிப்பதுக்கு  நிகராகவே உள்ளது .இதனால் அஜித்தை ரசிக்கும் பலரால் அஜித் ரசிகர்களை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை......4 comments:

 1. உங்கள் வாதம் நியாயமானதே... இது அஜித் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, தங்கள் அபிமான நடிகர் மேலுள்ள அபிமானத்தால் ஏனைய நடிகர்களை கேவலப்படுத்திக்கொண்டிருக்கும் ஒவ்வொரு ரசிகனுக்கும் பொருந்தும்.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான், சினிமா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் சில ரசிகர்களின் தொல்லைகள் நிறைந்துள்ளது. இது மாறவேண்டுமானால் ரசிப்பு தன்மை வளரவேண்டும்...

   Delete
 2. ஆல் தல வெறியர்ஸ், இந்த பேட்டில தல சொன்னத பாலோவ் பண்ணாலே போதும்...

  அதித் ரசிகர்களுக்கு தல அஜித்தின் அன்பு வேண்டுகோள்

  ReplyDelete
  Replies
  1. பின்னுட்டத்திற்கு நன்றி ...
   அஜித்தின் இந்த பேட்டி வந்து பலமாதங்கள் ஆனாபின்பும் ரசிகர்கள் மாறவே இல்லை. அதலால் அவர்கள் அஜித் ரசிகர்கள் இல்லை என்று ஆகிவிடுமா ?

   Delete