அலசல், புத்தகம், விமர்சனம்.

Sunday, 30 September 2012

காப்பாத்துங்க மை லாட் கொல்ல பாக்குறாங்க...

   இந்தியாவில் ஒவ்வொரு  மனிதனும்   பிறத்தது முதல்  தன்  உயிரை காத்து கொள்ள போராடுகிறான்..     அவனை  மனதளவில்    கொல்ல பணப்பேயிகள்  நடமாடி கொண்டே  இருக்கின்றன. அவைகளிடமிருந்து   மக்களை காப்பாத்த யாருமே இல்லையா மை லாட் (நீதி) 

  மனிதன் மனதளவில் ஒவ்வொரு நிமிடமும் பாதிப்புக்கு  உள்ளாகிறான்.
மனதழுத்ததினுடனே நோயாளி ஆக்கப்பட்டு சாகடிக்க படுகிறான். 

  மருத்துவமனைகள் மனிதனை நோயாளி ஆக்குவதில் முக்கியபங்கு வகிக்கின்றது, மருத்துவமனைகள் மனிதனின் நோயை அதிகபடுத்தி காசுப்பார்க்க துடிக்கின்றன. மருத்துவமனைக்கு போகும் மனிதர்களை மணிகணக்கில் காக்கவைத்து மனழுத்தத்தை அதிகரிக்க செய்கின்றனர்.
தங்களின் சுயலாபத்திர்க்காக மருந்துகளை எழுதிக்குவிக்கின்றனர் . 

       பல பொது பணியிடங்களில்  வேலை   செய்யும்   அரசு       மற்றும் தனியார்  
ஊழியர்கள்    சாதாரண மக்களின்           உணர்வுகளுக்கு    மதிப்பளிப்பதில்லை 
வாசகபலகைகளில் மட்டுமே மதிப்பு உள்ளது. 


  அரசு ஊழியர்களின் அலச்சியத்தால் சாதாரண மனிதர்கள் பாதிக்கப்பாடுவது 
வாடிக்கையாகிவிட்டது.  பேருந்துகளில் பயணிப்பவர்கள் நடத்துனர்களும் ஓட்டுனர்களும் அவமதிக்கப்படுகின்றனர். அரசு வேலை என்பது அரசினுடைய வேலையாள்; அரசு என்பது மக்கள் என்பதை மறந்து அதிகார கர்வத்துடன் மக்களை மிரட்டுகின்றனர். இதை எதிர்த்து போராட அல்லது நீதி கேட்டு நீதிமன்றம் செல்லும் அளவுக்கு சாதாரண மனிதர்களிடையே வலிமையிருப்பதில்லை.மனித உரிமைகள் சாதாரண மக்களுக்கு மறுக்கபடுகிறது.

   இன்றைய ஆட்சி நிலையை  பார்த்தால் மக்களை பாதுகாப்பதை விட்டுவிட்டு இறந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் என்ற அறிக்கை வாசிக்கும் ஆட்சியாகவே உள்ளது. உயிருடன் இருப்பவனுக்கு பாதுகாப்பில்லை இறந்துவிடுங்கள் பணம் தருகிறோம் என்ற நிலையில் ஆட்சி. நடந்துவரும் விபத்துக்களும் இதையே   உணர்த்துகின்றன... 


 மக்களை கொன்று குவித்தவனுக்கும்,கொல்ல நினைப்பவனுக்கும் மனிதவுரிமையும்,சட்டமும் துணைநிர்க்கின்றது. சாதாரண மக்கள் வாழ்வதற்க்கான உரிமைக்கூட பணத்தாசை பிடித்த கயவர்களால் மறுக்கபடுகிறது.

  நாமும் சொல்லுகிறோம் நாம்நாடு சுகந்திரம் அடைத்துவிட்டது,
மக்களாட்சி  நடைபெறுகிறது  என்று உண்மை உலகறியும் தமிழகத்திலேயே தமிழன் வதைக்கபடுகிறான்....காப்பாத்துங்க மை லாட்  கொல்ல பாக்குறாங்க...

  கல்வி விற்ப்பனைக்கு வைக்கப்பட்டுள்ள ஒரு பொருளாகவே மாறிவிட்டது .

  ஆட்சியாளர்கள் பணம் சம்பாதிப்பதை குறிகோளகக்கொண்டு மக்களின் நலனை கருத்தில்கொள்ளாமல் செயல்ப்பட்டுவருகின்றனர் .அன்னிய முதலிடுகளை அனுமதித்து மக்களின் வாழ்வாதாரத்தையே அழிக்கின்றனர் .தன்னை தானே காத்துக்கொள்ளும் வலிமைபடைத்தவன் மட்டுமே  கயவர்களை எதிர்த்து வாழ முடிகிறது ...

இயலாதவனுக்கு கொடுக்கவேண்டிய இலவசங்களை இல்லாதவனுக்கும் கொடுத்து; இருப்பவனையும் இல்லாதவனக்கி விட்டனர் .1 comment:

  1. "விரல்களை விற்று மோதிரம் வாங்க பழகிவிட்ட கயவர்கள்; வீணைகளை கூட விறகாக்கி விடுகிறார்கள்"-MDM

    ReplyDelete