அலசல், புத்தகம், விமர்சனம்.

Wednesday 5 September 2012

எல்லாருமே திருடங்கதான்

                                         
    இந்த பதிவு   எழுதநினைத்த போது முதலில் தோன்றிய  தலைப்பு
" உங்கள்மேல் குற்றம் இல்லாதவர் முதல்லில் கல்  எறியட்டும் " பின்பு  ஆன்மீக  வரியாக தோன்றியதால் மாற்றிவிட்டேன்  அலசநினைத்த கருத்தையும்  ஒரு நிகழ்ச்சி வடிவில் வளங்கியுள்ளேன்.            

(பின்னனியில் முதல்வன் காட்சியை நினைத்துக் கொள்ளுங்கள் )

  வணக்கம் நேயர்களே நம்முடைய "யாரேன தெரிகிறத" நிகழ்ச்சியின்
முதல் பதிவுக்கு அனைவரையும் வரவேற்க்கின்றேன் இன்று நாம் உரையாடயிருப்பது தமிழகத்தின் திருட்டுக்குடும்ப தலைவர் என மக்கள்
கருதும் மேதையுடன்.

                                                                          
புகழ்   :வணக்கம் ஐயா,
எக்ஸ்: வணக்கம் .

புகழ் :   ஐயா தமிழகத்திலேயே சிறந்த திருட்டுகுடும்பமாக உங்களை         தேர்ந்தெடுத்திருப்பது பற்றி என்ன நினைக்கிறிங்க ?
எக்ஸ்: சந்தோசமா இருக்கு என்னோட வாரிசுங்க திருட்டுல உலகத்திலே முதலிடத்தில வருவாங்க.

புகழ் : ஆனா  நீங்க இப்போவிட்டுல இல்ல இருக்கிறிங்க இதுக்கு யாரு    காரணம் ?
எக்ஸ்:இந்த  கூத்து காரனுங்கதான் ஆப்பு வச்சுட்டானுங்க, ஒரு பாலம் கட்ட போய் ஒருத்தன் சீனுக்குள்ள வந்துட்டன் .

புகழ் : கூத்துல   கூடா உங்ககுடுப்பம் மத்தவங்கள  காசுபாக்க விடலயாமே ?
எக்ஸ்:தம்பி தெரியாம பேசக்கூடாது நானும்  கூத்துகட்டுனவந்தான் அப்புறம்
என்னோடபுள்ளங்க  கூத்து கட்டுன தப்ப?

புகழ் :தப்பில்லைங்க ஐயா ஆனா அடுத்தவன்  கூத்த ஓட விடமே பாண்டிக்காறதம்பி தட்டடிச்சாரமே ?
எக்ஸ்: கூத்து நல்லாயிருந்த ஓடும்,இன்னைக்கு  கூத்து  கூட   அடுத்தவனுங்ககிட்ட இருந்து களவாண்டு தான் எடுக்கிறான், இந்த குத்து கரபயலுங்க ஒழுங்க வருமான வரி  கூட கட்டுறதில்ல. கேட்ட கோட்டைக்கு
வர நிக்கிரானுங்க.

புகழ்:பக்கதுல நம்ம ஆளுங்களா கொன்னப்போ நிங்க பெருசா ஒன்னும் பண்ணலியே ?
எக்ஸ்: என்னால மரத்தடியில காத்து வாங்க தான் முடியும். அதுக்காக
சாகவா முடியும் ;அதன் இளவு நடந்தத மற(றை)க்க உலக நம்ம மாநாடு நடத்தினேனே போதாதா ?
அதுக்குமேலே என்னாலே ஒன்னும் மேலே சொல்ல முடியாது  அதுதான் சீனு...

புகழ் :"யாரேன தெரிகிறத" நிகழ்ச்சியில் ஒரு  இடைவேளை


"உலகத்தை நேசி ஒருவரையும் நம்பாதே உறங்கிய போதும்
ஒருக்கண்ணை மூடாதே "

"யாரேன தெரிகிறத" நிகழ்ச்சி தொடர்கிறது ...

புகழ் :ஐயா பாண்டியில பாறை களவாண்டிருகங்களே?
எக்ஸ்: நான் கொடுக்க வேண்டியது கொடுக்க சொன்னேன் கணக்கு தப்புல ஒரு போட்டி கொரன்சிடுச்சி அதான் புடிச்சிட்டானுங்க.

புகழ் :சமீபத்துல ஒரு  கூத்துகூட உங்கள பத்திதான் விமர்சிச்சிருக்காங்க?
எக்ஸ்: தம்பி இப்போ ஓடிட்டு இருக்க சீனு கூட என்ன பத்தினதுதான்
விமர்சிக்கிரவனுக்கு வேற வேலையில்ல , நீங்க சொன்ன   கூத்து  ஒரு மொக்க  கூத்து. பாக்க போனவங்கள நல்ல ஏமாத்தி காசுபாத்தானுங்க .

புகழ் :அடுத்தது என்ன செய்ய போறிங்க ?
எக்ஸ்: கல்ல நிரப்புது போல தெரியிது அடுத்த சீசணுல யப்படியாவது கோட்டைக்கு போகணும்.

புகழ் : கோட்டையில இருந்தப்போ முடியலேன்னு துனை வச்சீங்க இப்போ நல்ல தானே இருக்கிறிங்க ?
எக்ஸ்:அது தான்  சீனு முதல்ல கேமராவ ஆப்பண்ணுய....

புகழ் :நேயர்களே ஐயா சொன்னதாலே இன்றைய நிகழ்ச்சியின் இறுதிக்கு வந்திட்டோம்.
இன்றய நிகழ்ச்சியில் பங்கு பெற்ற  (எக்ஸ்)  "யாரேன தெரிகிறத" உடனே தெரின்சிக்கணும்.... ம்ம்ம்....

மீண்டும் அடுத்த திருடரை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடை பெறுவது உங்கள் புகழ் ....
                           
பி .கு:இங்கு குறிப்பிட்டுள்ள எக்ஸ் மட்டும்  அல்ல நாம்  எல்லாருமே திருடங்கதான் ...

அடுத்த சந்திப்பு : கூத்துக்காரன் தளபதி ......

2 comments:

  1. செமத்தியா ஓட்டி இருக்கீங்க... நீங்க ஒருத்தர மனசில வச்சி ஓட்டி இருக்கீங்க ஆனா... அது நெறைய பேருக்கு பொருந்தும்!

    ReplyDelete
  2. பின்னூட்டத்திற்க்கு நன்றி.... சந்திப்புகள் தொடரும்...

    ReplyDelete