அலசல், புத்தகம், விமர்சனம்.

Wednesday, 31 October 2012

கிணத்து தவளைகளின் ஹாலிவுட் மொக்கைகள்

           ஹாலிவுட் திரைப்படங்களில் விறுவிறுப்புடன் திரைக்கதை இருப்பதால் மொக்கைகள் கூட வசூலை அள்ளுகின்றன. தொடர்வரிசையில்     வரும் திரைப்படங்கள்   சிலவற்றில் நம்மஊர் தொலைக்காட்சி தொடர்கள் அளவுக்ககூட கதை இருப்பதில்லைசொல்லப்போனால் சிந்துபாத்( தினத்தந்தி) அளவுதான். அதை வைத்துக்கொண்டு அவர்கள் ஓட்டும் ஓட்டு தாங்கமுடியவில்லை.


   ஒரே படத்தை புது  தொழில்நுட்பம் வரும்போது எல்லாம் தயாரித்து காசுப்பார்க்கின்றனர். அரைத்த மாவையே அரைக்கின்றனர். குறிப்பாக (ஸ்டார்ஸ் வார்ஸ்)திரைப்படம் நம்மூரில்  தூதர்ஷ்சனில் தொடர்களாக வெளிவந்த சத்திமான் ,ஜுனியர்- ஜி, ஆரியமான்,ஹிமேன்  அளவுக்கூட கதை இருப்பதில்லை ஆனால் வசூலில் வாரி குவித்தன .


போர்ன் தொடர் திரைப்படங்கள் விறுவிறுப்பான திரைக்கதையால் வெற்றி மகுடம் சூடியது ஆனால் கதையை பார்த்தல் இரண்டு பக்கங்கள் கூட இல்லை.

ஜேம்ஸ்பண்ட் திரைப்படங்கள் ஹாலிவுட் மொக்கைகளுக்கு சிறந்த உதாரணம் ரசியாவையே குறிவைத்து பலபாகங்கள் மொக்கை போட்டன. படபிடிப்பு தளங்கள், கேமராகோணங்கள், கவர்ச்சி இவற்றின் புதுமையால் அரைத்த மாவையே வைத்து காசுபார்க்கின்றனர்.  ஜேம்ஸ்பண்ட் தொடரில் தற்ப்போது நடித்துவரும் சில நடிகர்களுக்கு நடிக்கவேண்டும் என்பதே மறந்து விடுகிறது .


    இதில் கொடுமை என்னவென்றால் இந்த மாதிரியான திரைப்படங்களுக்கு சிலர் வக்காளத்து வாங்குகின்றனர். இவர்களில் சிலருக்கு தமிழ்திரையுலகில் வரும் சிறந்த படைப்புக்களை பற்றி பேசுவதற்கு நேரம் கிடைப்பதில்லை.

  இன்னும் சிலர் தமிழில் ஹிரோயிசத்தை எதிர்த்துவிட்டு;  ஹாலிவுட் ஹிரோயிசத்திற்க்கு கைதட்டுகின்றனர்.உலக அளவில் பல நல்ல திரைப்படங்கள் வந்தாலும், ஹாலிவுடில் மொக்கைகளே அதிகம் .

   ஹரிபட்டர் தொடர்கள் இரண்டு பாகங்கள் எடுப்பதற்க்கான கதையே உள்ளது அதை வைத்துக்கொண்டு பல பாகங்கள் எடுத்து காசுப்பார்த்தனர். திகிலும், குழந்தைகளின் ஆர்வமும், பின்னனியிசையும்  துணைநின்றது . நம்மூரில் தொலைகாட்சி தொடர்களில் பின்பற்றப்படும் அடுத்த பாகத்தை எதிர்பார்க்கும்
ஆர்வத்துடன் ஒவ்வொரு பாகங்களையும் முடிக்கும் வித்தையே கையாளப்பட்டுள்ளது .

(லாட் ஆப் தி ரிங் பாகங்கள் தனித்துவம் வாய்ந்தவை அவை இதில் சேராது.)

  தமிழிலும் தற்போது இந்த பழக்கம் பரவ தொடங்கியுள்ளது. தமிழ்த் திரையுலகில் இப்போது ரீமேக் என்ற பெயரில் தமிழ்சினிமாவின்  அடையாளங்களாக விளங்கும் திரைபடக்களை ரீமேக் செய்து  மொக்கைகள் ஆக்குகின்றனர்.  இதற்க்கு உலகில் சிறந்த படங்களை தமிழில் காப்பியடிப்பதே மேல் .

  கிணத்து தவளைகள் தான் அறிந்ததே உலகம் என்ற எண்ணத்துடன் வாழ்பவை அதுபோலவே உலகில் பலமனிதர்கள் நடமாடுகின்றனர். அறிவு, அனுபவம், ஞானம் என்பவாற்றல் மனிதன்  வெற்றிபெற போராடுகிறான் ஆனால் இந்த மூன்றின் வேறுபாட்டையும் அறியதவனே தன்னை அறிவாளி  என்பவன். உலகளவில் தமிழ்சினிமா வளர்வதற்கு தமிழ் ரசிகர்கள் உலகளாவிய ரசினையுடன் தமிழ்சினிமாவை வரவேற்க்கவேண்டும் ...

பி .கு : மாதம் முடிவதால் அவசரமாக  மரண மொக்கை வெளியிட்டுள்ளேன் படித்தவர்கள் மறந்துவிடுங்கள் ... 
4 comments:

 1. நல்ல பதிவு... :) ஹாலிவுட் மார்க்கெட் ரொம்ப பெருச..பெரிய படங்கள் கிட்ட தட்ட 4000 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும். படம் மொக்கையா இருந்தாலும் முதல் வாரதுலே வசூல் அள்ளிடும்.... :)
  //இன்னும் சிலர் தமிழில் ஹிரோயிசத்தை எதிர்த்துவிட்டு; ஹாலிவுட் ஹிரோயிசத்திற்க்கு கைதட்டுகின்றனர்//
  எந்த படமா இருந்தாலும் அந்த காட்சி நல்லா இருந்தா நான் கை தட்டுவேன் பாஸ்.. :)

  ReplyDelete
  Replies
  1. பின்னுட்டத்திற்கு நன்றி ...
   //எந்த படமா இருந்தாலும் அந்த காட்சி நல்லா இருந்தா நான் கை தட்டுவேன் பாஸ்//
   உங்களை போல் ரசிகர்கள் பொருக்கவேண்டும் ...

   Delete
 2. தல ரெண்டு விண்ணப்பம்:
  1) word verification எடுங்க...கமெண்ட் போட கஷ்டமா இருக்கு...
  Steps to remove it:
  Go to Blogger --> Settings --> Posts and comments --> Show word verification --> NO.

  2) அப்புறம் followers widget ஒன்னு வையுங்க...
  விருப்ப பட்டா தமிழ்மணம் என்கிற திரட்டில இணையுங்க...நிறைய ப்ளாக் ரீடர்ஸ்சை நம்ம பதிவு சென்று அடையும்..

  ReplyDelete
  Replies
  1. //word verification எடுங்க...கமெண்ட் போட கஷ்டமா இருக்கு...//
   வழிகாட்டுதலுக்கு நன்றி... விரைவில் சரிசெய்கிறேன் ...:)

   //அப்புறம் followers widget ஒன்னு வையுங்க...//

   இறுதியில் google+ உள்ளதே...:)

   Delete