அலசல், புத்தகம், விமர்சனம்.

Monday 19 January 2015

ஐ அழகு என்றால்; பி கே அறியாமையா ?

 

 
 
நிச்சய வெற்றி என்று களமிறங்கிய இரண்டு படங்கள்  "ஐ  " மற்றும்  "பி கே" ஆனால் ...
 
  "ஐ" திரைப்படம்  எதிர்பார்ப்பை நிறைவேற்ற தவறியது, விக்ரமின் நடிப்புக்கு மாற்று கருத்தில்லை. ஆனால் ஷங்கரின் பிரம்மாண்ட படைப்பாக வெளிவரும் படங்கள், அணைத்து தரப்பாலும் பாராட்டபடும்; அதை ஷங்கர் மறந்திருப்பதாக தோன்றுகிறது. பிரம்மாண்ட படைப்புகள் கொடுக்க முன்வரும் ஆஸ்கர் நிறுவனத்தை படத்தின் வெற்றி யேசிக்க வைக்கும்.
 
விக்ராமின் கடும் உழைப்பையும், பணத்தையும் வீணாக்கி இருப்பதாகவே தெரிகிறது.விக்ரம் நடிப்பில் மிரட்டுவார் , அந்த நடிப்பை அந்த ஒப்பனை உருவம் மறைப்பதாகவே தோன்றுகிறது. படத்தில் வரும் அந்த உருவங்கள் படத்தை பார்பவர்களை முகம் மாற்ற வைக்கிறது.
 
பல கோடிகள் செலவு செய்து படம் இயக்கும் இவர்களுக்கு ரசிகனாக படத்தை 
பார்க்க மாட்டார்களா என்ன ?
" கதை திரைக்கதை வசனம் இயக்கம் " படத்தில் தமிழ் சினிமாவை அசைபோடுவது சரியாகத்தான் இருக்கிறது.
 
ஷங்கர் படங்களில் கதையிருப்பதில்லை, ஆனால் புதுமை இருக்கும் அந்த இடமும் காலியாக இருக்கிறது. கொடுத்த பணத்திற்கு முற்பதியை ரசிக்கலாம். லாஜிக் என்ற ஒன்றை மறந்தே உருவாக்கப்பட்டுள்ளது  அந்த உருவம் வரும் காட்சிகள் .

                   **********************************************


"பி கே"  திரைப்படம் செல்வராகவன் தவறவிட்ட இரண்டாம் உலகத்தை 
சாதித்துள்ளது. கற்பனைகளால் நிரப்பவில்லை குழந்தை பருவத்தில் வரும் அறியாமை அழகுபடுத்துகிறது.
 
மனிதன் பல மொழி,மதம்,இனம் என  வாழும் இவ்வுலகில்; மனதால் பேசும் மனிதர்கள் இல்லை என்பதை நினைவுபடுத்துக்கிறது. மனிதனை பிளவு படுத்தும் வேற்றுமைகளுக்கு அடையாளம் கேட்கிறது.
 
அமீர்கான் நடிப்பில் மனதை கவருகிறார். படமுழுக்க சிரித்து மகிழ்ந்தாலும்; படத்தில் ஒவ்வொரு காட்சியும் சிந்திக்க வேண்டியவை.

இது ஒரு மதத்தை இழிவு படுத்தும் படமல்ல மனிதனை மனிதனாக காண தடைகள் உள்ளன என காட்டும் படம்.
 
பி கே இயக்குனரின் முந்தய இரண்டு படங்களும் தமிழுக்கு மாற்றப்பட்டு கல்லக்கட்டின ஆனால் இந்த படத்தை தமிழுக்கு எடுத்து வருவார்களா என்பது சந்தேகமே..

                                                                                                                தொடரும்.....

No comments:

Post a Comment