அலசல், புத்தகம், விமர்சனம்.

Sunday, 24 March 2013

சிலுவைக்கே சிறப்பு

பாவத்தின் அடையாளமாக விளங்கிய சிலுவை பரிசுத்தத்தின் மகத்துவமாக மாற்றிய ஆச்சரியம் இயேசு .

இன்று நம் நாட்டில் தூக்கு கயறு எவ்வளவு அவமரியதயகிய ஒன்றாக கருதப்படுகிறதோ அதைவிட பல மடங்கு அன்றைய மக்களால் அவமனத்துகுரிய சின்னாமாக விளங்கியது சிலுவை மரணம்.  அப்படிப்பட்ட ஒரு சிலுவை இன்று மக்கள் நெஞ்சில் அடையாள சின்னமாக அணிதிருக்கின்றனர்.


சிலுவை இரண்டு மரத்துண்டுகளின் இணைப்பு அல்ல விண்ணையும் மண்ணையும் இணைக்க வந்த உறவுகோடு -MDM

சிலுவைமரத்தில் சிந்திய ரத்தம்  பாவங்களை கழுவுவி சிலுவையை புனிதம் பெற செய்தது.  சிலுவை ஒரு அடையாளம் சின்னம் மட்டுமல்ல ஒரு ஆராதனை சின்னம், இயேசு இந்த உலகில் வாழ்ந்த ஒவ்வெரு நிமிடமும் அடையாளமாகவே திகழ்தார்.
அவர் செய்த ஒவ்வெரு செயல்களும் ஆராதிக்கப்படுகின்றன.


மனிதற்குலமணிக்கம் இயேசுவால் சிலுவைக்கே சிறப்பு என்றால்; பெண்களுக்குள் அசிர்வதிக்கபட்ட மரியாள்  மண்ணுலகில் பத்துமாதம் இயேசுவை தன் வயற்றில் சுமந்து தன் இரத்ததை பாலாக்கி  மனிதராக  உருகொடுத்த சிறப்பு சிறிதாகத்தே ! இயேசு சிந்திய இரத்தம் மரியாளின் இரத்தம் .


மனிதர் நெஞ்சங்களில் சுமக்கும் சிலுவை அடையாளம் அல்ல; அபிமானம். சிலுவை சுபப்பவன் குற்றவாளி என்ற காலம் மாறி குற்றங்களை மன்னிப்பதற்காக  பலர் சிலுவையை பயன்படுத்துகின்றனர். பாவத்தின்
சிலுவை பரிசுத்தம் ஆக்கப் படத்தின் விளைவே; கிறிஸ்துவின் அடையாளமாகவும், கிறிஸ்தவத்தின் அடையாளமாகவும் சிலுவை போற்றப்படுகிறது.

சிலுவையில் சிந்தப்பட்ட ரத்தமும்,
சிலுவையில் சிதைக்கப்பட்ட உடலும் பாவம் போக்கும் அருமருந்தாக கத்தோலிக்க திருசபையால் பின்பற்றப்படும் மரபானது.

உண்மையில் சிலுவை மரணம் நமக்கு நினையுட்ட வேண்டியது பாவங்கள் கழுவப்பட்டு மனிதன் புனிதனாக இயேசு உயிர்நித்தது மட்டுமல்ல;
தன்னால் படைக்கப்பட்ட மக்கள் இரட்சிப்பு  பெறுவதற்காக தன் உயிரையே கொடுக்கும் தியாகம்.


நாம் உயிரை கொடுக்கா விட்டாலும்; இந்த சிலுவை நாட்களில் ஆவது நமக்கு அடுத்திருப்பவர்களுக்கு நம்மால் ஆனா உதவி செய்வதனால் நாமும் கிறிஸ்தவர்களாக  நிலை பெறலாம்.

ரோட்டோரங்களில் கையேந்தும் இயலாதவர்கள் முதல் இறைவனிடத்தில் கையேந்துபவர்கள் வரை, ஒருவர் மற்றவரை சார்ந்து தான் வாழ்கின்றனர்.

"கேளுங்கள் பெற்றுக்கொள்வீர்கள் ,தட்டுங்கள் உங்களுக்கு திறக்கப்படும் "

மனிதர்கள் ஒருவர் மற்றவருக்கு உதவுவது இயேசு விருப்புவது அதுவே கிறிஸ்தவம் அதை சிலுவை நாள்களிலாவது கடைபிடிப்போம் ...No comments:

Post a Comment