அலசல், புத்தகம், விமர்சனம்.

Thursday 26 July 2012

சாத்தான் வேதம் ஓதுகிறான்...


கத்தோலிக்கத்திருச்சபை


                        சாத்தான் வேதம் ஓதுகிறான்           

                                                             அன்பு Vs ஆசை                                                      

 நூலடக்கம் 
   *முதலுரை   

 1.   இறைவனும் மனிதனும் 
 2.   கத்தோலிக்க விசுவாசம்
 3.   இறைவனின்  கட்டளை
 4.   தீமைகளின்  தாக்கம் 
 5.   இறைவனின்  வார்த்தை
 6.   இயேசுவின்   வாழ்வு
 7.   திருப்பலியும்  நற்கருனையும்
 8.   மரபுகளும்  அடையளங்களும்
 9.   இறைவனின்  கோபம்
 10. குழப்பங்களிலிருந்து  தெளிவுப்பெறுவோம் 
   *நன்றியுரை 


*முதலுரை:
    ஒரு  நாணயத்திற்கு  இரண்டு  பக்கங்கள்  இருப்பதுபோல்  மனிதனின்  மனதும்  இரண்டு  பக்கங்களாகவே  செயல்படுகிறது. அன்பு  வழியிலும் , ஆசைக்கு  அடிமையாகியும் மனிதன் வாழ்கிறான்; ஆசைக்கு அடிமையாகி  பாவச்செயல்கள்  செய்வதைவிட்டு விட்டுஅன்புவழியை  பின்பற்றி  இறைவனடிசேரவே  ஜெபங்கள்   தேவைப்படுகின்றன.

    மனம்  தூய்மையானவர்களுக்கு  ஜெபங்கள்   தேவையில்லை; ஆனால்  மனிதரில் எவரது  மனமும்  தூய்மை  இல்லை  எனவே  மனிதன்  பாவங்களில்  இருந்து  விடுதலைப்பெறுவதற்கு ஜெபிக்கிறான், இறைவனை விசுவாசித்து சாத்தானின் பிடியிலிருந்து  விடுப்பட்டு,  ஆசையை  துறந்து  மனிதரிடம்  அன்புக்கொண்டு மனிதன் புனிதனாக மறவே இறைவன்  விரும்புகிறார், இதற்க்கே ஜெபங்கள்  உதவுகின்றன, கத்தோலிக்க  திருச்சபை   மனிதர்கள்  பாவங்களை  களையவும் அன்புக்கொண்டு  வாழவும்  விரும்பி , வகுக்கப்பட்ட  மரபுகளையும் அடையாளங்களையும்  பின்பற்றி  கூட்டு ஜெபவழிபாடு  திருச்சபையில் நடைப்பெறுகிறது. ஆனால் சிலர்  கத்தோலிக்க திருச்சபையை  விட சிறந்ததாக மாயை  கொண்டு,  திருசபையின் வழிபாடுகளை   முழுமையாக  அறிதுக்கொள்ளாமல் வாழ்கின்றனர். உண்மையில்    கத்தோலிக்க   திருச்சபையில்   ஓதும்  வேதம்  தான்  என்ன?
பின்பற்றும்  மரபுகள்  தான்  ஏது ?

10.குழப்பங்களிலிருந்து  தெளிவுப்பெறுவோம் 
 * மனிதன்  குரங்கிலிருந்து  வந்தவன்   என்கிறதே  அறிவியல் ?
               மனிதன்  குரங்கிலிருத்து   வந்தவனானால்   இப்போதுள்ள   குரங்குகள்  மனிதன்  ஆவது   எப்போது ...



* தந்தை,மகன்,தூயாவி,இயேசு இவர்களில்  யார் கடவுள் ?
            கடவுள் ஒருவரே ;அவரை ஓவ்வொருவரும்  அழைக்கும் விதம் மாறலாம் கடவுளின் மனித  உருவமே இயேசு. மனிதர்கள்  பலரால்  பலவிதமாக  அழைக்கபடுவது  இல்லையா ....



*விசுவாசம் என்றால் என்ன?
             விசுவாசம் என்பது நம்பிக்கை; கண்களால்  காணதப்போது வார்த்தையின் மீது நம்பிக்கை  கொண்டு அதை ஏற்றுக்கொண்டு அதை  பின்பற்றுவது. கண்களால் கண்ட ஒன்றினை நம்புவது விசுவாசம் ஆகாது ...



 * இறைவன் ஏன் தன் வல்லமையால் மக்கள் தீமையின் பக்கம் செல்வதை தடுக்கவில்லை ?
         இறைவன் மக்கள் சுகந்திரமாக வாழ்வதையே  விரும்புகிறார், அதற்காகவே நன்மையையும், தீமையையும் பகுத்தறியும் ஞானத்தை வழங்குகிறார்; இறைவன் ஆட்டிவைக்கும் பொம்மைகளாக  மனிதனிருப்பதை  இறைவன் விரும்புவதில்லை, காரணம்  இறைவனுக்கு  மனிதன்  மேல்  உள்ள   அன்பு ... 
 
  *சாத்தான் என்பது யாது ?
            உலகில் அன்பை அழிக்கும் ஒவ்வொரு விசயங்களும் சாத்தான்; இவை மனிதனை ஆசைக்கு அடிமையாக்கி தீமை செய்ய துண்டுகிறது;
மனிதனுக்கும் இறைவனுக்கும் இருக்கும் அன்பை பிளவுப்படுத்துகிறது ...



 * பரலோகம்-நரகம் என்றால் என்ன ? 
            பரலோகம் என்பது-இந்த பரந்த உலகத்தில்  நிம்மதியுடனும் அன்புடனும் மனிதன்வாழும் இடம் நரகம் என்பது-மனிதன்  ஆசைக்கு அடிமையாகி  
மாயயுலகில்  நிம்மதியின்றி வாழும்  இடம் இங்கு துன்பம் நிறைத்திருக்கும் ..



  * இறைவனடிச்சேர இறைவிசுவாசம்  இருந்தால் போதுமா ?
              இறைவனடிச்சேர தேவைப்படுவது இறைவன்  எதிர்பார்க்கும் அன்பு. இறைவன் மீது  விசுவாசம்  இல்லாதவனாகினும் பிறர்மீது அன்புடன் வாழ்பவன் இறைவனடிசேரலாம். 




  சாத்தன்கள் கூட இறைவனை விசுவாசிக்கும், அஞ்சும் ஆனால் 
அவைகளிடம் அன்பிருக்காது.

  *பலச்சபைகள் தோன்றகாரணம் ?
  *கத்தோலிக்க திருச்சபையில் சிலைவழிபாடு ஏன் ?
  *போதகர்கள் ஏன் துறவியாகவேண்டும் என்கிறது திருச்சபை?



                                                                                                                                  தொடரும்...

No comments:

Post a Comment