அலசல், புத்தகம், விமர்சனம்.

Sunday, 31 May 2015

ஆன்லைன் ஷாப்பிங்...ஆன்லைன் ஷப்பிங் நவீன நாகரிகத்தின் ஒரு  வரமாக வர்த்தகரீதியாக கருதபடுகிறது, இந்த ரீதியில் வர்த்தகம் செய்யும் நிறுவனங்களும் நாளுக்கு நாள் அதிகமாகிவருகின்றனர், மக்கள் இணையதள இணைப்பின் மூலம், இந்த முறையிலான வர்த்தகத்தில் ஆர்வம் காட்டிவருகின்றனர். இருத்த இடத்திலிருந்தே தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்க நினைக்கும் மக்களின் நேரம் இல்லாமை இந்த வர்த்தகத்திற்கு பெரிதும் துணைநிற்கிறது.


வாடிக்கையாளர்களின் நிறைவு

ஒரு பொருளை தேர்ந்தெடுக்கும் முன்  அதன்  தரம் குறித்தன நுகர்வோரின் குறிப்புகள் பெரிதும் பயன்படுகிறது.
 பல வர்த்தக நிறுவனங்கள் பணம் திரும்ப தரும் வசதி, சாந்த முறையில் பொருள்களை வாங்கும் வசதியையும் அளிது வருகிறது.
அதிகமான  பொருக்களை பார்க்க குறைந்த நேரமே போதுமானதாக உள்ளது .

சேவைநிறுவனங்களின்  இலாபம்
                               மிக அதிக பொருள் செலவில் வணிக தளங்கள் நிறுவவேண்டிய அவசியம் இல்லை ,
விளம்பரத்திற்கான செல வும் மிக குறையே , சமுக இனைய தளங்களில் வாடிக்கையாளர்களே பொருள்களை பரிந்துரைகின்றனர்.
மாநில ரிதியான விற்பனை வரி வித்தியசதிலிருந்து தப்பித்து கொள்ளலாம் .
முதலீடுகள்  பங்குதாரர்கள் மூலம் பெறபடுகிறது .
மக்களை  கவரும் விதமாக மாய  சலுகை விளம்பரபடுத்த படுகிறது.
காலவரையாகும் பொருள்களை எளிதில்  விற்பதற்கு ஒரு சிறந்த ஊடகமாக உற்பத்தியாளர்களால் தேர்தெடுக்கபடுகிறது.
50 % மக்கள்  பொருள்களில் குறைபாடு இருந்தால் திரும்ப கொடுக்கும் சேவையை பயன்படுதுவதில்லை.
 
 
மொத்தத்தில் பார்க்கும் போது வருங்காலங்களில் மக்கள் ஆன்லைன் வர்த்தகத்தையே பெரிதும் விரும்புவார்கள்ம, பல வணிக நிறுவனங்கள் மூடபடலாம் அல்லது ஆன்லைன் சேவைக்கு மாறலாம் , இடைதரகு விலை குறைய வாய்பிருகிறது...

 

No comments:

Post a Comment