அலசல், புத்தகம், விமர்சனம்.

Saturday, 11 October 2014

அண்ணாச்சி என்னாச்சி ; அம்மா ஆட்சி


 "அண்ணாச்சி என்னாச்சி"

"என்னனு சொல்லுவேன்;ஆரம்ப காலத்தில தொழிலுக்கு புதுசு. அதன் மாட்டிகிட்டது, புடிச்சி உள்ளபோட்டபிறக்கும் தமிழ்நாட்ட விடாம ஆட்டுது."

"என்ன அண்ணாச்சி இப்படி சொல்லிறிங்க; கடைசி நடத்த எலைசன்ல கூட அமோக வெற்றி தான்னுங்களே "

"அதுதான் அண்ணாசி அம்மையாருக்கு ஆப்பா போச்சின்னு பேசிக்கிறாங்க, பிரதமர் ஆக ஆசைபட்டு முதல்வரும் போச்சி"

"பாவம் அண்ணாசி பொது மக்கள் பாடாய் படுறாங்க போக்குவரத்து பெரிசா பாதிக்குது."

"அது உண்மைதான் அண்ணாசி, ஆனா இப்ப கூட காட்சி காரங்க எலைசன் டைம் போல காசு செலவு பண்ணுறாங்களாம்."
 
"ஆமா அண்ணாசி கேள்ள்விபட்டேன், மொட்டை அடிச்ச 200ரூபா, ஊர்வலத்தில வந்த  100 ரூபா, உண்ணவிருததில கலத்துகிட்ட 500 ரூபா-னு  ஒரு லிஸ்றே வைச்சிருக்கன்களாம்."
 
"அது மட்டுமில்ல அண்ணாச்சி, இந்த தடவ பெரிசா பனிருக்காங்களாம்; தனியார் கல்வி நிறுவனக்கள மூட ஒரு ரேட்டு, தனியார் பஸ் நிறுத்த ஒரு ரேட்டுன்னு". 
 
"என்ன பண்ணியும் ஜமீன் கிடைக்கலையே ?"
 
"அது ஒண்ணுமில்ல அண்ணாச்சி  எதிர் தரப்பு தீர்ப்புல உறுத்திய இருக்காங்களாம்"
 
"இந்த சினிமா காரங்க சப்போர்ட் பண்ணுறதா தெரியுது, அதுவா நடிகிறவங்கனுக்கு சொல்லியா கொடுக்கணும், காசுதான் வாங்கமுடியாது. கடைசிவர கணக்கு  காட்டாம பணம் சம்பாதிக்கணும் இல்ல."
 
"இவங்க கலவரம் என்கிற பேருல பொது சொத்துகள நாசம் பண்ணுறத, ஆளும் கட்சின்னு யாரும் கேக்க மட்டேன்கிறான்களே ?"
 
"நீங்க வேற அண்ணாசி ஒரு போட்டவை கூட மாத்த பயருறாங்க அப்புறம் எப்படி கலவரத கட்டு படுத்துவாங்க; அதன் கூட்டம் கூடின ஊர்வலம்னு கிளம்பிருறாங்க"
 
"பொது சொத்துகள நாசம் பண்ற காட்சி ஏத இருத்தாலும்; அபராதம் விதிகணும்; கட்டலென்ன அடுத்த தேர்தல சம்மதபட்ட இடத்துல போட்டியிட தடைவிதிக்கணும்."
 
"இதெல்லாம் நடக்குங்களா அண்ணாசி; ஏதோ பொது மக்களுக்கு பாதிப்பு இல்லெனா  சரி, என்ன பண்ணியும் உபயெகம் இல்லாததால புதுசா பெட்டி மாத்திகிலாமுன்னு எதிர் தரப்போட பேசிகிறாங்களாம்."
 
"ஆமா அண்ணாச்சி கூடுதலா கொடச்சல் குடுத்த திகார் தான்னு கேள்வி பட்டாங்க போல; என்ன நடக்குமுன்னு பொறுத்திருந்து பாப்போம்."
 

No comments:

Post a Comment