அலசல், புத்தகம், விமர்சனம்.

Monday 13 August 2012

கல்வி-விற்பனைக்கு

     கல்வி  இன்றைய சூழ்நிலையில்  மிகப்பெரிய வியாபாரப் பொருளாகவே  காணப்படுகிறது.    சிறிய   குழந்தை   முதல் பெரியவர்கள் வரை கல்வியை விலைகொடுத்து வாங்கவேண்டிய நிலை உருவாகி உள்ளது.

 
உயர்கல்விக்காக     லட்சங்கள்     செலவுச்செய்த
காலம்மாறி   ஆரப்பக்கல்விக்கே  பலலட்சங்கள்  தேவைப்படுகிறது. அரசு  கல்வியை     தனியார்க
ளிடம் ஒப்படைத்ததின் விளைவாக தமிழகத்தில் இன்றுவரை   571 -- பொறியியல்        கல்லூரிகள் தொடக்கப்பட்டு உள்ளன.

       இதில் பல கல்லூரிகளில் போதிய வசதிகள் இல்லை.     பயிற்றுவிக்கும்        ஆசிரியர்களும்
முன்னனுபவம்  இல்லாத    தகுதியற்றவர்களா
கவே உள்ளனர்.  ஆசிரியர்  தேர்ந்தெடுப்பதிலும்
பணதிற்க்கே முன்னுரிமை    வழங்கப்படுகிறது.
பல ஆசிரியர்கள் பயிற்றுவிக்கும் முறைகளை கூட அறியாதவர்களாய் உள்ளனர்.

        தமிழகத்தில் பள்ளிகூடங்களில்  தொடக்கி கல்லூரிவரை கல்வி  விற்ப்
பனைக்கு  வைக்கப்பட்டுள்ளது.   ஆனால்  பல   வெளிநாடுகளில்   ஆரம்பக்
கல்வி    முழுவதும்    இலவசமாகவே   வழங்கப்படுகிறது.    தனியார்களால் நடத்தப்படும்  சில  கல்வி   நிறுவனங்களில் உலகத்தரம்     வாய்ந்தக்கல்வி வழங்கப்படுகிறது. இங்குள்ள ஆசிரியர்களும் திறமை வய்ந்தவர்களாகவே உள்ளனர்.       ஆனால்  இங்கு  கல்வி    பெறுவது        சாதாரண        மக்களின்
கனவாகவே உள்ளது.

  அரசுக்கல்வி நிறுவனங்களில் வேலை செய்யும் பலர் தங்கள் பணியை சரியாக செய்வதில்லை இதை அரசும் கண்காணிக்கவில்லை.இதனால்
அரசு வேலைக்காக முயற்சிப்பவர்கள் பலர்.



   அரசின் கண்காணிப்பு இல்லாததின் விளைவாக
சமிபகாலமாக கல்விநிறுவனங்களால்  மாணவர்
களின்   உயிரும்    பறிக்கப்பட்டுவருகிறது. பேருந்
துகளில்   அளவுக்கு  அதிகமாக       மாணவர்களை கொண்டு   செல்கின்றனர்.      விபத்து     ஏற்ப்படும்
போதும்  முறையான  விசாரணை  நடத்தபடாமல் பணத்தால் மூடப்படுகிறது .

     கல்விநிறுவனங்களின் மேல் கூறப்படும்  புகார்
களை வைத்து அதிகாரிகள் விலை பேசுகின்றனர்.

    தகுதியில்லத நிறுவனங்களில்  படித்து  வெளிவரும்  பலரும்   தகுதியில்
லாதவர்களாகவே உள்ளனர்.  இதுபோன்ற  தகுதியில்லாத       மருத்துவர்க
ளால்  உயிரிழப்பு  ஏற்ப்பட்டு   வருகிறது.      மருத்துவதுறையில்       மட்டும்
அல்ல மற்றதுறைகளிலும் இதேநிலை தான்  உள்ளது.


 மாணவர்களின்  முறையீடு: 

   "கல்லூரிகளில்  வாட்சிமேன்  முதல்  ஆபிசுல வேலப்பாகுறவன்    வர மாணவர்களை மிரட்டுகிறான்".

"பணிமுடியாத கட்டிடங்களின் கிழேதான்  வகுப்புக்களே நடத்துறக்க".

"கறுப்புபணத்த முதலிடு செய்யவே கல்லூரி ஆரம்பிக்கிரங்க"

"கல்லூரியில் நடக்கும் மனிதஉரிமை மீறல்களை பணத்தால மூடுறங்க"

   "ஆதிகரமே இல்லாத டம்மிங்கள கல்லூரி முதல்வர்கள் மற்றும்
ஆசிரியர்கள்"

"எப்படி வெள்ளசட்ட  போட்டவன் எல்லாம் நல்லவனில்லியே
அதேமாதிரி இப்போ கோட்டு போட்டவனும்".

"பணத்துக்காக கட்டாய தேவையில்லாத பயிற்சி வகுப்புக்கள்"

"10 ரூபா நோட்டு 30 ரூபா ;கேட்ட மார்க்  இல்ல".

"நூலகமிருக்கு பயன்படுத்த  அனுமதி இல்ல "

"கம்ப்யூட்டர் பீஸ் இருக்கு  பாட நேரம் தான் இல்ல".


எனக்கு பணம் உனக்கு பட்டம் இந்த நிலை மாறுமா?


                                                                                                                       



1 comment:

  1. கலைமகள் தனது மகனை சேர்க பள்ளி ஏறினாள்.. வீணை விற்று கட்டணம் கட்டி வீடு திரும்பினாள்...

    ReplyDelete