அலசல், புத்தகம், விமர்சனம்.

Tuesday 25 December 2012

மலையாளத்தில் ஒரு குடி மகனின் கதை

  ஸ்ப்ரிட் திரைப்படம் சமிபத்தில் பார்த்த படங்களில் குறிப்பிடக்கூடிய வகையில் அமைந்திருந்தது . மலையாளத்தில் இந்த வருடம் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் குடி மகனின் வாழ்க்கையை அடி ஏற்றி கதை திரைகதை அமைக்க பட்டிருந்தது.
  குடி குடியை கெடுக்கும் என்ற வாக்கியத்தை இரண்டரை மணி நேரம் வாழ்ந்து காட்டியிருந்தனர். பல உண்மைகளை தெளிவாக எடுத்துக்காட்டிய இந்தப்படம் சிலராது வாழ்க்கையிலாவது மாற்றங்களை ஏற்ப்படுத்தும் என்பதில் ஐயமில்லை . வசதிக்கேற்ப ஒவ்வொருவரின் பானங்களும் நாடமாடும் தோரணைகளும் மாறுபடலாம் ஆனால் பாதிப்பு போதுவனதகவே உள்ளது .
  குடி மகனின் சுயநிலையை எவ்வாறு ஆல்ககால் மறக்க செய்கிறது. தான் என்ற அகந்தையில் அவன் ஆடும் ஆட்டம் . குடும்பவாழ்க்கை சீர்குலைவது என ஓவ்வொன்றும் உண்மை முத்துக்கள். குடி மகனின் குழந்தைகளின் வாழ்க்கை கேள்விகுறி ஆக்கபடுகிறது.
      குடிப்பது தவற என வாதிடும் இந்த அத்திப்புத்தி சாலிகள் தன்னிலை மறப்பதை உணர்வதில்லை  போலும். குடிபோதையில் இவர்களின் அறியுதிறன் அளிக்கபடுகிறது. விட்டால் சமுதாயம் தவறு என் குறிப்பிடும் பல செயல்களை தவற என கேக்கவருவர்கள் .
அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு தான். அமுதமே அப்படி இருக்க ஆல்ககால் சும்மாவா. படத்தில் மோகன்லாலின் நண்பன் இறந்தவுடன் மோகன்லால் 
தெளிவடைவதாக 
சித்தரிக்கபட்டுள்ளது. உண்மையில் இதன் சத்தியம் குறைவே ஆனால் நடந்தால் உயிரிழந்த 
மனிதருக்கு  செய்யும் மரியாதையாக அமையும். ஆல்ககாலை மருந்தாக உட்கொள்பவருக்கும் விருந்தாக உள்கொள்பவருக்கும் வித்தியாசமில்லையா என்ன ?
  உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும் சுகந்திரம் உள்ளது. அது மற்றவரின் வாழ்கையை பதிப்பதை ஒரு போதும் ஏற்க்க முடியாது . அப்படி பாதிக்கும் நேரத்தில் அதை தடுத்து நிறுத்துவதே அரசின்கடமை அல்லது அதை வைத்து காசு பார்ப்பதில்லை. பல இடங்களில் காவலர்களும் கையுட்டு வாங்க குடியை காரணம் கட்டுவதையும் படத்தில் பதிவு செய்துள்ளனர்.
படத்தை பார்க்கும் புதிய தலைமுறையாவது குடிபழக்கத்திற்கு அடிமையகமலிருந்தால் அது இயக்குனருக்கு கிடைக்கும் வெற்றி... 

2 comments:

  1. விமர்சனம் அருமை, ஆனால் எனக்கு மலையாள படங்கள் பிடிப்பதில்லை, காஜல் அகர்வால் நடித்தால் ஒழிய!

    ReplyDelete
  2. ஷகில படம் எடுக்கத்தான் பணமிருக்கு அவங்ககிட்ட, நீங்க ரெம்ப எதிர்பாக்கி ரிங்க; காஜல் அகர்வால் நடிக்க பல ஓணங்கள் ஆகலாம்...

    ReplyDelete